ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைவாதியை சுட்டுத் தள்ளுவதுதானா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

தூய இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கும் ஜமாஅத்களின் மேன்மை தங்கிய முன்னணியினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

குர்ஆன் ஹதீஸ்கள் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசலானார்கள்.

கண்ணியத்திற்குரிய பெருந்தகையீர்! நீங்கள் அனைவரும் ஓரணியில் நின்று துவங்கிய தூய இஸ்லாமிய அழைப்புப் பணியின் மூலம் உண்மை இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக திரண்டனர். ஊர் வம்பையும் உலக வம்பையும் பேசிக் கொண்டிருந்த மக்கள் எங்கு நோக்கினும் குர்ஆன் ஹதீஸ்கள் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசலானார்கள்.

குர்ஆன் ஹதீஸ்களை மறக்கத் துவங்கி விட்டனர்.

முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நீங்கள் அணி அணியாகப் பிரிந்தீர்கள். நீங்கள் பிரிந்ததும் உங்களால் குர்ஆன் ஹதீஸ்களின் பக்கம் சிந்தனை திருப்பி விடப்பட்டவர்கள் உங்கள் வம்பையும் உங்களுக்குள் உள்ள வழக்கையும் பற்றி பேச ஆரம்பித்து குர்ஆன் ஹதீஸ்களை மறக்கத் துவங்கி விட்டனர்.

ஓன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி இப்படி அணி அணியாகப் பெருகிக் கொண்டு போன நீங்கள் ஓரணியாய் இருந்தபோது ஏற்பட்ட (தூய) எழுச்சியையும் அணி அணியாகப் போனதால் ஏற்பட்ட வீழ்ச்சியையும் பற்றி சிந்திக்கவே இல்லை.

விலை மதிப்பற்ற மாபெரும் பேரிழப்பை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்களின் பொன்னான நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவு செய்து மிகுந்த சிரமத்துடன் (சிங்கப்பூரிலிருந்து, துபை, தமிழ்நாடு என வந்து ரூபாய் இரண்டு லட்சத்துக்கும் மேல் செலவு பண்ணி) பெரு முயற்சி செய்தனர். (21-06-1992 அன்று துபை ஹயாத் ரீஜன்ஸி ஹோட்டல் ரூம் நம்பர் 1202இல் வைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.)

உங்களிடையே கூட்டணி ஏற்படுத்தினர்.

(உங்களுக்குள் உள்ள கொடுக்கல் வாங்கலில் ஒரு சாரார் இன்னொரு சாராருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன பணத்தை கொடுக்க வேண்டியதில்லை என்று முதல் சாரார் மறுத்த நிலையிலும் அவர்கள் கையிலிருந்து கொடுத்தனர். இப்படியெல்லாம் செலவு செய்து) 16-07-1992 அன்று (திருச்சி அரிஸ்ட்டோ ஹோட்டல் மீட்டிங் ஹாலில் வைத்து) உங்களை ஓரணியில் திரட்டினர். மன்னிக்கவும் (ஓரணியில்தான் வரமாட்டோம் என்று சொல்லி விட்டீர்களே! அதனால்) உங்களிடையே கூட்டணி ஏற்படுத்தினர்.

அல்ஹம்துலில்லாஹ் என்று நிம்மதிப் பெரு மூச்சு விடும் முன் உறவை முறித்துக் கொண்டீர்கள். உலக ஆதாயம் கருதி இணையும் அரசியல் கட்சிகளின் கூட்டணி கூட இவ்வளவு சீக்கிரத்தில் முறிந்தது இல்லை. ஈருலக நன்மையை நாடி உங்களிடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டணி? .. ..

கூட்டணி அமைக்கும் அரசியல் கட்சிகள் கூட்டணியின் பலனை கண்கூடாகக் காண்பதால் ஒரு அணி வரம்பு மீறினாலும் மற்ற அணி அதை சகித்துக் கொண்டு மழுப்பும். இதுவும் களத்தில் இறங்கி விட்டால் கூட்ணியில் இருக்கும் இன்னொரு அணி அவர்களிடையே சமாதானம் செய்து வைக்கும். இது எந்நாளும் நடந்து வரும் ஒன்று.

நீங்கள்தானே பிரச்சாரம் செய்தீர்கள்.

ஈருலக நன்மை மீது ஈமான் கொண்டுள்ள உங்களில் ஒருவர் மனிதன் என்ற முறையில் தவறு செய்து விட்டால் "ஒப்பந்தத்தை முறித்து விட்டார். வரம்பு மீறி விட்டார்" எனவே நாங்களும் அப்படியே (ஒப்பந்தத்தை முறித்து வரம்பு மீறுவோம்) என்று நடந்து கொள்வது சரிதானா? முறைதானா? தீமைக்கு தீமை பரிகாரமாகாது. மனிதன் தவறுக்கு அப்பால்பட்டவன் அல்ல என்றும் நீங்கள்தானே பிரச்சாரம் செய்தீர்கள்.

நீங்கள் அனைவரும் உங்கள் மீதுள்ள கடமையைச் செய்ய தவறி விட்டீர்கள்.

பெருமதிப்பிற்குரியவர்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் வரம்பு மீறியதாக குற்றம் சுமத்துகிறீர்கள். உங்களில் யார் முதலில் வரம்பு மீறினார்கள் என்று எழுத விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் உங்கள் மீதுள்ள கடமையைச் செய்ய தவறி விட்டீர்கள் என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பேசி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

ஆகஸ்ட் அந்நஜாத் மூலம் K.M.H. வரம்பு மீறி விட்டார். ஒப்பந்தத்தை முறித்து விட்டார் என்று வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். J.A.Q.H.யினர் என்ன செய்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட உறவின் உரிமையுடன் K.M.H.யிடம் நேரில் சென்று தவறை சுட்டிக் காட்டி இருக்க வேண்டும். ஏற்பட்ட மன வருத்தத்தை நேரில் வெளிப்படுத்தி இதனால் மீண்டும் பிரச்சனை வந்து விடா வண்ணம் பேசி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். இந்தக் கடமையை J.A.Q.H.யினர் செய்யத் தவறி விட்டனர்.

தன்னிலை விளக்கத்தை இன்னும் இதமாகக் கூறி இருக்க வேண்டும்.

K.M.H. கூற்றப்படி ஒப்பந்தம் மீறல் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆகஸ்ட் அந்நஜாத் இதழைக் கண்டு J.A.Q.H.யினர் வருத்தத்திற்குள்ளாகி விட்டதால் K.M.H. என்ன செய்திருக்க வேண்டும். வருத்தத்திற்குள்ளாகி விட்ட சம்பந்தப்பட்ட சகோதர அணியினரை நேரில் சந்தித்து அக்டோபர் இதழில் பக்கம் பக்கமாக எழுதிய தன்னிலை விளக்கத்தை இன்னும் இதமாகக் கூறி இருக்க வேண்டும்.

தன் கடமையில் தவறி விட்டார்.

இதற்குப் பிறகும் வரம்பு மீறியதாக அவர்கள் கூறினால் இஸ்லாஹை கருதி நான் ஒப்பந்தத்திற்கு உட்பட்ட செயல்தான் என்று எண்ணியே எழுதினேன். ஒப்பந்தத்திற்கு மீறிய செயல் என்றுமனமறிந்து எழுதவில்லை. உங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் வருந்துகிறேன். இவ்வாறு வருத்தம் தெரிவித்துபிரச்சனை எழாமல் முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம். இந்த வகையில் K.M.H தன் கடமையில் தவறி விட்டார்.

இந்தக் கடமையை மற்றவர்கள் செய்ய தவறி விட்டார்கள்.

K.M.H, J.A.Q.H. அணிகள்தான் மோதிக் கொண்டன என்றால் மற்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவர் அப்படித்தான் இவ்வளவு காலமாக நான் சொல்லி புரியாதவர்கள் அனுபவ ரீதியாக இப்பொழுது அனுபவிக்கிறீர்கள் என்று (சொல்லி இருக்கக் கூடாது. அப்படி) சொல்லாமல், எத்தனை தடவை ஒற்றுமை படுத்தினோம். ஏவ்வளவு கஷ்டப்பட்டு பொருள் நஷ்டப்பட்டு ஒற்றுமை படுத்தினோம் என்று எண்ணாமல் அலுத்துக் கொள்ளாமல் இறையருளை நாடி 49:9ஆவது வசனப்படி சமாதானம் செய்து வைத்திருக்க வேண்டும். இந்தக் கடமையை மற்றவர்கள் செய்ய தவறி விட்டார்கள்.

