கராச்சி ரெஸ்ட்ராரண்ட்களின் அதிபர் பாரூக் பாய் மரணம்
கராச்சி ரெஸ்ட்ராரண்ட்களின் அதிபர் முஹம்மது பாரூக் மரணம் அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மேலப்பாளையம் ஆலப்பிள்ளைத் தெரு பூர்வீகம். பிறகு கோவையில் குடியேறினார். சித்துாரில் உள்ள தமிழ் பெண்ணை திருமணம் செய்தார். பிறகு பாகிஸ்தானில் செட்டில் ஆனார். அவரது உறவினர் ஒருவர் சமீபம் வரை மேலப்பாளையம் அத்தியடி தெரு முனையில் மளிகைக் கடை வைத்து இருந்தார்.
துபை யூசுப் பாக்கர் ரோட்டில் ஷஹரே (சிட்டி) கராச்சி
என்ற பெயரில் 1973இல் முதல் ரெஸ்ட்ராரண்ட் துவங்கினார். அவரது உறவினர் பலருக்கு ஷஹரே கராச்சி, சிட்டி கராச்சி என்ற பெயர்களில் ரெஸ்ட்ராரண்ட்கள் துவங்கிக் கொடுத்தார்.
பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கராச்சி தர்பார் என்ற பெயரில் துபை, ஷார்ஜா என பல இடங்களில் 30 ரெஸ்ட்ராரண்ட்கள் வரை துவங்கினார். அவரது ரெஸ்ட்ராரண்ட்களில் வேலை செய்தவர்களில் 100க்கும் மேற்பட்ட மேலப்பாளைத்தவர்கள் ஊரில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். இப்பொழுதும் மேலப்பாளைத்தவர்கள் பலர் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ரெஸ்ட்ராரண்ட்களை உருவாக்கிய அவர் இப்பொழுது முஹைஸனா4 பகுதியில் ஹோட்டல் கட்டிக் கொண்டிருந்தார்.
4.11.2016
அன்று துபை கிஸஸில் உள்ள அவரது வீட்டில் வைத்து இறந்து விட்டார். இறந்து விட்டவர்களை இங்கு உள்ள சட்டப்படி வீட்டில் வைத்திருக்க முடியாது. உடன் போலீஸுக்கு தகவல் கொடுத்து ஜனாஸாவை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதன்படி அவரது உடல் ராஷித் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சோனாப்பூர் கபரஸ்தானில் உள் நாட்டு அரபியர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுவார்கள். வெளிநாட்டவர்களை அல்கூஸ் கபரஸ்தானில்தான் அடக்கம் செய்வார்கள்.
5.11.16 அன்று இஷாவுக்குப் பின் அல்கூஸ் கபரஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டது. முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என ஆயிரக் கணக்கில் பொது மக்கள் வந்து இருந்தனர். அரச குடும்பத்தினரும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர். 2 டிஜிட்டல் வாகனங்கள் யு.ஏ.இ. அளவில் இருந்து ஏராளமாக வந்து இருந்தன.
மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் உட்பட ஏராளமான பள்ளிவாசல்களுக்கு உதவி உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல பள்ளிவாசல்களை கட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக.
மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் உட்பட ஏராளமான பள்ளிவாசல்களுக்கு உதவி உள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பல பள்ளிவாசல்களை கட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக.
Comments