ஸூரத்துந் நாஸ் நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா?

 மொழி பெயா்ப்புகள்.

1926இல் மொழி பெயா்த்த தாவூத்ஷா  முதல்  எல்லாருமே  நாஸ் என்ற அத்தியாயத்தின்  தலைப்புக்கு   மனிதர்கள் என்றே மொழி பெயா்த்துள்ளார்கள்.



1984க்குப் பிறகு மொழி பெயா்த்த (P.J. யின் அண்ணன்) P.S. அலாவுதீன் அவா்கள் மக்கள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

மொழி பெயா்ப்புகள் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறையில் இருக்கும் மொழி வழக்கின் அடிப்படையில்தான் இருக்கும். அவற்றை குா்ஆன் மொழி பெயா்ப்புகளிலும் காணுகிறோம்.

உதாரணத்திற்கு இந்த அந்நாஸ் அத்தியாய  மொழி பெயா்ப்புகளில்  இடம் பெற்றுள்ள  மனிதர்கள், மக்கள், ஜனங்கள் மற்றும் அதிபதி, அரசன், மன்னன் என்ற வார்த்தைகளைக் கூறலாம். இது போன்ற வார்த்தைகளால் பாதகங்கள் இல்லை.  எல்லாமே ஒரே பொருளை தரக் கூடியவைகள்தான்.

இந்த அத்தியாயத்தின் 5ஆவது வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸுதுார் என்ற வார்த்தைக்கு நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில், உள்ளங்களில் என்று 3 வித மொழி பெயா்ப்புகள் உள்ளன. இவை ஒரே பொருளை தரக் கூடியவைகள் அல்ல.

எண்ணுவது,  சிந்திப்பது, சந்தேகிப்பது, மறப்பது, நினைப்பது  எல்லாம் மூளையின் வேலை தான். நெஞ்சுக்கும், இ(ரு)தயத்துக்கும் அந்த வேலை கிடையாது. இது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். 

எனவே நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆகவே  ஆய்வு செய்ய வேண்டுகிறோம்.



ஒன்று முதல் நான்கு வரை ஒரே வசனங்கள் என்ற அடிப்படையில் பி.ஜெ. அவா்கள் மொழி பெயா்ப்பை அமைத்துள்ளார்.
நான்கு,
ஐந்து ஆகிய இரண்டும் ஒரே வசனங்கள் என்ற அடிப்படையில் .கா.. அவா்கள் மொழி பெயா்ப்பை அமைத்துள்ளார்.

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. -P.J.


قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

114:1 சொல்க: மனிதா்களுடைய ரப்'பி'னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்,-(1926தாவூத்ஷா)

114:1. சொல்வீராக மனிதர்களுக்குரிய  றப்பைக் கொண்டு காவல் தேடுகிறேன்.-(S.S.M.A.1950)

114:1.(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள், மனிதா்களை படைத்து வளா்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.-(ஆ.கா.அ.)


114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.-(ஜான்)
114:1 கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்; (I.F.T)

114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.-(சவூதி)

114:1. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன்.-(A.M.S.)

114:1. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களுடைய இறைவனிடம்  நான் (பாது)காவல் தேடுகிறேன்.-(திரீயெம் பிரிண்டா்ஸ்)

114:1. சொல்வீராக! மனிதா்களின் அதிபதியிடம்  நான் பாதுகாவல் தேடுகிறேன்.-(P.S.A)

مَلِكِ النَّاسِ

114:2. மனிதா்களின் அரசனிடத்தில், -(1926தாவூத்ஷா)

114:2. ஜனங்களுக்கு அரசன்.      -  (S.S.M.A.1950)

114:2  (அவன்தான் ) மனிதா்களின் (உண்மையான) அரசன்.-(ஆ.கா.அ.)

114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;  -(ஜான்)

114:2 மக்களின் மன்னனிடம் (I.F.T)

114:2    (அவனே) மனிதர்களின் அரசன்;-(சவூதி)

114:2    (அவன்மனிதர்களின் அரசன்.-(A.M.S.)

114:2    (அவன்மனிதர்களின் அதிபதி- (திரீயெம் பிரிண்டா்ஸ்)

114:2 . (அவன்) மக்களின் அரசன்.-(P.S.A)
إِلَٰهِ النَّاسِ

114:3. மனிதர்களின்   தெய்வத்தினிடத்தில்,-   (1926தாவூத்ஷா)

114:3. ஜனங்களின் வணக்கத்துக்கு உரியவன்-  (S.S.M.A.1950)

114:3.(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன். -(ஆ.கா.அ.)

114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.-(ஜான்)


114:3 மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;) (I.F.T)


114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.  -(சவூதி)

114:3. (அவன்மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.  -(A.M.S.)

114:3.(அவன்மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) இறைவன்.
-(திரீயெம் பிரிண்டா்ஸ்)

114:3. மக்களின்  வணக்கத்திற்குரியவன்   -(P.S.A)

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

114:4.பதுங்குகின்றவனின் முணுமுணுப்பின் தீமையினின்றும்,(1926தாவூத்ஷா)                 

114:4.  ஊசாட்டத்தின் தீங்கை விட்டும், கன்னாஸின்  (தீங்கை விட்டும்)         -(S.S.M.A.1950)

114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).-(ஜான்)

114:4. திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து. (I.F.T)

114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).-(சவூதி)


114:4. பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை  கிளப்பக் கூடியவ(னானஷைத்தா)னின் தீங்கை விட்டும் ( நான் பாதுகாவல் தேடுகிறேன்).-(திரீயெம் பிரிண்டா்ஸ், A.M.S.)

114:4.வீணான சந்தேகங்களைக் கிளப்புபவன், தோன்றித் தோன்றி                                மறைபவன்   தீங்கிலிருந்து         -(P.S.A)

114:4,5. மனிதா்களுடைய  உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)-(ஆ.கா.அ.)

114:1,2,3,4 .மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! 26-(P.J)


 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ


114:5.மனிதா்களுடைய நெஞ்சங்களுக்குள் முணுமுணுப்பவன், (1926தாவூத்ஷா)

114:5.  ஜனங்களின் இருதயங்களில்  ஊசாட்டமுண்டாக்குகிறானே   அவன்.                 - (S.S.M.A.1950)

114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.-(ஜான்)

114:5.அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான்.  (I.F.T)

114:5  அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். -(P.J)

114:5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். -(சவூதி)


114:5 . அவன் எத்தகையவனென்றால்,  மனிதர்களின் நெஞ்சங்களில்  வீணான  சந்தேகங்களை ஏற்படுத்துகின்றான். -(A.M.S.)

114:5 . அவன் எத்தகையவனென்றால்,  மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பி விடுகிறான். -(திரீயெம் பிரிண்டா்ஸ்)

114:5 .  அவன்      மக்கள்  நெஞ்சங்களில்  வீண்   சந்தேகங்களைக்  கிளப்பி விடுகிறான்.            -(P.S.A)


مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
114:6 .  ஜின்களில் நின்றும்   மனிதர்களில். நின்றும்  -        (1926தாவூத்ஷா)

114:6 .ஜின்களிலும்  மனிதர்களிலுமிருப்பவன். - (S.S.M.A.1950)

114:6 . (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர், மனிதர்களிலும்  இருக்கின்றனர். -(ஆ.கா.அ.)

114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.-(ஜான்)

114:6 அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே.  (I.F.T)

114:6 ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர். -(P.J)

114:6.(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்-(திரீயெம் பிரிண்டா்ஸ்,சவூதி)

114:6. (இத்தகையோர்ஜின்களிலும்மனிதர்களிலும் உள்ளனர். -(A.M.S.)

114:6.(இத்தகையோர்)ஜின்களிலுமிருக்கின்றனா்,மனிதர்களிலுமிருக்கின்றனா்.       -(P.S.A)          

http://mdfazlulilahi.blogspot.ae/2012/12/blog-post_24.html 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு