ஸுறத்துல் பாத்திஹா என்ற அத்தியாயத்தின் 7 வசனங்களை தமிழில் மொழி பெயா்த்த ஒவ்வொரு அறிஞா்களும் ஒவ்வொரு வித வார்த்தைகளால் மொழி பெயா்த்துள்ளார்கள்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதைச் சோ்த்து தான் ஏழு வசனங்கள் என்ற கருத்தும் சோ்க்காமல்தான் ஏழு வசனங்கள் என்ற கருத்தும் உள்ளதை இதில் காணலாம்.
இது சவூதி வெளியீடு
بِسْمِ - பிஸ்மி
பெயரால் - பெயரில் - பெயரைக் கொண்டு
اللَّـهِ - அழ்ழாஹி
அல்லாஹ்வின்
الرَّحْمَـٰنِ - அர்றஹ்மானி
அளவற்ற அருளாளன் - பேரருளாளன் - இரக்கமுள்ளவன் - மாபெருங் கருணையாளன் -
الرَّحِيمِ - அர்றஹீமி
, நிகரற்ற அன்புடையோன் - பேரன்பாளன் -தனிப்பெருங்கிருபையாளன் -மிகக் கிருபையுடையவன்-மிக்க கருணையாளன்
----------------
الْحَمْدُ - அல்ஹம்து
புகழ் - எல்லா(அனைத்து)ப் புகழும் - புகழ் யாவும் - சர்வ புகழும்
لِلّٰهِ -லில்லாஹி
அல்லாஹ்வுக்கே.
رَبِّ - றப்பி
பராமரிப்பவன்
الْعَالَمِينَ- அல் ஆலமீ(ன)ன்
அகிலங்கள்
அத்தியாயம் :1 மொத்த வசனங்கள் : அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87 -(P.J. 2002)
1.அல்
ஃபாத்திஹா (தோற்றுவாய்)வசனங்கள் : 7 மக்கீ(5) (ஆ.கா.அ1929))
1-வது சூறா, ஸுறத்துல் பாத்திஹா. இது மக்காவிலும் மதீனாவிலும் இறங்கியது. ஏழு ஆயத்துகள் கொண்டது. - (S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி 1950)
அல் ஃபாத்திஹ(ஹ்)
(தோற்றுவாய்)- (திரீயெம் பிரிண்டர்ஸ்1992)
அல் ஃபாத்திஹா (தோற்றுவாய்) வசனங்கள் : 7 மக்கீ – (K.முஹம்மது இக்பால் மதனி 1993)
சூரத்துல்
பாத்திஹா (தோற்றுவாய்) மக்கீ –( A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி2002)
அல் பாத்திஹா- தோற்றுவாய். மக்காவில் அருளப்பெற்றது வசனங்கள்-7 –(ரஹ்மத் அறக்கட்டளை)
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
பெயரால்... (P.J.)
1:1 (துன்யாவில் சகலருக்கும்) கருணை புரிபவனும் (ஆகிறத்தில் ஈமானுள்ளவர்களுக்கு மட்டும்) அருள் பாலிப்பவனுமான அல்லாஹு(தஆலா)வுடைய திருநாமத்தால் (இதை ஓத ஆரம்பஞ் செய்கின்றேன்.) - (S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி
பொங்கும் கருணையாளன், தொடர் கிருபையாளன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு (ததப்பருல் குர்ஆன்)
அனைவரின் மீதும் மிக்க இரக்கமும் கருணையுமுள்ள அல்லாஹ்வின் திருப் பெயரால்... துவங்குகிறேன் (ஸலாமத்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... -அப்துல் ஹமீது பாகவி (துவங்குகிறேன் -ஜான், I.F.T)
1:1. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் - அதிரை ஜமீல் (ஓதுகிறேன் -இக்பால் மதனி) (தொடங்குகிறேன். -இம்தாதி,
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்.... (றஹ்மத்)
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் -உமர் ஷரீப்
)
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ
ٱلْعَـٰلَمِينَ ﴿٢﴾
1.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். -(P.J)
1. எல்லாப்
புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்)
அகி்லத்தார் அனைவரையும் படைத்து வளா்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.-(ஆ.கா.அ)
1.அனைத்துப் புகழும்,
அகிலங்கள் அனைத்தி(னையும் படைத்துப் பரிபக்குவப் படுத்துகி)ன்(ற) இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
உரியது.- (திரீயெம் பிரிண்டர்ஸ்)
1. அனைத்து புகழும், அகிலத்தாரின்
ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.(A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்துப் பரிபாலித்து) இரட்சிப்பவன். (அன்வாருல் குா்ஆன்)
1.எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே
உரியன –( ரஹ்மத் அறக்கட்டளை)
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். -(ஜான்)
1:2 எல்லாப்
புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே
உரியதாகும். -(I.F.T)
2. அனைத்துப் புகழும்,
அகிலத்தாரின் இரட்சகனாகிய
அல்லாஹுக்கே உரியது. –(இக்பால்
மதனி)
2. சா்வ புகழும் சகல லோக இரட்சகனாகிய
அல்லாஹு(தஆலா)வுக்கே (சொந்தமாகும்)- (S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾
2. (அவன்தான்) அளவற்ற
அருளாளன். நிகரற்ற அன்புடையவன். -(ஆ.கா.அ)
2. அளவற்ற
அருளாளன்.
நிகரற்ற அன்புடையோன்.
-(P.J)
2. (அவன்) அளவற்ற
அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.-(திரீயெம் பிரிண்டர்ஸ்)
2. (அவன்) அளவற்ற
அருளாளன். நிகரற்ற கிருபையுடையவன் -(A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
2.
அளவற்ற அருளாளன்: நிகரற்ற அன்புடையோன். -(அன்வாருல் குா்ஆன்)
2.(அவன்) அளவிலா அருளாளன். நிகரிலா அன்புடையோன்-
–(ரஹ்மத் அறக்கட்டளை)
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.-(ஜான்)
1:3
அவன்
மாபெருங் கருணையாளனாகவும்,
தனிப் பெருங் கிருபையாளனாகவும்,
இருக்கின்றான். -
(I.F.T)
3. (அவன்) அளவற்ற அருளாளன், மிகக்
கிருபையுடையவன் –(இக்பால்
மதனி)
3. (அவன் பொதுவாய்)
கிருபை செய்கிறவன். (சொந்தமாய்) அருள் புரிகிறவன். -(S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ﴿٤﴾
3. தீர்ப்பு
நாளின் அதிபதி(யும்
அவனே). -(ஆ.கா.அ)
3. தீர்ப்பு
நாளின் 1
அதிபதி.
-(P.J)
3. (அவனே நியாயத்)
தீர்ப்பு நாளின் அதிபதி.
.-(திரீயெம் பிரிண்டர்ஸ்)
3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
–((A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
3. தீர்ப்பு நாளின் எஜமானன்.-(அன்வாருல் குா்ஆன்)
3. பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி –(ரஹ்மத் அறக்கட்டளை)
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).-(ஜான்)
1:4 இறுதித்
தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
(I.F.T)
4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
–(இக்பால் மதனி)
4. (
இன்னுமவன்,
நன்மை-தீமைக்காக) கூலி யளிக்கப்படுகின்ற நாளின் அதிபதி. -(S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾
4. (அல்லாஹ்வே) நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் -(ஆ.கா.அ)
4.(
எனவே)
உன்னையே வணங்குகிறோம்.
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
(P.J)
4. (யா அல்லாஹ்!)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
.- (திரீயெம் பிரிண்டர்ஸ்)
4. (எங்கள் ரப்பே!)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். –(A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
4. (எங்கள் ரட்சகனே) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். (அன்வாருல் குா்ஆன்)
4. (அல்லாஹ்!) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் –(ரஹ்மத் அறக்கட்டளை)
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.-(ஜான்)
1:5
உனக்கே
நாங்கள் அடிபணிகிறோம். (
இபாதத் செய்கிறோம்.)
மேலும்,
உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
(I.F.T)
5. (எங்கள்
இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.–(இக்பால் மதனி)
5. (பக்த இரட்சகனே!)
உன்னையே வணங்குகிறோம். இன்னும் (உன்னை வணங்க) உன்னிடமே உதவி தேடுகின்றோம்.. -(S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
ٱهْدِنَا ٱلصِّرَ ٰطَ ٱلْمُسْتَقِيمَ ﴿٦﴾
5. நீ எங்களை நேரான
வழியில் நடத்துவாயாக!- -(ஆ.கா.அ)
5.எங்களை
நேர் வழியில் செலுத்துவாயாக! -
(P.J)
5. எங்களை நீ நேர்
வழியில் நடத்துவாயாக.- (திரீயெம் பிரிண்டர்ஸ்)
5. நீ எங்களை நேரான
வழியில் நடத்துவாயாக! –(A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி) )
5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. (அன்வாருல் குா்ஆன்)
5. (இறைவா!) எங்களை
நேரான வழியில் செலுத்துவாயாக!
–(ரஹ்மத் அறக்கட்டளை)
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!-(ஜான்)
1:6
எங்களுக்கு
நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!
(I.F.T)
6. நீ எங்களை நேரான
வழியில் நடத்துவாயாக! –(இக்பால் மதனி)
6. (இறைவனே!) எங்களுக்கு
நேர்மையான பாதையை காட்டியருள்.-(S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
صِرَ ٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ
عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾
6. (அவ்வழி)
எவர்களுக்கு
நீ அருள் புரிந்தாயோ அவர்கள்
(சென்ற) வழி. -(ஆ.கா.அ)
7. (உன்)
கோபத்துக்குள்ளானவா்களோ வழி தவறியவா்களோ சென்ற வழி அல்ல. -(ஆ.கா.அ)
6,7. அது நீ யாருக்கு அருள்
புரிந்தாயோ அவர்கள் வழி.
அவர்கள்
(
உன்னால்)
கோபிக்கப் படாதவர்கள்,
மற்றும் பாதை மாறிச்
செல்லாதவர்கள்.
26-
(P.J)
6. எவா்களின் மீது
நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின்
வழியில் (நடத்துவாயாக!) .- (திரீயெம் பிரிண்டர்ஸ்)
7. (அது) உன்
கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல, நோ்வழி தவறியோர் வழியுமல்ல. (திரீயெம் பிரிண்டர்ஸ்)
6. நீ
எவா்களின் மீது அருள் புரிந்தாயோ,
அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக!) .–( (A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி) )
7. (அது) உன்
கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல, நோ்வழி தவறியோர் வழியுமல்ல. .– (A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி) )
6. நீ எவர்களின்மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற)
வழி(யில் நடத்துவாயாக) (அன்வாருல் குா்ஆன்)
7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும், வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல. (அன்வாருல் குா்ஆன்)
6,7.(இறைவா!) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின்
வழியில் (செலுத்துவாயாக!) (அவா்கள் உனது)
சினத்திற்கு ஆளானவா்களும் அல்லா், வழிதவறிச் சென்றவா்களும் அல்லா். –(ரஹ்மத்
அறக்கட்டளை)
1:7. (அது)
நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. -(ஜான்)
1:7 (
அவ்வழி)
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ
அவர்களின் வழி;
உன்னுடைய கோபத்துக்கு
ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின்
வழி.
(I.F.T)
7. எவர்களின் மீது
நீ
அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக).
(அது உன்) கோபத்துக்குள்ளானவா்கள(ான
யூதா்களின் வழிய)ல்ல, அன்றியும், வழிகேடா்கள(ான கிருஸ்துவா்களின் வழியும)ல்ல. .–(இக்பால் மதனி)
7. நீ பாக்கியஞ்
செய்தருளிய (நபிகள், சித்தீக்குகள்,ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் முதலிய) வா்களின் பாதையை
(எங்களுக்கு காட்டியருள்) கோபத்திற்குள்ளானவா் (யஹுதி) களும், வழி கெட்டவா்(நஸாறாக்)
களுமல்லாத (நீ பாக்கியஞ் செய்தருளிய) வா்களுடைய பாதையை (எங்களுக்கு காட்டியருள்வாயாக!-(S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி )
Comments