Posts

Showing posts from July, 2007

கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது?

ஆகா அருமையான தவ்ஹீதுவாதிகள் . கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜாக்குக்கு சொந்தமானதுதான் என 3.7.07 அன்று தென்காசி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. சட்டத்தின் துணையுடன் முறையாக மீட்கும் நிகழ்ச்சி 29.7.07 அன்று நடைபெற்றது. ஜாக் மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி இஷா பாங்கு சொன்னார்கள். இஷா தொழுகை முடிந்ததும் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதன் மூலம் த.த.ஜ.விடமிருந்து கடையநல்லூர் ஜாக் பள்ளி மீட்கப்பட்டு ஜாக் நிர்வாகத்தின் கீழ் வந்தது. பள்ளிவாசல் மீட்பு சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணி முதல் இஜ்திமா நடத்த திட்டமிட்டிருந்தார்கள். த.த.ஜ.வினர் காலை 10 மணிக்கே கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களையும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி மாணவிகளை பள்ளி உள்ளே கொண்டு வந்து வைத்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தனர். பொறுமையுடனும் நிதானத்துடனும் காவல் துறை அதிகாரிகளின் சீரிய ஒத்துழைப்புடனும் மீட்புப் பணி நடந்தது. ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என ஜும்ஆ நடந்து வந்தது. ஈராண்டுக்கு முன் முழுமையாக அபகரித்தது த.த.ஜ. கோர்ட்டு தீர்ப்பு உண்மையான உரிமையாளர்களா...

இன்று முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை.

அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை. கண்ணியத்திற்குரிய அப்துல் ஹலீம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சென்னை, பெரம்பலூர், நக்கசேலம், கும்பகோணம், சோழபுரம் என துபை நண்பர்களை சந்திக்கச் சென்று விட்டு 22.7.07 அன்றுதான் ஊர் வந்தேன். முபாஹ(ப)லா??? என்ற தலைப்பிட்டு ரஸ்மி எழுதியுள்ளதை பார்வேடு செய்திருந்தீர்கள். இன்று முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை. பி.ஜெ. களவாடிய உணர்வு 2007 மே 4-10 இதழ் பக்கம் 17இல் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்களது முபாஹலா அழைப்பு சம்பந்தமாக விருதுநகர் சிக்கந்தர் என்பவரது கேள்வி உள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள திருவளத்தான் பி.ஜெ. (இன்று) முபாஹலாவுக்கு எந்த ஒப்பந்தமும் தேவை இல்லை என்று எழுதி உள்ளார். அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை. அதே திருவளத்தான் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு நாம் தயார் என்றோம். அப்பொழுது முபாஹலாவுக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. முபாஹலாவுக்கு ஒப்பந்தம் செய்ய வாருங்கள் என்றே எம்மை அழைத்திருந்தார். அதாவது அன்று முபாஹலாவுக்கும் ஒப்பந்தம் தேவை என்று எழுதி இருந்தார். இதை பி.ஜெ. களவாடிய உணர்வு 2005 செப்டம்பர் 9-15 இதழில் பகிரங்க அழைப்பு என்ற ...

ஹஜ்ரத்தை அழைத்தால் தனிமனித வழிபாடு. அண்ணனை அழைத்தால்? சுன்னத் ஜமாஅத் செய்தால் பித்அத் தவ்ஹீதி செய்தால்?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பித்அத்கள் அனைத்தும் வழி கேடுகள். வழி கேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும். பித்அத்காரனின் அமல்கள் அழிந்து போகும். போன்ற ஹதீஸ்களை எடுத்துக் கூறி சுன்னத் ஜமாஅத்தினர் செய்து வரும் பித்அத்களை செய்யக் கூடாது என்று கூறி வருகிறோம். பித்அத்கள் நடக்கும் இடம் அல்லாஹ்வின் பள்ளிவாசலாக இருந்தால் அந்த அல்லாஹ்வின் பள்ளிவாசலையே புறக்கணிக்க வேண்டும் என்று கூறி அல்லாஹ்வின் பள்ளிவாசல்களையே புறக்கணிக்கக் கூடியவர்கள் பெருகி விட்ட காலம் இது. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களையே புறக்கணிக்கக் கூடியவர்கள் தங்களுக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் தவ்ஹீது ஜமாஅத். கடவுளை வணங்கினால் அங்கு காணிக்கையும் செலுத்த வேண்டும். இப்படி தங்களுக்கு தாங்களே தவ்ஹீதுவாதிகள் என பெயர் சூட்டிக் கொண்ட அவர்களே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களிலே பித்அத்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  தினமும் சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் (தர்ஜுமா) மொழி பெயர்ப்பு. இஷாவுக்குப் பின் புகாரி தர்ஜுமா மொழி பெயர்ப்பு படிப்பது.  திருமணங்களை பள்ளிவாசல்களில் வைத்து ...

குத்பிய்யத் சம்பந்தமான அந்த முபாஹலா.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்து வரும் பி.ஜெ.யானிகள் அனைவருமே இறை வேதம் அல் குர்ஆனின் 3:61 ஆவது வசனத்தைத்தான் ஆதாரமாகக் காட்டி வருகிறார்கள். இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நஜ்ரான் நாட்டு கிறிஸ்தவர்கள் ஈஸா(அலை) அவர்களின் பிறப்பு பற்றி இஸ்லாம் சொல்லும் கருத்துகளுக்கு மாற்றமான தவறான கூற்றுகளை கூறி வந்தார்கள். எனவே கிறிஸ்தவர்களின் தவறான கூற்றுக்கு மாற்றமான ஈஸா(அலை) அவர்களின் சரியா...

பாக்கருக்கும் நந்தினிக்கும் விளக்குப் பிடித்தவர் பி.ஜெ. பீ.ஜே.க்கு விளக்குப் பிடித்தவர்கள் ததஜ மவுலவிகளா