ஹஜ்ஜுப் பெருநாள் பரிசுப் போட்டி

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மேலப்பாளையம் சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெருவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

27-10-2012 சனிக்கிழமை அன்று ஜமால் அவர்களை வாத்தியாராகக் கொண்டுள்ள ஞானியார் சிலம்பு கலைக்குழுவினரின் வீர விளையாட்டுக்கள் நடை பெற்றன.
 
முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் சிலம்ப வாத்தியாருமான மணியாச்சி காஜா அவர்கள் வீர விளையாட்டுக்களை துவங்கி வைத்தார். சிறப்பாக விளையாடியவர்கள் ஆடைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டார்கள்
28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலிபர்களுக்கிடையிலான பந்தய போட்டிகள் நடைபெற்றன.
 
 
29-10-2012 திங்கள்கிழமை அன்று  மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது. மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜிஅவர்கள் சிறப்புரையாற்றினார்.
 
1. சமிஃனா என்றால் என்ன அர்த்தம். குர்ஆனில் அந்த வார்த்தை இடம் பெற்றுள்ள வசனங்களில் 3 ஐ குறிப்பிடுக.

2. சமாயினா, சமிஃனா இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா?

3. ரோம் பேரரசு (அன்றைய இத்தாலி) நாடு பற்றி அல்குர்ஆனில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

4. மிஸ்ர் (இன்றைய எகிப்து) நாட்டின் பெயர் அல்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது.

5. மக்காவை பக்கா என்றும் மக்கா என்றும் அல்குர்ஆனில் எந்த எந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

6.உலகின் முதல் ஆலயம் பழமையான ஆலயம் என்று குர்ஆன் எந்த ஆலயத்தைக் குறிப்பிடுகிறது எங்கெங்கே குறிப்பிட்டுள்ளது.

7. சிங்கம் என்ற வார்த்தை குர்ஆனில் எங்கே இடம் பெற்றுள்ளது.

8. பேன், தவளை என்ற வார்த்தைகள் குர்ஆனில் எங்கே இடம் பெற்றுள்ளது.

9. வெட்டுக்கிளி என்ற வார்த்தை குர்ஆனில் எங்கெங்கு இடம் பெற்றுள்ளது.
 
10. காகம் என்ற வார்த்தை குர்ஆனில் எங்கே இடம் பெற்றுள்ளது.

11. பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்தக் கூடாது, கேலி செய்யக் கூடாது என்று குர்ஆனில் எங்கு கூறப்பட்டுள்ளது.

12. உணவு அமைச்சராக பொறுப்பேற்ற நபி யார்?

13. ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

14. ஆண் துணையின்றி கருவுற்றவர் யார்?

15. இரும்பை உருக்கி பொருட்களையும் கவச ஆடைகளையும் தயாரிக்கும் முறையை முதன் முதலில் செய்து காட்டியவர் யார்?  ஆகிய கேள்விகள் உட்பட 125 கேள்விகள் குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து கேட்கப்பட்டது.  150 பேர் போட்டியில் கலந்து கொண்டனர் . 50 பேர்கள் பரிசு பெற்றனர்.
 
890 மார்க்குகள் வாங்கி முதல் பரிசு பெற்ற காயங்கட்டி முஹம்மதுக்கு மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி பரிசு வழங்குகிறார்.
 
 
887 மார்க்குகள் வாங்கி 2ஆவது பரிசு பெற்ற காயங்கட்டி ஹுதைபா ஜாகிர் அவர்களிடம் பரிசு பெறுகிறார்.
 
 
877 மார்க்குகள் வாங்கி 3ஆவது பரிசு பெற்ற துராப்ஸா பைரோஸ்கான் கவுஸ் முஹம்மது அவர்களிடம் பரிசு பெறுகிறார்.
 
871 மார்க்குகள் வாங்கி 4ஆவது பரிசு பெற்ற L.K.M.முஹம்மது அலியின் சார்பில் அவரது சகோதரர் L.K.M. உமர் பாரூக் லெப்பை அஹ்மது உசேன் அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார்.
 
860 மார்க்குகள் வாங்கி 5ஆவது பரிசு பெற்ற  L.M. புஷ்ரா ஸாஹிபு முஹம்மது மைதீன் அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார்.
 
840 மார்க்குகள் வாங்கி 6ஆவது பரிசு பெற்றவர் ஜரீது நஸீம் அவர்கள்.
 
 
812 மார்க்குகள் வாங்கி 7ஆவது பரிசு பெற்ற K. முஹம்மது அபுபக்கர் சித்தீக் தெற்கு கொந்து தலைவர் சேமர் முஹம்மது மைதீன் அவர்களிடமிருந்து பரிசு பெறுகிறார்.
 

 காயங்கட்டி மைமூன், P.H. செய்யது இபுறாஹீம் கான்,  காயங்கட்டிமுஹம்மது முஹ்யித்தீன், L.K. பாயிஷா, காயரசு முஹம்மது சபீர் அப்சல்,ஜெய்லானி, முஹம்மது ஷகிலாமற்றும் பலர் ஆறுதல் பரிசு பெற்றனர். நிகழ்ச்சிகளை காயங்கட்டி கமால் மற்றும் K.M.S. பைத்துல்மால் இளைஞர்கள் முன்னின்று நடத்தினார்கள் .

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.