கொடி கட்டிப்பறக்கும் குடும்ப வியாபாரம் பீ.ஜே. குடும்ப கொள்ளையை பார்த்து சந்தி சிரிக்கிறது.


வாழ்க ஏகத்துவம்
தந்தைக்கு - எடிட்டிங்
மகனுக்கு - ரிக்கார்டிங்
1. மைத்துனருக்கு - பிரிண்டிங்
2. மைத்துனருக்கு - பப்ளிசிங்
தம்பிக்கு - சம்பளம் + ஏஜென்ஸி
தவ்ஹீத்வாதி - இளிச்சவாயன்
வரும் தேர்தலில் அரசியல் வாதிகளிடம்
பேரம் பேச மாநாட்டின் பெயரில்
மக்கள் பணம் விரயம் 3 க்ரோரு !
அண்ணனின் குடும்ப வியாபராம் படு ஜோரு !

தங்கள் குடும்பத்தினரை அரசிலோ, நிர்வாகங்களிலோ திணிப்பதை அதன் மூலம் பலன் பெறுவதை நல்லமனிதர்கள் யாரும் விரும்பமாட்டார்கள் ! 

நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஒரு அடிமையை உதவியாக கேட்ட பாத்திமா (ரலி) அவர்களுக்கு அடிமையை வழங்காமல் தஸ்பீஹ் கற்றுத்தந்தார்.

பைத்துல் மாலுக்கு சொந்தமான பேரிச்சம்பழத்தை வாயில் போட்ட பேரனை சிறுவர் என்றும் பார்க்காமல். வாய்க்குள் கைவிட்டு துப்பச் சொன்னார்.

தந்தைக்கு சொந்தமான நிலத்தை, தனக்கு பாத்திமா (ரலி) கேட்ட போது கலிபா அபுபக்கர் (ரலி) மறுத்தார்.

ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உமர் (ரலி) தன் மகனை தள்ளிவைத்தார்.

இப்படி வரலாறுகளை நமக்கு சொன்னவர்கள் மற்றும் நாங்கள் தான் நபி வழியில் நடக்கிறோம் என்று சொல்பவர்களின் குடும்ப கொள்ளையை பார்த்து இன்று ஊர் சிரிக்கிறது.

உணர்வு பத்திரிக்கையில் சம்பளமும் பெற்றுக் கொண்டு அதை பிரிண்ட் செய்யும் ஏஜென்ஸியும் யாருக்கு தெரியுமா? ஜூம்மா கூட தொழாத தம்பிக்கு! 

சாதாரண அரசு அலுவலர் கூட அரசின் திட்டங்களின் குத்தகை பணி எடுக்க கூடாது என்பது நடத்தை விதி ! இதைக் கூட பின்பற்றாத இவர்கள் ஏகத்துவாதிகளாம்.

மைத்துனர்கள் குறைந்த அளவு கொட்டேஷன் கொடுத்தார்களாம் எப்போது அறிவிப்பு செய்து ஏலம் விட்டீர்கள் ! மூன் பப்ளிகேஷன் விளம்பரத்திற்கும் காலண்டர் மற்றும் குடும்ப நிறுவனங்களின் விளம்பரத்திற்கு காசு கொடுத்ததுண்டா ? 

5 வருட கணக்கை காட்டத் தயாரா என நாம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை ! ஜமாத்தின் பணத்தில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் உணர்வு போன்ற பத்திரிக்கைகளிலும் குடும்ப வியாபார நிறுவனங்களான, சன், மூன் விளம்பரத்திற்கு பணம் வசூலிக்காதது ஏன் ? 

எடிட்டிங்கில் ரூ.2,000 மட்டும் தான் கிடைக்கிறதாம். பாவம் ! ஏற்கனவே இதுபோன்று சொல்லியபோது நஷ்டம் என்றால் அதை நான் நடத்துகிறேன். என்று சொன்ன ஒருவரை ஆஹா என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா? என்று “ஜமாஅத்தை விட்டு விலகி விடுங்கள் இல்லையென்றால் விலக்க வேண்டியிருக்கும்” என்று சொன்னார். 

இப்போது ஜமாஅத்தே எடிட்டிங் எடுத்து நடத்த விருப்பதாக கேள்வி. இப்போது என்ன செய்வார்? இவர் ஜமாஅத்தை விட்டு விலகி விடுவாரோ? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் அது மான ரோஷமுள்ளவர்கள் செய்யும் வேலை ! 

காலெண்டர் விஷயத்தியில் குட்டுப்பட்டும் திருந்தவில்லையே! ஏனென்றால் கடந்த தேர்தலில் ஜெவிடம் பெற்ற தொகையில் பெரும்பகுதி குடும்ப கொள்ளை கூட்டதிற்கு தான் சென்றது. பிரச்சார செலவு (பிளைட் பயணம்) பிரிண்டிங், கொடி, சீருடை என வரும் தேர்தலிலும் வசமாய் மாட்டுகிறவனிடம் கறக்க வேண்டுமே. 

தயாநிதியும், ரித்திசும், தந்த நிதி இப்போது தான் களமிறக்கி விடப்பட்டு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்களாகவும் நோட்டீஸ், பேனர், போஸ்டர்களாகவும் காட்சி தருகின்றது.

இது இப்போது செய்யும் முதலீடு இது வரும் தேர்தலில் பலமடங்காக திரும்ப வரும், அதையும் அன்வரிடம் கொடுத்து பணம் பண்ணலாம். தேவைப்படும் போது மீண்டும் களமிறக்கலாம். எல்லவாற்றையையும் ஏகத்துவத்திற்காக ஏற்றுக் கொண்ட ஒரு தக்லீது கூட்டம் இருக்கும் வரை குடும்ப வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு