ஒஜீர்களும் ராம்குமார்களும் நமது வரலாற்றில் உண்டா?

இப்பொழுது சொல்லுங்கள் முஸ்லிம்கள் நடத்தியது போர்களாபோராட்டங்களா?  


திருடினால் கையை வெட்டுங்கள் என்கிறது அல் குர்ஆன். இஸ்லாமிய சட்டம் இருக்கும் பகுதியில் நாம் இருக்கிறோம். அங்கு ஒருவன் நமது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடி விட்டான். போலீஸும் அவனை பிடித்து விட்டது. என்ன நடக்கும்? உடனே கையை வெட்டு என தண்டனை கொடுத்து விடுவார்களா?


அப்படி செய்ய மாட்டார்கள். தண்டனை கொடுக்கும் முன். நம் முன்னே நிறுத்துவார்கள். அப்பொழுது நாம் கேட்போம். ஏன் திருடினாய்? என்று. சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. வேறு வழியே இல்லை. வயிற்றுப் பசிக்காக திருடினேன் என்றால் முஸ்லிம்களாகிய நாம் என்ன சொல்வோம்? விட்டு விடுங்கள் என்போம். காரணம்? இதுதான் முஸ்லிம்களின் பண்பு.


திருடுவதையே தொழிலாக பண்ணிக் கொண்டு இருக்கிறான். போராட்டம் என்ற பெயரால் பிரியாணி அண்டாக்களை திருடினான் என்றால் என்ன சொல்வோம்? அவன் கையை வெட்டுங்கள் என்போம். போலீஸுக்கோ, நீதிபதிக்கோ அவன் யார் என்பது தெரியவும் செய்யலாம். தெரியாமலும் இருக்கலாம். அவன் ஏன் அந்த செயலை செய்தான் என்பதும் யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள். சூழ்நிலைகைளை அறிந்து உணா்ந்து தீர்மானித்து மன்னிக்கலாம். அல்லது தண்டிக்கவும் சொல்லலாம்.

கொலை செய்தவனை கொலை செய்யுங்கள் என்று இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மார்க்கம் அணுமதி அளித்துள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனிடம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். அவன் என்ன சொல்கிறான். தன் சகோதரனை கொன்றவனை கொன்றுதான் ஆகணும் என்று சொன்னால் கொன்று விடுங்கள். இல்லை மன்னித்து விட்டு விடுங்கள் என்றால் நீங்களும் விட்டு விடுங்கள்

இந்த மாதிரிதான் அல்லாஹ் போர்க் கைதிகள் விஷயத்தில் கட்டளையை போடவில்லை. ஈடு பெற்று விட்டு விடுறீர்களா? அப்படியே விட்டு விடுங்கள். அல்லது கருணையுடன் விட்டு விடுங்கள். நாம் கருணை புரிந்தால் அல்லாஹ் நம்மீது கருணை புரிவான். அவனும் மனிதன்தானே. யார் மனிதர்கள் மீது இறக்கம் காட்டவில்லையோ அவர்களிடத்தில் அல்லாஹ் இறக்கம் காட்ட மாட்டான் என்று கருணை நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள்.


போருக்குள்ள வரை முறை என்ன? எதிரிகள் ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் முஸ்லிம்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாட்டிக் கொண்டார்கள் வசமாக என்று எதுவும் செய்யக் கூடாது. இப்பொழுது சொல்லுங்கள் முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா?  

50 பேர் கொண்ட குழுவில் இரண்டு பேர் வேகமாக வீழ்த்தப்பட்டால் மற்றவர்கள் சரண் அடைந்து விடுவார்கள். இனிமேல் அவர்களுக்கு வழி இல்லை என எல்லோரையும் கொன்று விடலாம். எத்தனையோ போர்களில் இப்படித்தான் கொன்றார்கள்

உலகளாவிய போர்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் யாரையும் மீதம் வைக்காமல் வெட்டி சாய்த்து விடுவார்கள். கைதிகளாக பிடித்தார்கள் என்றால் சாகும் வரை சிறையில் போட்டு சித்ரவதை செய்வார்கள். குவாண்டம் சிறைக் கொடுமைகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை

அந்த வரிசையில் கோவைச் சிறையிலே ஒஜீர். புழல் சிறையிலே ராம்குமார் என உயிர்கள் கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்அல்லாஹ் முஸ்லிம்களுக்கு என்ன சொல்கிறான்?

எதிரிகள் ஆயுதத்தை கீழே போடும் வரை போர் செய்யுங்கள். அல்லாஹ் நாடி இருந்தால் போருக்கு முன்னரே அவர்களை அல்லாஹ் பழி வாங்கி இருப்பான். னாலும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் சோதிக்கின்றான். அவனுக்கு ஒரு சோதனை. உங்களுக்கு ஒரு சோதனை இதுதான் அல்லாஹ்வின் நாட்டம். எவர்கள் வெட்டப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய (நன்மையான) செயல்களை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) (47;4)

அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டி, அவர்களது நிலையைச் சீராக்குவான். அவர்களுக்காக அவன் அறிவித்திருந்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான் இவ்வாறு (47;4-7) சொல்லிக் காட்டி உள்ளான். 

இந்த சம்பவங்களுக்குப் பிறகு. இந்த வசனங்கள் அருளப்பட்டப் பிறகு பத்ருப் போர் முடிவாகிறது. இனிமேல் நாம் போர் செய்யலாம். நம்மை வெட்ட வரக் கூடியவர்களை நாம் திருப்பி தாக்கலாம். அல்லாஹ் அணுமதி அளித்து விட்டான். இங்கே இந்த நிலை அங்கே என்ன?

அங்கே பத்ர், பத்ரு என ஆர்ப்பரித்து அறிவித்து வந்த அபுஜஹ்ல் அணியில் என்ன நடக்கிறது. மது பானங்கள் அருந்தினார்கள். அடிமைப் பெண்களை பாட விட்டு இரவு முழுவதும் கச்சேரிகள் நடத்தினார்கள். ஒட்டகங்களை அறுத்து உணவுகளை தயாரித்து உண்டார்கள். மிகப் பெரிய ஆராவாரத்துடன் இருந்தார்கள். 

ஊரார் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய அபுஜஹ்ல்களின் கூட்டத்திற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? செலவு செய்தார்கள். இதைத்தான் இன்றும் அபுஜஹ்ல் வழி வந்தவர்கள் அணி செய்து கொண்டிருக்கும். நான் அபுஜஹ்லைவிட மோசமானவன் என்று பிரகடனப்படுத்தியவன்களின் அணி செய்து கொண்டிருக்கும். சட்டி சட்டியாய் ஆக்கி தின்று கொண்டிருக்கும். இதை நீங்கள் காணலாம்.

இங்கே இறைத்துாதர்(ஸல்) அவர்களின் அணியில் உள்ள மக்கள் ஆயுதம் இல்லாத மக்கள். அவர்களுடன் இருப்வர்களோ 313பேர்கிளிலிருந்து 317 பேர்கள் வரைதான். அங்கே அபுஜஹ்ல் தலைமையில் இருப்பவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். எப்பொழுதுமே அபுஜஹ்ல்கள் போன்றோர் பின்னால் மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும். பெருந் திரளாகத்தான் இருக்கும். 

அதற்காக பெருந் திரளாகக் கூடும் கூட்டங்களை எல்லாம் வழிகெட்டக் கூட்டம் என்று எண்ணி விடக் கூடாது. அபுஜஹ்ல்கள் கூட்டத்தோடு ஒப்பிடும்போது நாம் குறைவாகத்தான் இருப்போம். ஆக அபுஜஹ்லிடம் திரண்டு இருப்பவர்களோ ஆயிரத்துக்கும் மேல். நபி(ஸல்) அவர்களோடு திரளாக வந்து இருக்கும் மக்களோ மூன்றில் ஒரு பகுதிதான்.  எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவர்கள்.

எண்ணிக்கையில் குறைந்தாலும் எண்ணத்தால் உயர்ந்தவர்கள் யார்? நபி வழியில் நடப்பவர்கள் அல்லவா? நபி வழியில் உள்ள இந்த மக்கள் இடத்தில் ஆயுதம் இல்லை. ஆனால் அல்லாஹ் இருக்கிறான்

இந்த மக்களின் உள்ளத்தில் போர் பற்றிய பயம் சிறிது கூட இல்லை. காரணம் அவர்கள் உள்ளத்தில் ஈமான் நிறைந்து இருந்தது

இவர்களை ரசூல்(ஸல்) அவர்கள் எப்படி பக்குவப்படுத்தி கொண்டு வந்து இருந்தார்கள். 15 ஆண்டு காலம். பொறுமையையும் சோதனைகளையும் முன் சென்ற சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துச் சொல்லி வார்த்து எடுத்து இருந்தார்கள். சொர்க்கம் வேண்டும் என்றால் தியாகங்களை செய்தே ஆக வேண்டும். இந்த உறுதியுடன் கூடிய நிலையான உள்ளம் கொண்ட மக்களாக ஆக்கி வைத்து இருந்தார்கள்.

எனவே வெற்றி பெற்ற பின் யாரையும் சிறைவாசிகளாக வைத்திருக்கவில்லை. ஒஜீர்களும் ராம்குமார்களும் நமது வரலாற்றில் உண்டா? இல்லை. சிறைவாசம் என்பது இஸ்லாத்தில் இல்லை. அதனால்தான் ஒஜீர்களும் ராம்குமார்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரலாற்றில் இல்லை. 

மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் நடத்தியதும் நடத்திக் கொண்டிருப்பதும் போர்கள் அல்ல. போராட்டங்களே. அதனால்தான் போர்க் கைதிகளிடத்திலும் கருணை நபி வழியில் கனிவோடு நடந்து கொண்டார்கள். நடந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறையருளால் இத்தொடரை மக்கள் உரிமையில் இத்துடன் நிறைவு செய்கிறோம். கடந்த 52 வாரங்களாக தொடர்ச்சியாக இக்கட்டுரை வெளிவருவதற்கு ஊக்கம் அளித்த மக்கள் உரிமை வாசகர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக என்ற துஆவாக  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடரில் இடம் பெற்றுள்ள ஆயத்து, ஹதீஸ்கள் விஷயத்தில் தேவையான விளக்கங்களை தந்துதவிய மேலப்பாளையம் மவுலவி K.F. நிஜாமுத்தீன் மஹ்ழரி, மவுலவி ஏயன்னா இபுறாஹீம்  மஹ்ழரி,  கடையநல்லுார் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி, மார்க்க பிரச்சாரகர் நக்க சேலம் நாஸர் அலி கான் ஆகியவர்களுக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக என்ற துஆவாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். http://mdfazlulilahi.blogspot.ae/2016/11/blog-post_23.html 

வஸ்ஸலாம்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு