டிரஸ்டு திருடர்களை திடுக்கிட வைத்த டிசம்பர் 10.

                       பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                        20-12-2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மொட்டை மெயில்கள் அனுப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தின் தலைவர்தான் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்பதை அனைவரும் அறிவீர்கள். 

அந்த பி.ஜெய்னுல் ஆபிதீன் த.மு.மு.க.விற்கு பகிரங்க அறைகூவல் என்ற தலைப்பில் சவால் விட்டு மண்ணைக் கவ்விக் கொண்டார் என்பதையும் அறிவீர்கள். 

மொட்டைக் கடித மன்னர் பி.ஜே. த.மு.மு.க.வுக்கு விடுத்த சவாலையொட்டி அரங்கத்தில் நடித்ததை விட அந்தரங்கத்தில் அடித்த அந்தர் பல்டிகள் ஏராளம். அவற்றை அப்பொழுதே நாம் வெளியிட்டிருந்தால் டிசம்பர் 10லிருந்து நழுவ நமது அந்த வெளியீடுகளையே காரணமாகக் காட்டி நழுவி இருப்பார். 

பி.ஜே. நழுவுவதற்கு நமது செயல்கள் எந்த வகையிலும் துணையாக இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். எனவேதான் பி.ஜே.யின் நாடகம் சம்பந்தமான எந்த விமர்சன வெளியீட்டையும் டிசம்பர் 10 முடியும் வரை வெளியிடவில்லை. 

பி.ஜே. வசமாக மாட்டிக் கொண்டார்.

த.மு.மு.க.விற்கு பகிரங்க அறைகூவல் என்ற தலைப்பிலான பிரசுரத்தை மொட்டைப் பிரசுரமாகவே பி.ஜே. தயாரித்தார். பி.ஜே.யின் சில்மிஷங்களை கண்டு கொள்ளாத த.மு.மு.க. சமுதாய பணிகள் ஆற்றுவதை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

அந்த த.மு.மு.க.  வழக்கம் போல் பி.ஜே.யின் இந்த சில்மிஷத்தையும் கண்டு கொள்ளாது விட்டு விடும். அப்படி விட்டு விட்டால் அதையே காரணமாகக் காட்டி த.மு.மு.க. மீது களங்கம் சுமத்தி பி.ஜே.யின் மீதுள்ள களங்கத்தை மறைத்து விடலாம். சவாலை ஏற்றுக் கொண்டால், 

இது மொட்டைக் கடிதம் நான் வெளியிடவில்லை என்று நழுவி விடலாம். இது போன்ற திட்டத்திலேயே அவரது மொட்டைக் கடித எழுத்தாளர்களில் ஒருவர் மூலம் அந்தக் கடிதத்தை பி.ஜே. தயாரித்துள்ளார். 

அதை மொட்டைக் கடிதம் என்று விமர்சித்து தப்புவதற்கு வசதியாக கடித அமைப்பையும் கடித வாசகங்களையும் அமைத்தார். அதை வெளியிட்ட விதத்தில்தான் ஸஹாபாக்களை கிரிமினல்கள் என்று விமர்சிக்கும் பி.ஜே. மாட்டிக் கொண்டார். 

டிரஸ்டு திருடர்களை திடுக்கிட வைத்தது டிசம்பர் 10 என்ற த.மு.மு.க.வின் அறிவிப்பு. நம்மை விமர்சிக்க பி.ஜே. அணி பயன்படுத்தி வரும் மொட்டை மெயில்களின் முகவரிகளை பயன்படுத்தவே பி.ஜே. முடிவு செய்திருந்தார். ஆனால் பி.ஜே. வியாபாரக் கடையின் மெயிலை பயன்படுத்தி விட்டார்கள். எனவே பி.ஜே. வசமாக மாட்டிக் கொண்டார்.

பள்ளித் திருடனின் முதல் முயற்சி படு தோழ்வியடைந்தது.

மொட்டைப் பிரசுரமாகவே தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் உள்ள மொட்டைத் தன்மைகளில் சிலவற்றை இளையவன் போன்றவர்கள் அடையாளம் காட்டினார்கள். அதையே காரணமாகக் காட்டி டிசம்பர் 10லிருந்து பி.ஜே. நழுவி விடக் கூடாது என்பதற்காக அது போன்ற விமர்சனங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டன. 

பி.ஜே. புத்தக வியாபாரத்திற்காக வைத்துள்ள கடையின் மெயில் முகவரியிலிருந்து இந்த சவடால் வந்ததால் த.த.ஜ.வினர் இதை வேகமாக பரப்பி விட்டார்கள். எனவே விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விழி பிதுங்கி முழித்துக் கொண்டிருந்த பி.ஜே. தனது தனிப்பட்ட சவாலை த.த.ஜ. சவாலாக திசை திருப்பினார். 

டிரஸ்டு மோசடிகள் உட்பட பி.ஜே.யின் எல்லா மோசடிகளுக்கும் துணை நிற்கும் பிரபல பள்ளித் திருடன் ஷம்சுல் லுஹாவின் உதவியை பி.ஜே. நாடினார். 

உடனே, டிசம்பர் 10 அன்று ஏர்வாடி சிராஜ் அவர்களுடன் பிறை சம்பந்தமான விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம் எனவே டிசம்பர் 10 அன்று த.மு.மு.க. அறிவித்துள்ள இடத்திற்கு பி.ஜே. வர முடியாது என்று த.த.ஜ.வினர் செய்தி பரப்பினார்கள். 

உடனடியாக ஏர்வாடி சிராஜ் அவர்களுடன் சமுதாய நல விரும்பிகள் தொடர்பு கொண்டார்கள். டிசம்பர் 10 அன்று பிறை விவாதம் ஒப்பந்தம் ஆகி உள்ளதா?|| என்று கேட்டார்கள். இல்லை திடீரென்று மேலப்பாளையத்திலிருந்து வந்த சிலர் டிசம்பர் 10 அன்று பிறை பற்றி விவாதம் செய்வோம் என்றார்கள். 

டிசம்பர் 10 அன்று த.மு.மு.க. காத்திருப்பதாக உள்ள மெயிலை பார்த்து விட்டேன். எனவே பிறை விவாதத்திற்கு ஒப்புக் கொண்ட நான் டிசம்பர் 10 அன்று என்பதை ஒப்புக் கொள்ளவில்லை|| என்றார். எனவே ஷம்சுல் லுஹா என்ற பள்ளித் திருடனின் முதல் முயற்சி படு தோழ்வியடைந்தது. 

வசூல் மோசடியாளனின் இரண்டாவது முயற்சியும் படு தோழ்வியடைந்தது.

அடுத்ததாக பரப்பிய செய்தி டிசம்பர் 10 அன்று மேலப்பாளையத்தில் மிக முக்கியமான பொதுக் கூட்டம் ஏற்பாடாகி விட்டது. எனவே டிசம்பர் 10 அன்று த.மு.மு.க. அறிவித்துள்ள இடத்திற்கு பி.ஜே. வர முடியாது என்று பரப்பினார்கள். 

டிசம்பர் 10 அன்று மேலப்பாளையத்தில் கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறதா என்று சமுதாய சேவகர்கள் காவல் துறையை அணுகினார்கள். இல்லை என்று பதில் கூறிய காவல் துறை உஷாராகி விட்டது. 

முபாஹலா நடந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி காவல் துறை மூலம் முபாஹலா இல்லை என ஆக்கியவர்கள். பிறகு முபாஹலாவுக்காக காத்திருந்ததாக பொய்ச் செய்தி வெளியிட்டு காவல் துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியவர்கள். 

டிசம்பர் 10 அன்றும் காவல் துறைக்கு  சங்கடத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதால் நெல்லை சரகத்தில் எங்குமே பி.ஜே. கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என கூறி விட்டார்கள்.  எனவே பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதி வரும் ஷம்சுல் லுஹா என்ற வசூல் மோசடியாளனின் இரண்டாவது முயற்சியும் படு தோழ்வியடைந்தது.

தனக்கு வந்த ஆபத்தை பிறருக்கு வந்ததுபோல் காட்டுவதில் வல்லவரான பி.ஜே.

டிரஸ்டு திருடர்களை திடுக்கிட வைத்த டிசம்பர் 10லிருந்து தப்ப தேசிய லீக்கில் தஞ்சம் புகுந்தார்கள் த.த.ஜ. செய்திகளைத் தவிர வேறு எந்த அமைப்புகளின் செய்திகளையும் வெளியிடாத பி.ஜே. களவாடிய பத்திரிக்கையில் தேசிய லீக் பற்றிய செய்தியை வெளியிட்டார்கள். 

தேசிய லீக் தலைவர் என்று சொன்னால் யாருக்குங்க தெரியும்? கோனிகா பஷீர் என்று சொல்லுங்க அப்பதான் தெரியும். லட்டர் பேடு கட்சிகளுக்கெல்லாம் ஒரு தலைவன் என்று பேசிய பி.ஜே.  

கோனிகா பஷீர் தொழில் பற்றியெல்லாம் எழுத முடியாத வார்த்தைகளால் விமர்சித்த பி.ஜே. அல்ஹாஜ் பஷீர் அஹமது என்று எழுதி கோனிகா பஷீரின் காலில் போய் விழுந்துள்ளார். 

இப்படியாக ஒவ்வொரு அமைப்புகளின் காலில் போய் விழுந்து டிசம்பர் 10லிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு பி.ஜே. கெஞ்சியுள்ளார். அந்த அமைப்புகளோ பி.ஜே.யை விட வேகமாக பின் வாங்கின. 

பி.ஜே. அழைத்து வரும் அந்தக் குழுவிடம் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உறுப்பினர் அட்டைகள் அவசியம் இருக்க வேண்டும் என்று த.மு.மு.க. கூறி உள்ளதே. எங்கள் அமைப்பில் தலைவர்களுக்கே உறுப்பினர் அட்டை கிடையாதே. நாங்கள் அங்கு வந்தால்  எங்கள் அமைப்பின் மானம் அல்லவா காற்றில் பறக்கும் என்றார்கள். 

டிசம்பர் 10 அன்று நானே அங்கு போக முடியாது எனும்போது, எப்படி நான் உங்களை அங்கு அழைத்துப் போவேன் என்று சொல்லாமல், தனக்கு வந்த ஆபத்தை பிறருக்கு வந்ததுபோல் காட்டுவதில் வல்லவரான பி.ஜே. அங்கு போகாமல் (என்னையும்) உங்களையும் உங்கள் அமைப்பையும் காப்பாற்ற வேறு ஒரு வழி இருக்கு வாருங்கள்|| என்று கூறியிருக்கிறார். 

உண்மையான சமாதானக் குழுவை பி.ஜே. ஏற்கமாட்டார்.

28-11-2005 அன்று பிரசிடென்ட் ஹோட்டலில் கூடிய கூட்டத்திற்கு ரூம் புக் செய்தது யார்? கூட்டத்தைக் கூட்டியது யார்? விருந்து வைத்தது யார்? அனைத்து செலவுகளுக்கும் பணம் கொடுத்தது யார்? என்று ஆய்வு செய்தால் இந்த போலி சமாதானக் குழுவின் வேஷம் கலையும். 

த.மு.மு.க, த.த.ஜ. ஆகிய அமைப்புகள் சம்பந்தப்பட்டது என்பதால் இந்தச் செலவுகளுக்கு பொறுப்பு ஏற்குமாறு இரு அமைப்புகளையும் கேட்டிருக்க வேண்டும். அல்லது கூடிய அமைப்புகளே செலவுகளை பகிர்ந்து செலவு செய்திருக்க வேண்டும். 

த.மு.மு.க. வெளியிட்டுள்ள விளக்கங்கள் மூலம் த.மு.மு.க.விடம் கேட்கவில்லை என்பதை தெளிவாக அறிகிறோம். செலவுகளுக்குரிய பொறுப்பில் பாதியை த.மு.மு.க.விடம் கேட்காமல் த.த.ஜ.விடமிருந்து மட்டும் வாங்கியிருந்தால் இது போலி அமைப்பு என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். 

