மம்தா வீடியோ மாதிரிதான் பீ.ஜே. மீதான குற்றச்சாட்டுக்களுமா? மம்தா வைரல் வீடியோ உண்மையா

புனித குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பு வைத்துக் கொண்டு பரப்பப்பட்ட பொய்கள் ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல? எதிரிகளுக்கு எதிரான செய்தி என்று எண்ணி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்க தயாராகி விட்டீர்களா?

மக்கமா நகரில் உள்ள புனித மஸ்ஜிதிதாகஃபத்துல்லாஹ்வுக்கு போக விடாமல் தடுத்தவர்களை விடவா மாபாவிகள் உலகில் உள்ளார்கள்? அப்படி தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது கூட, அவர்கள்மீது நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டி விட வேண்டாம் என்கிறான் அல்லாஹ்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக நடந்து உண்மைக்கு சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும்.

அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால், நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_30.html

எவ்வளவு பெரிய எதிரிகளாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுங்கள் என்பது அல்லாஹ் திரும்பத் திரும்ப திரு குர்ஆனில் கூறி உள்ள கட்டளைகளாகும். அந்த புனித குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பு வைத்துக் கொண்டு பரப்பப்பட்ட பொய்கள் ஒன்றா? இரண்டா?

உண்மை வீட்டு வாசலை விட்டு வெளியே போகும் முன் பொய் உலகம் சுற்றி வந்து விடும் என்பார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

2013ல் சேலத்தில் நடந்ததை நேற்று நடந்தது என்று இந்த 2019 மே மாத மத்தியில் பரப்பினார்கள். 
கனடாவிலும் பிரேசிலிலும் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை இன்று இந்தியாவில் என்று போட்டார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தாலே இந்தியர்கள் இல்லை என்று சாட்சி கூறுகிறது. 

எதிரிகளுக்கு எதிரான செய்தி என்று எண்ணி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மம்தா 13 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வீடியோவை போட்டு மக்களவை தேர்தலில்  பாஜக  வெற்றி  பெற்றதால்  விரக்தியடைந்து  மிக மோசமாக  நடந்து கொண்ட  மம்தா   என்ற  தலைப்பில் RSS காரர்கள் செய்தி போட்டு உள்ளார்கள்.

அதை அப்படியே திரித்து நேர் எதிராக ஆக்கி. ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு ஆதாரம் கிடைத்தால் கொதிப்படைந்த மம்தா என்று இன்னொரு சாரார் பரப்பி வருகிறார்கள். 

RSS காரர்களை எதிர்க்கிறோம் என்ற பெயரால் அல்குர்ஆனை விட்டு விட்டு  RSS காரர்களைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நேற்றைய இப்தார் நேரத்தில் பல இடங்களிலும் இந்த வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் இப்தார் சாமான் கொண்டு போன எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.
முகத்தைப் பாரப்பா இன்றைய கிழவி மம்தாவா?  குமரி மம்தா மாதிரி உள்ளது. இன்றைய மம்தா கிழவிப்பா என்றோம். உடனே மம்தா வீடியோ மாதிரிதான் பீ.ஜே. மீதான குற்றச்சாட்டுக்களுமா? என்றார்கள். ஆடியோ வெளியீட்டாளர்களில் ஒருவர்  மம்தா பற்றி போட்டுள்ளதைக் காட்டினார்கள்.

நான் ஆடியோவை ஆதாரமாக  வைத்தெல்லாம் பீ.ஜே. மீது குற்றச்சாட்டு கூறவில்லை. எனக்கு ஆதாரம் லுஹாவும், M.S. சுலைமானும்தான். ஆடியோ வெளியானது 2017ல் தான். லுஹா, M.S. சுலைமான் சாட்சியத்தின் அடிப்படையில் நான் கூறியது 2002ல்.

2002ல் நான் கூறியதை அவர்கள் ஒன்றாக இருந்த காலத்திலும் மறுக்கவில்லை. இனி பீ.ஜே.யை வைத்து சம்பாதிக்க முடியாது என்று பிரிந்த பின்னரும் லுஹாவும், M.S. சுலைமானும் என்னிடம் கூறியதை மறுக்கவில்லை. விஷயத்திற்கு வருவோம்.

உண்மை சம்பவம் என்ன வென்றால், மம்தா வீடியோ எடுக்கப்பட்டது 2006ல். அப்பொழுது ஆன் லைன் வசதி இல்லாதவர் மம்தாவின் அந்த வீடியோ அப்லோடு செய்தது.  25.11.2013ல்.  பார்த்தவர்கள் எண்ணிக்கை 1,33,076 . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கமாண்ட்ஸ் போட்டுள்ளவர்கள் 153.

2006ம் ஆண்டு ஆளுங்கட்சியாக  இருந்த  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்டை  கண்டித்தும்  பகுதியில்  அமையவிருந்த  டாடா தொழிற்சாலையை  கண்டித்தும்  மம்தா   போராட்டத்தில்  ஈடுபட்டார்.  அப்போது சிங்கூர்  பகுதிக்குள்  அவரை  நுழையவிடாமல் போலீசார்  தடுத்து  நிறுத்தி  கைது  செய்தனர்பின்னர்  விடுதலை  செய்யப்பட்ட  அவர்தனது  கட்சியினருடன்  நேராக  மேற்கு  வங்க சட்டமன்றம்  வந்து  முற்றுகைப்  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார்அப்போது  எடுக்கப்பட்டதுதான் அந்த வீடியோ. நன்றி அட்மின் மீடியா 


[29/05, 10:50 pm] +91 99654 13412: visva khalid உத்திரபிரதேசத்தில் மசூதியில் தொழுகை நடத்த அந்த மாநில அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளதாக செய்தி பரப்பபடுகிறது அது உண்மையல்ல!!,உபியில் உள்ள என் நண்பனிடம் விசாரித்தேன் அதுபோன்ற எந்த சட்டத்தையும் மாநில அரசு போடவில்லை வழக்கம்போல் மசூதிகளில் தொழுகை நடக்கிறது என்று கூறினார்!!,இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்!!

[29/05, 11:53 pm] Fazlulilahi: தேர்தலுக்கு முன்பிருந்து வலைத்தலங்களில் உத்தர பிரதேசத்தில் முஸ்லீம்களுக்கு தொழுகை நடத்த தடை என்ற தலைப்பு செய்தியுடன் கூடிய வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

உண்மை சம்பவம் என்ன வென்றால் உ.பியில் நொய்டா பகுதியில் உள்ள பொது இடமான பார்க்கில் முஸ்லீம்கள் ஜும்மா தொழுகை நடத்தி வந்துள்ளனர். சில ஹிந்து (பிஜேபி) சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் வணக்க வழிபாடுகளை அவரவர்களுக்கு நிர்ணயிக்க பட்ட (கோயில், மஸ்ஜித், சர்ச்) இடங்களில் தான் செய்ய வேண்டும், பொது இடங்களில் செய்ய அனுமதி இல்லை என்ற சட்டத்தை உ .பி அரசு அறிவித்தது.

இதை மீடியாக்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு  தங்கள் மீடியா தர்மத்தை காத்துள்ளனர் (?) (தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தலையங்கள் எழுதுவது போல)
எனவே உ.பியில் பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த எவ்வித தடையும் இல்லை. தடை செய்யவும் முடியாது. இன்ஷா அல்லாஹ் தொழுகை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அன்பு சொந்தங்களே நாம் தான் ஜும்மாவுக்கு மட்டும் பள்ளியை நிரப்பமாக்கிவிட்டு மற்ற வக்துகளில் ஒன்றரை சஃப்புக்கு கொண்டு வந்து விடுகின்றோமே?!


இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலாவது எல்லா வக்துகளுக்கும் பள்ளியை நிரப்பமாக்க முயற்சி செய்வோமாக.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு