சத்திய முழக்கம் (மூன்றாம் பகுதி)

குமரி மாவட்டம் கோட்டாரில் 18-7-86, 19-7-86 ஆகிய இரு தினங்கள் 'முனாழரா' என்னும் விவாத அரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்ததை தமிழ் கூறும் முஸ்லிம்களில் அநேகர் அறிவர்.

தவ்ஹீத் அணிக்கும், பரேலவி அணிக்கும் இடையே இந்த விவாதம் நடந்தது. தவ்ஹீத் அணியின் சார்பில்
(1) கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,
(2) மவ்லவி. அப்துல் ஹமீது ஆமீர்
(3) மவ்லவி. எஸ்.கமாலுத்தீன் மதனீ
(4) மவ்லவி. எம்.அப்துல் ஜலீல் மதனீ
(5) மவ்லவி.பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
பரேலவி அணியின் சார்பில்
1)எ.எல்.எம்.பத்ருத்தீன் ஆலிம் 2)சாஹிப்தம்பி ஆலிம், 3)எ.பி.அபூபக்கர் முஸ்லியார் 4)முஹ்யித்தீன் குட்டி முஸ்லியார், 5)பக்ருத்தீன் முஸ்லியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொது மக்களும் விவாதத்தைக் கேட்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விவாதத்துக்கு மூன்று தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
1)வஸீலா,
2)தொழுகைக்குப்பின் துஆக்கள்,
3)ஈஸால் ஸவாப்
இம்மூன்று தலைப்புகளில் விவாதம் நடந்தேறியது.

ஒவ்வொரு அணியிணருக்கும் முதலில் அரை மணி நேரம், அடுத்து அரை மணி நேரம், இறுதியாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு அணியினரும் இரண்டு மணி நேரம் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

பரேலவி அணியினர் வாதம் செய்யும்போது, வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களால் தக்பீர் முழக்கம் செய்யப்பட்டது. தவ்ஹீத் அணியினர் பேசும் போது கூச்சலுக்கும், ஏளனச் சிரிப்புகளுக்கும் குறைவில்லை.

'தவ்ஹீத்அணி, அதன்பிறகுதான் பலமாக இந்தப்பகுதியில் வேரூன்றியது. இன்றைக்கு மாநிலம் தழுவிய மாநாடு நடத்தும் அளவுக்கு வளர்ச்சியும் பெற்றது. அந்த விவாதத்தைத் தங்கள் காதுகளால் கேட்டவர்கள் தவ்ஹீத் அணியை நோக்கி அதன் பிறகே திரண்டனர் விவாதத்துக்கு நடுவர் என்றே ஏற்படுத்தப் படாமல், மக்களே நீதிபதிகளாக இருந்து உண்மையே விளங்கிக் கொண்டார்கள். பரேலவி அணியினரின் மகத்தான தோல்விக்கு இந்த மாநாடு சான்று கூறிக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று தலைப்புகளில் இரண்டு தலைப்புகள் ஏற்கனவே புத்தகமாக வெளியிடப்பட்டன. மூன்றாவது தலைப்பு மட்டும் வெளியிடப்படவில்லை.
எதிர்தரப்பினரும், நம்மவர்களில் சிலரும் மூன்றாம் பாகம் வெளியிடப்படாததற்கு தவறான காரணங்களும், நோக்கங்களும் கற்பித்துக் கொண்டிருப்பதை நாம் கேள்விப் படுகிறோம்.

எனவே புத்தகமாக வெளியிடப்படாத 'ஈஸால் ஸவாப்' தலைப்பில் நிகழ்ந்த விவாதங்களை அப்படியே 'அல்ஜன்னத்' தொடர்ந்து வெளியிட உள்ளது.

ஒப்பந்தப்படி விவாதத்தை இறுதியாக முடிக்கும் வாய்ப்பு பரேலவிகளுக்கு கிடைத்ததால் அவர்கள் உளறிக் கொட்டிய அபத்தங்களுக்கு பதில் தரும் வாய்ப்பு நமக்கில்லாமல் போய்விட்டது. விவாதம் முழுமையாக வெளியிடப்பட்டப்பின், தொடர்ந்து அந்த அபத்தங்களுக்கு நமது பதில்களும் இடம்பெறும். (இன்ஷh அல்லாஹ்)

முதலில் தவ்ஹீத் அணியின் சார்பில் மவ்லவி.பி.ஜைனுல்ஆபிதீன் விவாதத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதை இனி காண்போம்.
(வளரும்)
நன்றி: அல்ஜன்னத் 1988 ஜன,பிப்
இதனை கம்யூட்டரில் டைப் செய்து தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு