வால்போஸ்ட்டர் ஒட்டியது சரியா? முதல் பன்னாடை யார்? மறைமுக வரதட்சணை எது?
இந்த திருமண நிகழ்ச்சிக்கு
தலைவா்கள் வருவதால் வருக வால் போஸ்ட்டர் அடிக்கலாமா? என்று த.மு.மு.க. சகோதரர்கள் கேட்டார்கள்
தாராளமாக அடியுங்கள் எனக்கு மாற்று கருத்தே
கிடையாது. இருந்தாலும் தலைமையை கேட்டுக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் தலைமையில்
கேட்டு விட்டு சொன்னார்கள். வரக் கூடிய தலைவர்களை வரவேற்கிறோம் என்று வேண்டுமானால்
போட்டுக் கொள்ளுங்கள். பெயர்கள் போடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்ததாகக்
கூறினார்கள்.
பெயர் போட்டால்
என்ன என்றேன். விளம்பரம், பெருமையடித்தல் என்பார்கள் என்றனர். நான் சொன்னேன் பெருமையடிப்பவன் யார் தெரியுமா? 10 பேர் புடை சூழ போவான். முன்னாலே அவன் போவான் பின்னால்
10 பேர் வருவான். ஒன்றுமே சொல்ல மாட்டான்.
10 ஆயிரம் பேர் கூடி இருக்கிற மேடையில் நின்று என் பின்னாலே 10 பேர் வருகிறார்கள் எனக்கு
அசிங்கமாக இருக்கு என்பான்.
மேடைகளிலும் மாநாடுகளிலும்தான்
என் பின்னால் 10 பேர் வருகிறார்கள். நான் வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன் என்பான்.
பின்னாலோ , சூழ்ந்தோ வரக் கூடிய 10 பேரிடம் சொல்ல மாட்டான். அவர்களிடம் சொல்ல வேண்டியதை
பத்தாயிரம் பேர் கூடியுள்ள மாநாட்டில்தான் சொல்வான். இது உளப்பூர்வமானது என்றால் உண்மையிலேயே
இதை அவன் விரும்பவில்லை என்று சொன்னால் 10 பேரிடம் வராதே என்று சொல்லி நிறுத்த இருப்பான்.
விளம்பர விரும்பி யார்? பெருமையடிப்பவன்
யார்? புரிந்து கொண்டீர்களா?
அந்த விளம்பர விரும்பியும்
அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களும்தான் தங்களை சுத்தமானவர்களாக காட்ட பிறரை விமர்சிப்பதை
தொழிலாக கொண்டுள்ளார்கள். அவர்களது விமர்சனங்களை நாம் பொருட்படுத்த தேவை இல்லை. கல்யாண
பத்திரிக்கை என்பது பிட் நோட்டீஸ், துண்டு பிரசுரம் மாதிரிதான். கல்யாண
பத்திரிக்கையில் பெயர் போட்டுள்ளோம்.
பிட் நோட்டீஸில் பெயர் போடலாம் என்றால் வால் போஸ்ட்டருக்கும்
அதே அளவு கோள்தான்.
எனது மச்சான் பேசும்பொழுது
வந்த எத்தனையோ மாப்பிள்ளைகளை நான் வேண்டாம் என்று சொல்லி விட்டதை சொல்லிக் காட்டினார்கள்.
அதில் ஒன்று ஒரு பள்ளிவாசல் தலைவர் மூலம் வந்த மாப்பிள்ளை. ஒரு இயக்கத்தின் பெயர் கூறி
அந்த இயக்கத்தில் இன்ன ஊர் நகரச் செயலாளா் பொறுப்பில் உள்ள மாப்பிள்ளை என்றார். த.மு.மு.க.வோ
ம.ம.க.வோ அல்ல. பேச்சு வார்த்தை நடந்தது. ஒரு நாள் போன் போட்ட பள்ளிவாசல் தலைவர் எவ்வளவு
நகை போடுவீர்கள் என்று கேட்டார். இவன் என்ன
தவ்ஹீது மாப்பிள்ளை என்றேன்.
மாப்பிள்ளையின்
தகப்பனார்தான் கேட்டார் என்றார். நேடியாகவோ மறைமுகமாகவோ வரதட்சணை தர மாட்டோம். என்பதுதான்
எனது நிலை. மறைமுக வரதட்சணை எது? இவ்வளவு நகை போடுவோம் என்று சொன்னால் அது மறைமுக வரதட்சணைதான். ஆகவே எவ்வளவு நகை போடுவார்கள் என்று கேட்கும் மாப்பிள்ளை
தேவை இல்லை. மாப்பிள்ளையின் தந்தை கேட்டார்
என்பதற்காக (தவ்ஹீது பள்ளியின் தலைவராகிய) நீங்கள் என்னிடம் கேட்கலாமா? என்று பள்ளியின் தலைவரிடம் கேட்டேன். தப்புதான்
என்றார்.
பொன்னாடை போர்த்துதலை
பன்னாடை என்று விமர்சிக்கிறார்கள். தங்களை சுத்தமானவர்களாக காட்ட பிறரை விமர்சிப்பதையே
தொழிலாக கொண்டுள்ளவர்கள்தான் இப்படி விமர்சித்து திரிகிறார்கள். யார் விமா்சித்து திரிகிறார்களோ
அந்த கூட்டத்தின் தலைவனுக்கே பொன்னாடை போர்த்தி இருக்கிறோம். 1995 ஜனவரி 22 அன்று மேலப்பாளையம்
பசார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி இருக்கிறோம். அதை மறுக்கவில்லை, ஏற்றுக் கொண்டார். இது பன்னாடை என்றால்
தமிழகத்தின் முதல் பன்னாடை யார்? அந்த
தறுதலைக் கூட்டத்தின் தலைவன்தான் முதல் பன்னாடை.
அவ்வப்போது தனக்கு
விளம்பரம் வேண்டும் என்பதற்காக எதைச் சொன்னால் புதுமையாக இருக்கும் என யோசித்து எதையாவது
சொல்லுவான். அதை 80களிலிருந்து சொல்வதாகவும் பொய் சொல்வான். ஆக அவன் ஒரு பொய்யன். அவனது
பொய்களை தட்டிக் கேட்காத கொத்தடிமைகளை மட்டுமே
அவனோடு வைத்துக் கொள்வான். தட்டிக் கேட்பவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள்
கூறி வெளியேற்றி விடுவான். 95இல் அந்த மேல்படியானுக்கு பொன்னாடை போர்த்தி இருக்கிறோம்.
நிறைய விஷயங்கள்
சொல்லனும் ஆனால் நேரமில்லை. ஒரே நேரத்தில் எல்லா விஷயங்களையும் சொல்ல முடியாது. சொன்னால்
மனதில் பதியாது. ஸ்கூல்களில் ஒரு பீரியடுக்கு 45 நிமிஷம்தான் வைத்திருப்பார்கள். மனிதனுடைய
மூளை ஒரே நிலையில் 40 நிமிஷம்தான் கிரகிக்கும். அதன் பிறகு நிலை மாற வேண்டும். வாத்தியார்
மாற வேண்டும். பீரியடு மாற வேண்டும். இல்லையன்றால் மாணவர்கள் மண்டையில் ஏறாது. அல்லாஹ் அமைத்த இயல்பு அது. மூளையில் விஷயங்கள்
உட்காராது.
இதை எங்கிருந்து
வந்தது என்றால் ரசூல் (ஸல்) அவர்களிடம் இருந்து வந்ததுதான். ரசூல் (ஸல்) அவர்கள் கூட
ஜும்ஆ பிரசங்கங்களை தொடர்ச்சியாக பண்ண மாட்டார்கள். உட்கார்ந்து எழுந்திருப்பார்கள்.
ரசூல் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து எழுந்திருக்கிறார்கள் என்றால் நாமும் உட்கார்ந்து
எழுந்திரிக்கிறோம். எதற்கு உட்கார்ந்து எழுந்திருக்கிறார்கள். அதை சிந்திக்க வேண்டும்.
ஆராய வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் ரசூலுல்லாஹ்தான்
முன் மாதிரி.
ஹீலர் பாஸ்கர் மருந்தில்லா
மருத்துவம் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அவர் ரசூலுல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்று சொல்வதில்லை. பெரும்பாலும்
ஹதீஸ்களிலிருந்துதான் சொல்கிறார். ஆக ஒருவன் 3 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறான்
என்றால் 40 நிமிடம்தான் மூளை கிரகிக்கும். அதன் பிறகு ரசிக்கும் கிரகிக்காது. மணிக்
கணக்கில் பேசுகின்ற பேச்சாளர்களை ரசிப்பார்கள். ஒன்றுமே மண்டையில் உட்காராது. மணிக்
கணக்கில் பேசுகின்றவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அந்த ரசிகர்களுக்கு மண்டையில் ஒன்றுமே இல்லை என்பதை கண்கூடாக பார்த்து
வருகிறோம்.
ஆகவே பீரியடு மாறப்
போகிறது கண்ணியத்திற்குரிய பேராசிரியர், டாக்டர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான
மனித நேய மக்கள் கட்சி சட்ட மன்ற தலைவரை பேசுமாறு அழைக்கிறேன்.
Comments