பகைமைக்கு வித்திட்டு விட்டீர்கள்.

மனிதன் என்றால் தவறு ஏற்படத்தான் செய்யும் என்று மூச்சுக்கு மூச்சு பிரச்சாரம் செய்பவர்கள் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள் ஒருவர் பத்திரிக்கையில் எழுதி விட்டார் என்ற காரணம் காட்டி மாநாட்டு மேடையில் பேசினீர்கள். மேடையில் பேசி விட்டார் என்ற காரணம் காட்டி பத்திரிக்கையில் எழுதினீர்கள். மொத்தத்தில் அவரவர் பங்குங்கு ஒப்பந்தத்தை முறித்து விட்டீர்கள். பகைமைக்கு வித்திட்டு விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும்.

உங்களுக்குள் யார் பெரியவன் என்ற பதவிச் சண்டை.

நீங்கள் அனைவரும் பட்டம் பதவிக்காகவே புதியதோர் கொள்கையைச் சொல்வதாக பாமர மக்களிடம் அவதூறு பரப்பி வந்தவர்கள் இப்பொழுது உங்களுக்குள் யார் பெரியவன் என்ற பதவிச் சண்டை நடப்பதாக பேசி வருவது உங்கள் காதுகளில் ஒலித்து இருக்கும்.

சதா உங்களைப் பற்றி பேசச் செய்து விட்டீர்கள்.

நீங்கள் ஓரணியாய் இருந்தபோது குர்ஆன் ஹதீஸ் கிரந்தங்களையும் அறிவிப்பாளர்களையும் பற்றி மக்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். நீங்கள் பிளவுபட்டு பிறகு கூட்டணி அமைத்து பிறகு பிரிந்து விடும் பணியால் குர்ஆன் ஹதீஸ் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்த மக்களை திசை திருப்பி சதா உங்களைப் பற்றி பேசச் செய்து விட்டீர்கள்.

ஷய்த்தான் உங்களிடையே சூழ்ச்சி செய்து விட்டான்.

நீங்கள் ஓரணியாய் இருந்தபோது ஜமாஅத் வளர்ச்சிக்குரிய அடுத்த கட்ட பணி என்ன என்பது பற்றி சிந்தித்து செயல்பட்டீர்கள். இதை பொறுக்க முடியாத ஷய்த்தான் உங்களிடையே சூழ்ச்சி செய்து விட்டான். இதனால் ஜமாஅத்தின் வளர்ச்சிப் பணி பற்றி சிந்திக்காமல் உங்களுக்குள் உள்ள விவகாரம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமைக்குள்ளாகி விட்டீர்கள்.

அவர்களை ஒன்றுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வீணானது.

இந்நிலையில் இனிமேல் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் கூட்டணியால் பிரச்சனைதான் அவரவர் வழியில் அவரவர்கள் செல்லட்டும். அவர்கள் கூட்டணியாகவும் செயல்பட மாட்டார்கள். ஓரணியாகவும் சேரமாட்டார்கள். எனவே அவர்களை ஒன்றுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வீணானது என்று விரக்தியின் மேலீட்டால் சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

நீங்களும் இனி சமரச முயற்சி தேவை இல்லை. ஒற்றுமைக்கு வழியே இல்லை. இனிமேல் தனி நபர் பிரச்சனைகளை மேடையில் பேச மாட்டோம்.. பத்திரிக்கையில் எழுத மாட்டோம் என்று தாங்கள் முடிவு எடுத்துள்ளீர்கள்.

ஷய்த்தான்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

நிச்சயமாக இது நடக்காத காரியம். அனைவரும் மனக் கசப்புகளைக் களைந்து ஓரணியில் ஆனால்தான் ஒருவருக்கொருவர் விமர்சிக்கும் நிலை நீங்கும். மற்றவர்கள் விமர்சித்தாலும் இலட்சியப் பிணைப்பும் உறவும் உரிமையுடன் விமர்சித்தவரை கண்டிக்கச் செய்யும் நல்ல உயரிய நிலை உருவாகும். இல்லையெனில் என்னதான் எழுத மாட்டோம் என்றாலும், நமது பிரிவைப் பயன்படுத்தி ஷய்த்தான் மூட்டி விடும் கோள்களினால். இரத்தம் சூடேற்றப்பட்ட நிலையில் நேரடியாகவே பேசிவிடலாம். நேரடியாகப் பேசாவிட்டாலும் மறைமுகமாகப் பேசலாம் எழுதலாம். இன்னும் பொறுமையுடன் மறைமுகமாகக் கூட விமர்சிக்காது இருந்தால் ஷய்த்தான்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

"பேச்சாளரின் கற்பனையில் கூட வராததை கூறுகிறார்களே"

(உ-ம்) சமீபத்தில் (துபை வந்த) ஒரு மவுலவி (ஹாமித் பக்ரி) முனாபிக்குகளின் அடையாளங்கள் பற்றி பேசினார். உடனே (ஐ.ஏ.ஸி. என்ற) ஒரு சாரார் "ஹஜரத் (ஹாமித் பக்ரி) இன்னவரை ((K.M.H.ஐ) கடுமையாகச் சாடி விட்டார். அந்தக் குரூப்பின் முகங்கள் கறுத்து விட்டன. அவர் (மீரான்) முகத்தில் ஈயாடவில்லை" என்று பேசினார்கள். இதைக் கேட்ட அந்த மவுலவி (ஹாமித் பக்ரி) "பேச்சாளரின் கற்பனையில் கூட வராததை கூறுகிறார்களே" என்று கூறி வருந்தினார்.

எண்ணத்தளவில் நல்ல மன வண்ணத்தளவில் ஒன்றிணைவீர்.

இதுபோல் நீங்கள் எண்ணிக் கூட பார்க்காது பேசியவைகளுக்கும் எழுதியவைகளுக்கும் ஷய்த்தான்கள் சயாம் பூசுவார்கள். நீங்கள் ஒன்றிணையாதவரை உங்களுக்குள் ஷய்த்தான் மூட்டி விட்டுக் கொண்டேதான் இருப்பான். மனக் கசப்புகளை மனம் விட்டுப் பேசி தீர்த்து நீங்கள் ஓரணியில் திரண்டு விட்டால். அல்லாஹ் அருளால் நீங்கள் ஆற்றக் கூடிய பணிகளை எழுதவும் முடியுமா? ஆகவே ஏட்டளவில் எழுத்தளவில் ஒன்றிணையாது, எண்ணத்தளவில் நல்ல மன வண்ணத்தளவில் ஒன்றிணைவீர். ஈருலகிலும் வெற்றி பெறுவீர். வஸ்ஸலாம்.

கடைத் தெரு காய்கறிகள் போல் முஸ்லிம்களை கூறு கூறாக ஆக்கி விட்ட சுட்டுத் தள்ளப்பட வேண்டிய சமுதாய துரோகி எனப்படுபவரை கடுமையாக விமர்சித்து நாம் எழுதி வருவதை அறிவீர்கள். ஒற்றுமைக்காக 1986 ஜுனிலிருந்து பல முயற்சிகளை செய்ததுடன் ஏராளமான கடிதங்களை நமது கைப்பட எழுதி இருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் மேற்கண்ட ஒற்றுமைக் கடிதம். இது 1992 நவம்பரில் அனுப்பப்பட்டது.

சத்திய மார்க்கம் டாட் காம்மில் ஒற்றுமை பற்றி வந்துள்ள கட்டுரைகளை ஒட்டி நமது கருத்துக்களையும் எழுதுமாறு நமது நண்பர் ஒருவர் அவற்றை தொகுத்து மெயில் அனுப்பி இருந்தார். புதிதாக எழுதினால் காரணம் கற்பிக்கப்படலாம். எனவே பழையதையே தந்துள்ளோம். கைப்பட எழுதப்பட்டதைக் காண இதை கிளிக் செய்யவும். http://mdfazlulilahi.blogspot.com/1992_11_01_archive.html http://mdfazlulilahi.blogspot.com/1992/11/blog-post.html

H. அப்துஸ்ஸமது, அபூ அப்துல்லாஹ், K. முஹம்மது இக்பால் மதனி, P. ஜெய்னுல் ஆபிதீன், S.K. ஷம்சுத்தீன், K. முஹம்மது கவுஸ், ஹஸன் இக்பால், S. கமாலுத்தீன் மதனி, A. முஹம்மது ஹனீபா, A. முஹம்மது அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டு செய்த அந்த ஒற்றுமை உடன்படிக்கை வாசகத்தை அப்படியே தருகிறோம் படித்துப் பாருங்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

16.7.92 வியாழன் அன்று திருச்சி "அரிஸ்ட்டோ" ஹோட்டல் மீட்டிங் ஹாலில் நடை பெற்ற கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

1) துபாய் I.A.C மற்றும் அந்நஜாத் வரவு செலவுக் கணக்கு சம்பந்தமாக துபாயில் இரு சாராரும் சகோதரர் சிங்கப்பூர் M.A. தமீம் சகோதரர் சிங்கப்பூர் M. அப்துல் ஸலாம் ஆகிய இருவரையும் நடுவர்களாகக் கொண்டு தீர்மானித்தபடி கீழ் வரும் அறிக்கையை அந்நஜாத்திலும் அல் முபீனிலும் (இன்றைய ஏகத்துவம்) வெளியிட வேண்டும். இவ்வறிக்கை இவ்விரண்டு பத்திரிக்கைகளிலும் பிரசுரிகப்பட்ட மறுமாதம் அல்ஜன்னத் (ஆசிரியர் பி.ஜெ.) இந்த அறிக்கையை வெளியிட்டு அது குறித்து மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டும். 21.6.92 துபாய் ஹயாத் ரீஜன்ஸியில் சிங்கப்பூர் தமீம், சிங்கப்பூர் அப்துல் ஸலாம் முன்னிலையில் அந்நஜாத் I.A.C. கொடுக்கல் வாங்கல் கணக்கு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் இரு சாராரும் இணைந்து பரிசீலித்து சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரப் பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்நஜாத் சார்பில் அபூ அப்துல்லாவும் I.A.C. சார்பாக இக்பால் மதனியும் இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை மனமாற ஏற்றுக் கொண்டதாக கையொப்பமிடுகிறார்கள்.


2) அல் ஜன்னத் (ஆசிரியர் பி.ஜெ.) அந்நஜாத் (ஆசிரியர் அபுஅப்துல்லாஹ்) அல்முபீன் (ஆசிரியர் இக்பால் மதனி) ஆகிய மூன்று (பேர்) பத்திரிக்கைகளுக்கிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக பொதுமக்கள் வீண் குழப்பங்களுக்கு ஆளாகாமல் தவிர்க்க, இனி இங்கே குறிப்பிடப்படும் விதி முறைகள் மேற்கொள்ளப்படும். ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்படும் கருத்தைப் பற்றி மற்றொரு பத்திரிக்கை மாறுபட்ட கருத்து கொள்ளுமானால் அதை ஆதாரத்தோடு எழுத்து மூலமாக முதல் பத்திரிக்கைக்கு அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் முதல் பத்திரிக்கை தான் எழுதியது தவறு எனக் கண்டால் அதைப் பற்றிய திருத்தம் அடுத்த மாத இதழில் வெளியிட வேண்டும். சகோதர பத்திரிக்கை அறிவித்து தான் பிரசுரிப்பதாக இரு சாராரும் காட்டிக் கொள்ளக் கூடாது. தவறைச் சுட்டிக் காட்டி எழுதிய கடிதத்திற்கு, பதில் இரு மாதங்களுக்குள் வரவில்லையானால் சகோதரப் பத்திரிக்கை தன் கருத்தை தன் பத்திரிக்கையில் எவ்விதமான தனி நபர் விமர்சனம் இன்றி வெளியிடலாம்.. கருத்து வேறுபாட்டை எழுத்து மூலமாகத் தெரிவிக்கா விட்டால் அதைப் பற்றி விமர்சிக்கக் கூடாது. இந்த ஒப்பந்தத்திற்கு முன் கடந்த கால இதழ்களில் எழுதப்பட்ட விசயங்கள் சம்பந்தமாக ஒரு பத்திரிக்கை திரும்ப எழுதுமானால் அது ஒரு புதிய கருத்தாகவே கருதப்பட்டு மேற்கூறப்பட்ட நிபந்தனைப்படி செயல்படுத்தப்பட வேண்டும்.


3) ஒவ்வொரு பத்திரிக்கையிலும் மற்ற இரண்டு பத்திரிக்கைகள் பற்றிய விளம்பரங்களை உள்பக்க அட்டையில் தலா அரைப் பக்கம் வெளியிட வேண்டும்.


4) அல் ஜன்னத் பத்திரிக்கை அல் முபீன் மற்றும் அந்நஜாத் பற்றியோ, அந்நஜாத் பத்திரிக்கை அல் முபீன் மற்றும் அல் ஜன்னத் பற்றியோ, அல் முபீன் பத்திரிக்கை, அந்நஜாத் அல் ஜன்னத் பற்றியோ கருத்துக்களை விமர்சிக்க நேரிட்டால் கருத்தை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டுமேயல்லாது கருத்தைச் சொன்ன தனி நபரையோ பத்திரிக்கையையோ குறிப்பிடுவதும் நோரடியாகவோ மறைமுகமாகவோ தன் பெயராலோ மற்றவர் பெயராலோ விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

5) மூன்று பத்திரிக்கைகள் சம்பந்தமாக தனி மனித விமர்சனம் எந்த வகையிலும் எழுதப்படாமல் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.


சிறு பிள்ளைகளுக்கு மத்தியில் சமரசம் செய்வது போல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் சமாதானம் ஆகி விட்டால் நல்லவர்களுக்கு மகிழ்ச்சி தானாக வரும். இங்கே மறுமாதம் அல்ஜன்னத் (ஆசிரியர் பி.ஜெ.) இந்த அறிக்கையை வெளியிட்டு அது குறித்து மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மூலமே மகிழ்ச்சி வந்தது போல் காட்ட வைக்கப்பட்டுள்ளது.

இன்றும் அவரது பத்திரிக்கைகளிலே காணலாம்.

நோரடியாகவோ மறைமுகமாகவோ தன் பெயராலோ மற்றவர் பெயராலோ விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம், அப்பொழுதே மறைமுகமாகவும் மற்றவர் பெயராலும் விமர்சிக்கக் கூடிய கீழ்த் தரமானவராகத்தான் தவ்ஹீது வியாபாரி; இருந்துள்ளார் என்பதற்கு ஆதாரமாகும். இந்த கீழ் தர செயல்களை இன்றும் அவரது பத்திரிக்கைகளிலே காணலாம்.

தவ்ஹீதுவாதிகளின் ஒற்றுமையே உன் விலை என்ன?

குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்று சொன்னவர்களிடையே மேற்கண்ட ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தபொழுது குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரகர்களில் ஒரு சாரார் இன்னொரு சாராரை நோக்கி பணம் தர வேண்டியதிருக்கிறது என்றார்கள். கொடுக்க வேண்டியதில்லை என்று மறு சாரார் மறுத்தார்கள். இருந்தாலும் சமாதான முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கையிலிருந்து குறிப்பிட்ட ஒரு வகைக்காக ரூபாய் 54,000மும் இன்னொருவர் குறிப்பிட்ட வேறொரு வகைக்காக ரூபாய் 21,593.75மும் தனிப்பட்ட முறையில் தங்கள் கையிலிருந்து கொடுத்து சமாதானம் செய்து வைத்தனர்.

இதற்கு தவ்ஹீதுவாதிகளின் ஒற்றுமையே உன் விலை என்ன? என்று தலைப்பை நீங்கள் வைத்துக் கொண்டாலும் பொருந்தும். 2 பேர் சிங்கப்பூரிலிருந்து, துபை வந்து முகாமிட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தி. பிறகு துபையிலிருந்து தமிழ்நாடு என வந்து ரூபாய் இரண்டு லட்சத்துக்கும் மேல் செலவு செய்து ஏற்படுத்திய இந்த ஒற்றுமை ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.

சமது சாகிபுக்கு பத்வாவும் கொடுத்தார்.

சமது சாகிபும் லத்தீப் சாகிபும் சண்டையிட்டு பிரிந்தபொழுது ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைக்கு காரணமான சமுதாய துரோகியை சுட்டுத் தள்ளுவதுதான் என்று கூறியவர்தான் தவ்ஹீது வியாபாரி. அதற்காக சமது சாகிபுக்கு பத்வாவும் கொடுத்தார். எனவே தவ்ஹீது வியாபாரியின் கூற்றுப்படி ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைவாதியை சுட்டுத் தள்ளுவதுதானா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்போம்.

சமுதாய இளைஞர்களை வழி கெடுத்தவர்கள்.

தவ்ஹீது வியாபாரியின் தவறான வழி கட்டுதலால் ஜிஹாது என்று சென்றவர்கள், சட்டத்தை கையிலெடுத்தவர்கள் 10 ஆண்டுகளாக ஜாமீன் கூட கிடைக்காமல் சிறையில் வாடினார்கள். இப்பொழுது மேலும் 2 ஆயுள் 3 ஆயுள் என தண்டனை பெற்றுள்ளார்கள். மார்க்கத்தின் பெயரால் சட்டத்தை கையிலெடுக்க வழி காட்டியவர்கள், சமுதாய இளைஞர்களை வழி கெடுத்தவர்கள் உல்லாசமாக சல்லாப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒற்றுமைக்கு ஒரே வழி இறையச்சம்தான்.

ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைவாதியை சுட்டுத் தள்ளுவதுதான் என்று சொல்லும்போது கவர்ச்சியாக இருக்கும். இளம் ரத்தங்களுக்கு எழுச்சியான வார்த்தையாகத் தோன்றும். அதனால் மேலும் மேலும் சீரழிவுதான் ஏற்படும். நான் என்ற அகம்பாவம், பெருமை, சுயநலம், பதவி ஆசை, பொறாமை போன்றவைகளால்தான் பிரிவினைகள் ஏற்படுகின்றன. எனவே ஒற்றுமைக்கு ஒரே வழி தக்வா எனும் இறையச்சம்தான். தக்வா எனும் இறையச்சம் பெருமையை விரும்பாது சுயநலத்தை ஏற்படுத்தாது. நான் என்ற அகம்பாவத்தை உண்டு பண்ணாது. பதவி ஆசையை வர வழைக்காது.

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து (தக்வாவுடன்) நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து (தக்வாவுடன் நடந்து) கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்ர்ஆன் 4:1)

Comments

mr.fazlil elahi, assalamu alailum,neengal adhavadu tmmk....ungaladithal thowheed illai....shirk vaippavargalidathil neengal arasiyal laabathirkaaga ondru serndu vitteergal....neengal annaacharangalukku edhiraaga kural koduppathillai...namadu muslimgal shirk seydu islathai vitte veliyeriu kondu erukkiraargal...aanaal neengal adhai ellam kandu kolvadillai....verumane arasiyal nadathi kondu erukkireergal....
my name:mohamed sirajul muneer
place:valuthoor(thanjai dist)
mobile;9944126922(pls contact me ..i want to ask lot of questions
mr.fazlil elahi, assalamu alailum,neengal adhavadu tmmk....ungaladithal thowheed illai....shirk vaippavargalidathil neengal arasiyal laabathirkaaga ondru serndu vitteergal....neengal annaacharangalukku edhiraaga kural koduppathillai...namadu muslimgal shirk seydu islathai vitte veliyeriu kondu erukkiraargal...aanaal neengal adhai ellam kandu kolvadillai....verumane arasiyal nadathi kondu erukkireergal....
my name:mohamed sirajul muneer
place:valuthoor(thanjai dist)
mobile;9944126922(pls contact me ..i want to ask lot of questions

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு