பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். கண்ணியத்திற்குரியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம், நலம் பல சூழ்க. சிறு வயதில் தி.மு.க. தொண்டனாகவும் பிறகு அ.தி.மு.க. பிரமுகனாகவும் இருந்தேன். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறியது. அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அதை விமர்சித்தார். அதனால் முஸ்லிம் லீக்கில் இணைந்தேன். 1987இல் மு.லீக்கின் அன்றைய தலைவர் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது துபை வந்தார். அப்பொழுது அடுத்து வரும் தேர்தலில் பாளையங்கோட்டைத் தொகுதியில் மு.லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். 1988இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் என்னை வேட்பாளராக முடிவு செய்து வலியுறுத்தினார். அப்பொழுது பி.ஜெ. அவர்களிடமும் ஷம்சுல் லுஹா அவர்களிடமும் இது பற்றி ஆலோசனை கேட்டேன். தேர்தலில் ஓட்டுப் போடுவதே ஹராம். எனவே போட்டி போடாதீர்கள் என்றார்கள். எனவே அரசியலை விட்டு முற்றிலுமாக விலகினேன். பிறகு பி.ஜெ. அவர்களே 1995க்குப் பிறகு அரசியலுக்கு வந்தார்கள். 1996 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் களப்பணி ஆற்றினார்கள். ஓட்டுக் கேட்டார்கள், ஓட்டுப் போட்டார்கள். 2004 ஏப்ரல் ஏகத்துவத்தில் தேர்தலில் கள