மார்க்கத்துக்கு ஸேப்டி இஜ்மாஃ ரஷாதி5ஆவது உரை
(குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத இஜ்மாஃவை ஏற்றுக் கொள்வோம் என்று குர்ஆன் ஹதீஸ் உடையவர்கள் சொல்லவே மாட்டார்கள். இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாததால் என்பாரு என்று ஜோஸ்யம் சொல்ல வேண்டிய நிலைக்குள்ளாகி விட்டார் ரஷாதி.) (ஐயா பெரியவரே இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி விட்டால். இஜ்மாஃவை இவா்களால் என்ன எவர்களாலும் மறுக்க முடியாதே. ஆதாரம் வைக்காமல் அதுக்குத்தான் இதுக்குத்தான் என்று இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால் அறிவுடையவர்கள் எப்படி உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்) (குர்ஆனில் உள்ளது என்று சொன்னால் குர்ஆனை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். ஹதீஸில் உள்ளது என்று சொன்னால் ஹதீஸை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். என்னத்த வேணும்னாலும் கட்டுவதற்கு வழி ஸைபுத்தீன் அவர்கள் கூறும் இஜ்மாஃ பெயரால்தான் முடியும். இதை பாமரனாலும் புரிய முடியும். இந்த பண்டிதரால் ஏன் புரிய முடியவில்லை.) (மடங்கி போயி, மடங்கி போயி என்கிறார். மடங்கி போயி என்றால் அந்த விவாதத்தில் பதில் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். 1994இல் நடந்த அ...