J.A.Q.H. நெல்லை மாவட்ட தலைமை சார்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  08-12-2005 அன்று நெல்லை சகுந்தலா ஹோட்டல் நானா ஹாலில்  நெல்லை மாவட்ட  J.A.Q.H. சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.  

J.A.Q.H.  நெல்லை மாவட்ட தலைவர் P.  சிராஜுத்தீன் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது. 

மேலப்பாளையம் மத போதகர் செய்துள்ள மோசடிகள்.

29-11-2005 அன்று நெல்லை போலீஸ் கமிஷனரிடம் J.A.Q.H. மேலப்பாளையம் கிளை சார்பாக புகார் மனு கொடுத்தோம். http://mdfazlulilahi.blogspot.in/2005/11/blog-post.html அதில், மத போதகர் லுஹா செய்துள்ள மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி குறிப்பிட்டடிருந்தோம். 

அந்த புகார் சம்பந்தமான விசாரணைக்காக மேலப்பாளையம் மத போதகர் ஷம்சுல்லுஹா என்பவரை பாளையங்கோட்டை கிரைம் பிராஞ் போலீஸார் அழைத்துச் சென்றார்கள். 

லுஹா மீதான மோசடி புகார் மீது விசாரணைக்காக அழைத்ததும் விடுதலை செய்யா விட்டால் பஸ்களை எரிப்போம், பஸ்களை மறிப்போம், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோம், இது டிசம்பர் 6ல் எதிரொலிக்கும் என மிரட்டியுள்ளார் லுஹா. 

வீடு தேடி வந்துதான் போலீஸார் லுஹாவை அழைத்துச் சென்றார்கள். ரோட்டில் போகும்போது பிடித்து விட்டார்கள். லுஹாவிடம் போலீஸார் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டார்கள். என்றெல்லாம் காவல் துறை தலைமைக்கு பொய் புகார் கூறியுள்ளனர். ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறுவதெல்லாம் பொய் என்பதை அறியாத காவல் துறை தலைமை அதிகாரிகள் இவரை விசாரிக்காமல் விட்டு விட்டனர். 

ஜனநாயகத்தின் ஓர் அங்கம் செய்தித் துறை.

லுஹா செய்துள்ள மோசடி சம்பந்தமான ஆதாரங்களை மாநில தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம். 7ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறினார்கள். 7ஆம் தேதி விசாரிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது என கிளைப் பொறுப்பாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். இது வரை எந்த விசாரணையும் இல்லை. 

“பஸ் மறியல் போன்ற போராட்டங்கள் செய்தால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் நாங்களும் பஸ் மறியல் செய்யப் போகிறோம். குடும்பத்துடன் சென்னை சென்று முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரத அறப் போராட்டம் செய்யப் போகிறோம்”  என J.A.Q.H.. மேலப்பாளையம் கிளை பொறுப்பாளர்கள் சொன்னார்கள். 

அதற்கு  J.A.Q.H.  நெல்லை மாவட்ட தலைவராகிய நான் தலையிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்யும் எந்தக் காரியமும் செய்யக் கூடாது  என அறிவுரை கூறினேன். ஜனநாயகத்தின் ஓர் அங்கம் செய்தித் துறை என்பதால் உங்கள் மூலம் எங்கள் உரிமை பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உங்களை சந்தித்துள்ளேன் என்று கூறினார். 

மேலும் லுஹா செய்துள்ள மோசடிகளுக்குரிய ஆதாரங்களையும் காட்டிய அவர், இப்பொழுது நீங்கள் பார்த்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்துதான் போலீஸில் கம்ளைண்ட் செய்துள்ளோம். லுஹா தனது இந்த மோசடிகளை மறைப்பதற்காகவே அடிக்கடி அரசு அதிகாரிகளை அழைத்து விருந்தளித்து விழாக்கள் நடத்தி தன்னை புனிதராகக் காட்டி வருகிறார். காவல் துறையில் புகார் கொடுத்த பிறகு லுஹா மோசடி சம்பந்தமாக இன்னும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஜனாதிபதி வரை இதைக் கொண்டு செல்வோம் என்று கூறினார். 

பேட்டியின் போது அரபிக் கல்லூரி முதல்வர் K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, ஏர்வாடி பைத்துல்மால் தலைவர் B.M. மைதீன், J.A.Q.H.  ஏர்வாடி நிர்வாகி ஷாபி,  J.A.Q.H.  மேலப்பாளையம் கிளைத் தலைவர் M.M. சிபகதுல்லாஹ், J.A.Q.H.  மேலப்பாளையம் கிளைச் செயலாளர், M.A.A. செய்யது அஹமது ஸலபி,  J.A.Q.H.  நெல்லை மாவட்ட முன்னால் தலைவர் கா.அ முஹம்மது பழுலுல் இலாஹி, M.A.S. முஹம்மது அலி, குன்னான் ரசூல் ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு  J.A.Q.H.  மேலப்பாளையம் கிளைச் செயலாளர், J.A.Q.H. செய்யது அஹமது ஸலபி வெளியிட்டுள்ள கீழ் காணும் விளக்க நோட்டீஸும் கொடுக்கப்பட்டது. 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.