மணாளர் காதர் முஹைதீன். மணாளி சுமையா
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும்
புரட்சித் திருமண அழைப்பிதழ்.
புரட்சித் திருமண அழைப்பிதழ்.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி, இன்ஷh அல்லாஹ் ஹிஜிரி1428 ரபிய்யுல் ஆகிர் பிறை 18 (06-05-2007) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 102. செய்குல் அக்பர் தெரு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் மகனும் எனது மைத்துனருமாகிய S.A. காதர் முஹைதீன் மணாளர் J.A.Q.H. மேலப்பாளையம் முன்னாள் செயலாளர் தண்டன் Nஷக் மன்சூர், சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகள் T.S. சுமையா மணாளியை ரூபாய் 10,000 பெறுமான தங்க நகையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொள்கிறார்.
இத்திருமணத்தின் சிறப்பம்சங்கள்.
திருமணத்தின் போது வரதட்சணை என்ற பெயராலும், திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயராலும் பெண் வீட்டாரிடம் பணம், பொருள்கள் கேட்டு வாங்கக் கூடாது. இந்த உயரிய கொள்கையுடன்தான் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு மஹர் நகை வழங்குகிறார்.
இது மட்டுமன்றி வரதட்சணை கொடுமைகள் வளர்ந்தோங்க காரணமாகிய அனாச்சாரங்களான பூ மாலைச் சோடனைகள், அலங்கார ரத ஊர்வலம், கொட்டு மேளம், வான வேடிக்கைகள், ஆடல், பாடல் கச்சேரிகள், நடத்துதல் போன்ற ஆடம்பரங்கள் இத்திருமணத்தில் இருக்காது.
பந்தக்கால் ஊன்றுதல், வாழை மரம் நடுதல், ஆரத்தி எடுத்தல், தாலி கட்டுதல், கருமணி கட்டுதல், அர்த்தமற்ற குலவை இடல், தேங்காய் உடைத்தல், இனி பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு அடிமை என்பதை உணர்த்த செய்யும் மாப்பிள்ளையின் கால்களை பெண்ணின் சகோதரன் கழுவுதல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களும் இத்திருமணத்தில் நடை பெறாது.
இச்சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த திருமண நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி J.S.. ரிபாஈ அவர்கள் சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள். இன்ஷhஅல்லாஹ் நடை பெற இருக்கும் திருமண நிகழ்ச்சிக்கு தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து மணமக்களை மாநபி வழியில் வாழ்த்திட வேண்டுகிறேன்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி
55.சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம் - 627005
ஒரே ஆத்மாவிலிருந்து
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்கு பயந்து (தக்வாவுடன் நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான் - அல்குர்ஆன். 4:1 (அத்தியாயத்தின் பெயர் பெண்கள்)
கனிவு.
நீங்கள் உங்கள் மனைவியரிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்... என்கிறது அல்குர்ஆன். அத்தியாயத்தின் பெயர் பெண்கள். வசன எண் 4:19
மஹர் தொகை
நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய "மஹர்" (எனும் திருமணக் கொடை)களை மனமுவந்து கொடுத்து விடுங்கள். என்கிறது அல்குர்ஆன்.
அத்தியாயத்தின் பெயர் பெண்கள் வசன எண் 4:4. -
திரும்பப் பெறலாகாது.
நீங்கள் ஒரு பொற்குவியலையே அவர்களுக்கு மஹராக கொடுத்திருந்தாலும் அதனை திரும்பப் பெறலாகாது. என்றும் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அத்தியாயத்தின் பெயர் பெண்கள். வசன எண் 4:20
திருமண ஒரு ஒப்பந்தம்
அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளார்கள் (அல்குர்ஆன் 4:21)
உங்களில் சிறந்தவர்கள்
நல்ல குணம் கொண்டவர்களே ஈமானில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள், தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) ஆதாரம் அஹ்மத்,திர்மிதீ.
என்னனைச் சார்ந்தவனல்ல.
திருமணம் எனது வழி முறை (சுன்னத்) யார் எனது வழி முறையை (சுன்னத்தை) புறக்கணிக்கிறாரோ அவன் என்னனைச் சார்ந்தவனல்ல. – என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். . (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
குறைந்த செலவு
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத்)
வலீமா விருந்து
நபி (ஸல்) அவர்கள் சபிய்யா(ரலி)வை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீத்தம்பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
திருமண வாழ்த்து
நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும் போது, 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்' என்று கூறுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா)
Comments