சமாதான நோக்கில் கூடியதாகக் கூறிக் கொள்ளும் அமைப்புகள் சார்பில் செலவுகள் செய்யப்பட்டதா? என்றால் மு.லீக், த.ஜ.உ.ச, ஜ.இ.இ. ஆகிய அமைப்புகள் பணம் கொடுக்கவும் இல்லை. அவர்களிடம் பணம் கேட்கவுமில்லை என்பது தெளிவாகி விட்டது. மற்ற இரு அமைப்புகளிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. 

ஆகவே இது சூத்திரதாரியின் பினாமி சமாதானக் குழு, போலி அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையான சமாதானக் குழுவை பி.ஜே. ஏற்கமாட்டார்.  பி.ஜே. தனக்காக தானே ஏற்படுத்தும் பினாமி குழுவைத்தான் போலி கூட்டத்தைத்தான் ஏற்பார் என்பதை பி.ஜே.யுடனிருந்த அனைவரும் அறிவார்கள். அதற்கு இன்னொரு ஆதாரம்தான் ஜமாஅத்தே இஸ்லாமிய தானாக முன் வந்த சமாதான முயற்சியை பி.ஜே. புறக்கணித்தது. 

டாக்டரை நோக்கி வந்த கேள்விகளை டாக்டரே அறிவார்.

இது போலிக் குழு என்பதற்கு இன்னொரு மிகப் பெரிய ஆதாரம், தேசிய லீக் தலைவரை அந்தக் குழுவின் தலைவராக மு.லீக்கும் ஏற்றுக் கொண்டுள்ளது போல் உள்ள விஷயம். பி.ஜே. வெளியிட்ட பிரசுரத்தில் கூட மு.லீக்கைத்தான் முதல் அமைப்பாக குறிப்பிட்டுள்ளார். 

மானமுள்ள எந்த மு.லீகனும் எந்த நிலையிலும் எதற்கும் தேசிய லீக் தலைமையை ஏற்க மாட்டான். டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் கலந்து கொண்டார் என்றால் அவர் மு.லீக் சார்பாக போய் கலந்து கொள்ளவில்லை. 

விண் டி.வி.  பாக்கர் அவரது டி.வி.யில் வியாபார விளம்பரம் செய்பவர் என்ற முறையில், சின்ன மஷுரா இருக்கு வாருங்கள்  என்று அழைத்துள்ளார். அதை ஏற்றே டாக்டர் போய் கலந்துள்ளார். 

எனவே மு.லீக் சார்பில் கலந்து கொண்டார் என்று எழுதியது மிகப் பெரிய பொய்யாகும். தனிப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு கலந்து கொண்டதால் டாக்டரை நோக்கி வந்த கேள்விகளை டாக்டரே அறிவார். டாக்டரின் யூனானி மருத்துவம் என்பது ஏமாற்று வேலை என பி.ஜே. செய்துள்ள அனைத்து விமர்சனங்களும் டாக்டருக்கு நினைவூட்டப்பட்டன. 

பாவம் அந்தத் தலைவர்.

அந்த போலிக் குழுவில் உள்ள ஒரு அமைப்பின் தலைவரை பி.ஜே. எப்படி தன் வயப்படுத்தி வைத்துள்ளார் தெரியுமா? நாங்கள் அ.தி.மு.க.வில் 25 சீட்டு கேட்டுள்ளோம். எங்களுக்கு சீட்டுகள் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். எங்களுக்குத் தரும் சீட்டில் நாங்கள் போட்டியிட மாட்டோம் உங்கள் கட்சிக்கு தந்து விடுவோம் என பி.ஜே. வாக்குறுதி கொடுத்துள்ளார். 

பி.ஜே.யின் வாக்குறுதிகளை அரிசி குத்தும் ஒலக்கையை வைத்து எழுதினாலும் ஓடுகிற தண்ணியில் எழுதுவதற்கு சமம் என்பதை அறியாத அந்த கட்சியின் தலைவர் மனப்பால் குடிக்க ஆரம்பித்து விட்டார். தனது சொந்தப் பணத்தை பி.ஜே. சொன்ன குழுவுக்கு செலவு செய்து விட்டு மண்ணடி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு என ஆயிரமாயிரம் கனவுகளுடன் காத்திருக்கிறார் அந்த தலைவர். பாவம் அந்தத் தலைவர்.
வெளியீடு:- கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.













Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு