கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன? சைபுல்லாஹ்வுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்........ உங்களிடம் ஓர் உண்மையான நிகழ்வுகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.இந்த நிகழ்வு நடந்து வெகு நாட்களாகிவிட்டதே இப்போது இது தேவைதானா என்ற கேள்வி தங்களுக்கு வரலாம். நடந்தது உண்மையான தகவல்களா?என்று கண்டறியவேண்டியதுள்ளதாலும் எனக்கு செய்திகள் வருவது உண்மையானதாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்கு சிலநாட்கள் கடந்துவிட்டது என்பதை தெரிவிக்கிறேன். கடையநல்லூர் பேட்டையில் நடந்தது என்ன? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு கடையநல்லூர் பேட்டைப் பகுதியில் ஒரு பள்ளிவேண்டும் என்று சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு அதற்காக அந்நூர் பள்ளிவாசல் என்று பெயரிட்டு இடம் வாங்குவதற்காக டவுண் கிளை,ரஹ்மானியாபுரம் கிளை,பேட்டைக்கிளை என்று மூன்று கிளைகளும் வசூலில் இறங்கினார்கள்.பேட்டையிலுள்ள ஹனபி ஜமாஅத்தார்களும் பள்ளிக்காக கேட்கிறார்கள் என்று இவர்கள் யார் என்றுகூட பாராமல் உதவி செய்தார்கள்.(இது த...