16.12.16 முதல் ஜும்ஆ தொழுகை துவங்கும் மத்ரஸா ரையான் க்கு வாழ்த்துக்கள்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையில்
தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைப்பதற்கு (பள்ளிக்கு) விரைந்து
செல்லுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு
மிக நல்லது (அல்குர்ஆன் 62:9)
”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
இன்று முதல் ஜும்ஆ தொழுகை துவங்கும் மத்ரஸா ரையான்
முதல் நாள் ஜும்ஆ உரை மவுலவி J.S. ரிபாஈ பாஸி, ரஷாதி
தலைவர் மதரஸா ரையான்
”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப் பதிவு ஏட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். அதில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா? இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே பள்ளிக்குள் வருகை தந்துவிடுங்கள்
“(கடமையான) பெருந்துடக்கிற்காக
குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிவாசலுக்கு (முன்னதாக) செல்பவர் ஓர் ஒட்டகத்தை
குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
எந்த அளவு நன்மை வேண்டும்? ஒட்டக அளவா? கோழி முட்டை அளவா?
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவர் ஆவார்.
மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர்
போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர்
போன்றவர் ஆவார்.
16.12.16 முதல் ஜும்ஆ தொழுகை துவங்கும் மத்ரஸா ரையான் க்கு வாழ்த்துக்கள்.
http://mdfazlulilahi.blogspot.ae/2016/12/161216.html
Comments