அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம்.


அழியும் நிலையில் நெல்லையில் ஒரு கிராமம்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம், சந்தைப்பேட்டை. தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 150 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன.

பெரும்பால ஆண்கள் சென்னை போன்ற பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியை ஒட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக உறை கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் மூலமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த அ.இ.அ.தி.மு.க.ஆட்சியில் இங்கு மணல் குவாரி அமைக்க அனுமதிக்கப்பட்டதை த.மு.மு.க, தி.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நெல்லை மாவட்ட த.மு.மு.க. 11.02.2005 அன்று பொதுச் செயலாளர் ளு.ஹைதர் அலி தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரையும் ஒன்று திரட்டி பிரம்மாண்டமான ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து த.மு.மு.க.சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 16.03.2005 அன்று ஒரு வழக்கு (றுP ழே.3575 ழக 2005) தொடுக்கப்பட்டது. அரசியல் சாசன பிரிவு 21ன்படி அங்கு மணல் குவாரி அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். (43056ஃ1.ளுPடு.2ஃ2004.3ஃனயவநன 29.12.2004) நியாயமற்றது என த.மு.மு.க.தரப்பு வாதிட்டதின் அடிப்படையில் அன்றைய பொதுப்பணி துறை பொறியாளர் திரு.சண்முகசுந்தரம் உயர்நீதி மன்றத்தில் 10.02.2005 முதல் அக்குவாரி மூடப்பட்டதாக உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தார்.

சற்று காலம் ஓய்ந்திருந்த நிலையி;ல் சமீபமாக மீண்டும் அப்பகுதியில் மணல் திருட்டு துவங்கியுள்ளது. இதனால், சந்தைப்பேட்டை கிராமம், வெள்ளம் வரும் காலத்தில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது. இத்துடன் அருகில் உள்ள பொட்டல் பச்சேரி என்ற கிராமும் இதுபோன்ற அபாயத்திலேயே உள்ளது. பொட்டல் பச்சேரியில் தாழ்;த்தப்பட்ட சமுதாய மக்களின் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கும் இந்த உறை கிணறுகளையே பயன்படுத்தும் நிலையில் சில நபர்களின் சுய லாபத்திற்காக ஆயிரக்கணக்கான மனித உயிர்களோடு விளையாடும் இந்த அபாய போக்கிற்கு தமிழக அரசு உடனே முடிவு கட்ட வேண்டும்.



நெல்லை உஸ்மான் கான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு