கவர்ச்சி ஆடை சேலையா? சுடிதாரா? சில்வார் கமீஸா?


பெண்கள் முறையாக ஆடை அணிவதால் ,உடலை மறைத்து ஆடை அணிவதால், உடல் தெரியாத வகையில் டிரஸ் போடுவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  குறைவு என்ற விபரம் ம.பி. அமைச்சர் மூலம் வெளியானது. அது பற்றி ஒவ்வொரு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. குறிப்பாக தொலைக் காட்சிகளில் உடல் தெரியா வண்ணம் உள்ள ஆடை எது? கவர்ச்சி  ஆடை எது என்ற ஆய்வுகளையும் ஒளிபரப்பின.  

சேலை உடுத்தியவர்கள் உடல் பாகங்கள்தான் வெளியே தெரிகிறது. உடல் பாகங்களை மூடிய வண்ணமும் சேலை உடுத்த முடியும்.  உடல் பாகங்களை மூடி இருந்தாலும் செக்ஸியான ஆடை சேலைதான்.  சுடிதார் - சில்வார் கமீஸ்  போன்ற ஆடை அணிந்தால் உடல் பாகம் வெளியே தெரியாது. உடல் பாகங்கள்  வெளியே தெரியாதவாறு  இறுக்கமாக எந்த ஆடை அணிந்தாலும் அது செக்ஸியாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். 

இப்படி பல்வேறு கருத்துக்கள். இறுதியில் எல்லா தொலைக் காட்சி ஊடகங்களும் ம.பி. அமைச்சர் உடைய அறிவிப்பு தமிழகத்துக்குத்தான்  பெருமை என்று கூறி முடித்தன. 

ஆடைக்கு அழகிய முன் மாதிரி இஸ்லாம்தான் என்று சுட்டிக் காட்ட வேண்டிய நேரங்களில் இதுவும் ஒன்றாயிற்றே. இந்த நேரத்தில் யாருமே சுட்டிக் காட்வில்லையே என்ற மன வருத்தம் இருந்தது. அதை நீக்கியது. கீழ் காணும் போஸ்ட்டர். அல்ஹம்துலில்லாஹ்.

 

 
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் சென்னை 19.32% சதவீதமாகவும் போபால் 71.38%  
சதவீதமாகவும் உள்ளது. உடலை மறைத்து ஆடை அணிவதால் பெண்களுக்கு எதிரான  
குற்றங்கள் சென்னை நகரில்குறைவு. மூத்த போலீ்ஸ் அதிகாரிகள் தகவல் என மத்திய  
பிரதேச மந்திரி  பாபுலால் கவுர் போபாலில்கூறினார். நன்றி 20-1-14 தேதிய ஊடகங்கள்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அறிவுரை வழங்கியுள்ளது.
..நபியே! பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக  அவர்கள்
 (ஒழுக்கமுடைய பெண்கள்என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் 
 இது ஏற்றது. (அல் குா்ஆன் 33 59)

பெண்கள்  தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை (களான முகம், மணிக்கட்டு  
வரையிலானகைகளையும்) தவிர மற்றவற்றை வெளிப்படுத்தக் கூடாது. .  
தமது முந்தானைகளை மார்பின் மேல்போட்டுக்  கொள்ளட்டும். (அல் குா்ஆன் 24:31)

தமது மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுடன் இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) இருந்தபொழுது ஆயிஷா(ரலி)வின் சகோதரி  அஸ்மாஃ(ரழி)  அவர்கள்  வந்தனர்.  அப்பொழுது அவர்கள் மெல்லிய  ஆடை  அணிந்திருந்தனர்.  அதைக்  கண்ட நபி(ஸல்)  அவர்கள்  தங்கள்  முகத்தை  அவர்களை விட்டும்  திருப்பிக் கொண்டு  'அஸ்மாவே'  நிச்சயமாக  பெண்கள்  பருவமடைந்து  விட்டால்  அவர்களின்  இந்த, இந்த  பாகங்களைத்  தவிர  மற்றவை  (வேறு எதனையும் பிறர்)  பார்த்தல்  கூடாது'  என்று  கூறித்  தங்களின் முகத்தையும்  கைகளையும்  சுட்டிக்     காட்டினர்.   அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்,அபூஹாத்தம்
                              .மு.மு.. மேலப்பாளையம்

முறையாக ஆடை அணிந்தால் பாலியல் குற்றம் குறையும் தினமணி

உடலை மறைத்து டிரஸ் போடும் சென்னை பெண்கள்: மத்திய பிரதேச ...
நியூஇந்தியாநியூஸ்
சென்னைப் பெண்களும் பாலியல் குற்றங்களும்!
தி இந்து
சென்னை பெண்கள் உடல் தெரியாத வகையில் டிரஸ் போடுவதால் ...Oneindia Tamil
சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு
யாஹூ
மாலை மலர்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.