சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது?
தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழக் கூடாது. சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது. நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள் என்பன போன்ற நூதன பிரச்சாரங்கள் பற்றி நபி வழியா? நமது பாலிஸியா? ஏன்ற தலைப்பில் நமது கருத்தை வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்டிருந்த அந்த ஆக்கம் முஸ்லிம்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் முஸ்லிம்கள் என்று சொல்வதில் தங்களுக்கு பெருமை இல்லை என்று கருதக் கூடிய சிலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அந்த விமர்சனங்கள் 4 வகையாக உள்ளன. 1. கடுமையான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டுள்ளது. 2. பெயர் குறிப்பிடபடாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது. 3.தனிப்பள்ளி என்று மேலப்பாளையம் தக்வா பள்ளியை விமர்சிக்கப்பட்டுள்ளது. 4.என்ன இருந்தாலும் முஷ;ரிக்குகள் முஷ;ரிக்கள்தான் அவர்கள் பின்னால் எப்படி தொழ முடியும்?. இவைதான் அந்த விமர்சனங்கள். புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா? இதில் முதலாவதான கடுமையான வார்த்தைகள் என்பது உண்மைதான். ஆனால் அவை மாற்று கருத்துடையவர்களை வ...