இன்று நடந்ததா? இந்தியாவில் நடந்ததா? இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா?
அந்த வீடியோவில் உள்ள ஐரோப்பிய மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா? புர்கா போட்டுள்ள முஸ்லிம் பெண் மீது தாக்குதல் என்ற வீடியோவை வேகமாக பரப்பி வருகின்றனர். இதை
நேற்று Mohamed sidik என்பவர் போட்டிருந்தார். இது இந்தியாவில் நடந்தது இல்லை. 6 வருஷங்களுக்கு
முன் ஐரோப்பாவில் நடந்தது. இதை இன்று இந்தியாவில் நடந்தது என்பது போல் போட்டிருப்பது சும்மா இருப்பவர்களை துாண்டி விடுவது போல் உள்ளது என்று நாம் சுட்டிக்
காட்டி இருந்தோம். சும்மா இருப்பவர்கள் இது போன்றவற்றை பார்த்து விட்டு இப்படியும் செய்யலாமோ என்று ஈடுபட்டால் அந்த பாவம் யாருக்கு?
https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_25.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_25.html
பாவகாரியமாகிவிடும் என்று இன்னொரு சகோதரர் எழுதி இருந்தார். Mohamed sidik நேற்றே அந்த பதிவை நீக்கி விட்டார். இந்த மாதிரி பொய்யான பழைய வீடியோக்களை இன்று இந்தியாவில் நடந்தது போல் பலர் போட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் போட்டு உண்மைகளை விளக்கி உள்ளோம்.
இன்று Abdul samad என்பவர் போட்டுள்ளார். முஸ்லிம்களை பலி கடா ஆக்க என்னும் டி.வி.க்களும் இந்த மாதிரி பொய்யான பழைய வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஒருவர் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று எழுதி இருந்தார். கடைசி பத்தில் இருக்கிறோம் ரமழானில் பொய்களை பரப்பி பாவிகளாக ஆக வேண்டாம்.
அந்த
வீடியோவில் உள்ள மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது ஐரோப்ப மூஞ்சி என்று. இந்திய பாஷையும்
இல்லை. இன்று இந்தியாவில் ஆரம்பித்து விட்டார்கள் என்பது போல் போட்டுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
பயமோ பாதுகாப்பு பற்றிய செய்திகளை பொறுப்புள்ள தலைவர்களுக்கு தெரிவியுங்கள். பொது வெளியில் பரப்புவது இஸ்லாம் காட்டிய வழி அல்ல.
இதைக் கொண்டு (இவ்வாறான ஒரே நிகழ்வுகளைக் கொண்டு) பலரை வழிகேட்டில் விட்டு வழிகெடும்படி செய்கிறான். இதைக் கொண்டு (இவ்வாறான ஒரே விஷயத்தைக் கொண்டு) பலரை நேர் வழியில் செல்லும்படி செய்கிறான். இதன் மூலம் குற்றம் புரியும் தீயவர்களான பாவிகளைத் தவிர மற்றவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்வதில்லை அல் குர்ஆன் .2:26
Comments