மாநாட்டு தோல்வியில் மறை கழன்று விட்டதா? கேள்விக்கு பதில் உண்டா ?"பில்டப்' PJ யிடம்

நாம் கேட்பது 
பீஜே பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் ,
"தொழுகை இல்லாத பீஜே மார்க்கம் சொல்ல என்ன தகுதி உள்ளது ?"
மர்ர்க்கம் என்ற பெயரில் ,பெண்களிடம் கடலை போட அனுமதி உள்ளதா?
என்று ஒவ்வொரு சாதாரண தொண்டன் கேட்டால் ,பதில் உண்டா ?
ஆக்கம் : அபூ நபீலா .6-7-10


அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!-->
கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்!

நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்!

வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர்PJ

தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.

மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்!

மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது. பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர்.

ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!
-செங்கிஸ்கான்.

எடுபடாத வாதங்களும் - எதிர்வாதங்களும்!


சென்னை மாநாடு முடிந்ததும் அண்ணன் இணைய தளத்தில் ஆக்ரோஷத்தோடு நம் மீது பாய்ந்திருக்கிறார். எந்த அளவுக்கென்றால் மற்ற அனைவரையும் விட நாம் தான் மிக மோசமானவர்கள், தமுமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானவர்கள் என்கின்ற அளவுக்கு ஆத்திரம் கொண்டு, நம் மீது அள்ளி எறிந்திருக்கிறார். அந்த எடுபடாத வாதங்களுக்கு நாம் சில எதிர்வாதங்களை முன் வைக்கிறோம்.

1. மாநாட்டுக்கு பெண்கள் போகக் கூடாது என எங்கே பாக்கர் பேசினார் என்று பொய்ஜெ ஆதாரத்துடன் கூற வேண்டும்.

2. அன்னியப் பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்தால் குர்ஆன் ஹதீஸ்படி ஒருவரை தண்டிக்க முடியாது என பத்வா கொடுத்தது யார்? 

இதற்காக கடலூரில் முபாஹலா செய்தது யார்? 

அப்படிப்பட்ட ஒருவரை பரிசுத்தமான இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்தியது ஏன்? 

இப்போது அதை திரும்பத் திரும்ப பேசுவதேன்? பாக்கரை பேச வேறு எதுவும் இல்லாததாலா? என்று கேட்போருக்கு பொய்ஜெ பதிலளிப்பாரா?

3. அதிராம்பாட்டினத்தில் மக்கள் மைக் பிடித்து கேள்வி கேட்பதாக நேரில் பார்த்ததை போல் கூறும் பொய்யர் ஆதாரத்தோடு நிரூபிப்பாரா?

.4. தேர்தல் நேரம் என்ற வாதம் சரி என்றால் தேர்தல் நடக்க இருப்பது சட்டசபைக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை நாடாளுமன்றத்தினால் செயல்படுத்த வேண்டியது என்பதை மறந்து விட்டு கலைஞர் கையில் உள்ள சிறைவாசிகள் விடுதலை பற்றிய கோரிக்கையை விட்டுவிட்டு மத்திய அரசு சட்டசபை தேர்தல் நேரத்தில் நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

5. டிசம்பர்-6ல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கைதுசெய்யப்பட்டபோது "நீள அகலம் பற்றி பேசி தலையை எண்ணும் வேலையை'' செய்தது யார்? இந்தச் செயல் கேவலம் என அப்போது புரியவில்லையா?

6. மிகைப்படுத்திக் கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது! போராட்டத்தில் சொல்லாம் என கூறுவது உண்மையானால் டிசம்பர்-6 அன்று ஆயிரக்கணக்கானோர் எனக் கூறியதாக மட்டும் எப்படி பொய்யாகும். வெறும் 30,000 என்ற உளவுத்துறை கணக்கை மேடையில் 22 லட்சம் என ஜூலை 4ல் சொல்வது மட்டும் சரியாகுமா?

7. கடற்கரை வரை நாலா பக்கமும் பதுங்கி நின்றது என்றால் சென்னையில் ஏன் கும்பகோணத்தைப் போல், தஞ்சையைப் போல் ஒரு சிறு போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை?


8.சமுதாயத்தின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக போராட்டம் நடத்துவோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவோர் துரோகிகள் என்றால் வீடியோவை ஓட விட்டு தலையை எண்ணி விடலாம் என டிசம்பர் -6ல் இதஜ தொண்டர்கள் கைதாகி உள்ளே இருந்தபோது சொன்ன நீங்கள் மாபெரும் துரோகிதானே?

9. வசூலுக்காக மாநாடு நடக்கவில்லை என்றால் இந்த மாநாட்டிற்கான மொத்த வரவு செலவை முஸ்லிம்களின் பார்வைக்க வைக்கத் தயாரா? (ஏனென்றால் இதஜ சகோதரர்களும், பொதுவான முஸ்லிம்களும் பணம் கொடுத்துள்ளனர்)

10. இதஜ, எஸ்டிபி, தமுமுக, காஸிமி, ஜமாலி போன்றோரின் வாதம் எடுபடவில்லை என்றால் வல்லத்தை விட கூட்டம் குறைந்ததேன்? ஒவ்வோர் ஊரிலும் (நீங்களே வாகனத்தை கணக்கெடுங்கள்! வல்லம் மாநாட்டு வாகனக் கணக்கை நாங்களும் வைக்கிறோம்)

11. பொய்யன் கூட்டத்தினர் முன்னூறு பேர் கூட இல்லை என்று கூறும் நீங்கள் கணக்கெடுத்தீர்களா? 

முன்னூறு பேர் கொண்ட கூட்டம் வெற்றி பெற முடியாதா? 

நீங்கள் இயக்கம் துவங்கிய போது முந்நூறு பேர் இருந்தனரா? 

சிறிய கூட்டம் வெற்றி பெறும் என்று கூறியதெல்லாம் பொய்யா? 

இப்போது கூட்டம் பற்றியும், எண்ணிக்கை பற்றியும் கூறும் நீங்கள் எத்தனையோ பெரிய கூட்டங்கள் தோல்வியுற்றுள்ளன என்று இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டீர்களா?
12. பொறுப்பில் இல்லை என பொய் சொல்லும் நீங்கள், பொறுப்பிலுள்ள தலைவர் அல்தாஃபியை ஓரங்கட்டிவிட்டு புதுடெல்லி சென்று மன்மோகன் சிங்கை சந்திப்பதும், ?? அமைச்சர் இருக்கை தரப்பட்டது எனக் கூறுவதும் உங்களது உள் மன ஆசையை வெளிப்படுத்துவதாக இல்லையா?

13. வல்லம் மாநாட்டு திடல் அளவு தீவுத் திடலைவிட பல மடங்கு சிறியது எனக் கூறுகின்றீர்களே! 100 ஏக்கர் வல்லம் மாநாட்டுத் திடல் 64 ஏக்கர் தீவுத் திடலை (மிலிட்டரி கிரவுண்ட், கிளப், தமிழ்நாடு ஓட்டல் உள்பட) விட பல மடங்கு சிறியதாக இருக்கும்? மாநாட்டு தோல்வியில் மறை கழன்று விட்டதா!

14. பெண்கள் கூடும் மாநாடுகளுக்கு இவர்களை அழைக்காமல் இருப்பது நல்லது என்று கொச்சைப்படுத்துவது கேவலமாக இல்லையா? இதற்கு முன் நீங்கள் நடத்திய மாநாடுகளில் எல்லாம் இப்படி எதுவும் நடந்ததா? பொது மக்கள் மத்தியில் நடந்ததா? பொறுப்பில் உள்ள உங்கள் குடும்பத்தாருக்கு நிகழ்ந்ததா? நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்களா? மாநாட்டிற்கு வந்த மற்ற உங்கள் சகாக்கள் மற்றும் உங்கள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டு உள்ளதே!

பெண்களை மட்டும் பாதுகாத்தால் போதுமா? கடையநல்லூர் மாணவர்களை ததஜ மவுலவிகளிடமிருந்து காத்தது போல் மாநாட்டுக்கு வரும் மாணவர்களை காக்கும் பொறுப்பில்லையா?


15. உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களுக்காக உயிரை எடுக்க ஒரு கூட்டம் இருந்தது அது இப்போது "உள்ளே இருக்கிறது''

உங்களுக்காக உயிரை கொடுக்க ஒரு கூட்டம் இருந்தது அது இப்போது "வெளியே இருக்கிறது''

உங்களோடு இப்போது இருப்பதெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.

உங்களது எந்த நடவடிக்கைக்கும் உங்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம்! இன்ஷா அல்லாஹ் இதுவரை தொடாத பல்வேறு அஸ்திரங்களோடு இது தொடரும். உங்களது உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போடும் வேலை தொடரும்!-செங்கிஸ்கான்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு