இறுதி வெற்றி யாருக்கு?
நம்பிக்கை உடையவர்களே! பொறுமையுடன் இருங்கள்
(இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; சகிப்புத் தன்மையில்
(மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! (எதிரியை எதிர்க்க)
எந்நேரமும் தயாராக இருங்கள். அசத்தியவாதிகளுக்கு
எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும்
ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர்
உறுதியாக இருந்து கொள்ளுங்கள் மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு
அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்களே வெற்றியடைவீர்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2009/05/blog-post_16.html
-------------------------------------------------------------------------https://mdfazlulilahi.blogspot.com/2009/05/blog-post_16.html
.நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களை விடுத்து (உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர) மற்றவர்களை உற்ற நண்பர்களாக, (உங்கள் அந்தரங்க நண்பர்களாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும்
குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள்
உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே
வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக
நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள்
உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
நீங்களோ அவர்களை நேசிக்கிறீர்கள். அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். அவர்கள் உங்களைக் காணும்போது 'நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். தனித்திருக்கும்போது உங்களுக்கு எதிராக கோபத்தின் காரணமாக நகங்களைக் கடிக்கின்றனர். 'உங்கள் கோபத்தின் காரணமாகச் செத்து விடுங்கள்! உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது
அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக
அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால்
அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ்
அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 3:120 .
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும்
(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்;
எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி
மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். 2:45.
2:153 .நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்)
உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்
2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள்
ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர்
நன்மாராயங் கூறுவீராக!
துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்)
கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும்
இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்;
இன்னும் அவர்கள் தாம்
முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).2:177
''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங்
கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும்
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.2:249
3:146 .மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள்
(என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர்
செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால்
அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம்
அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:153 .(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து
இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல்
மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு
நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை
உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச்
சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க
வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும்,
அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக
இருக்கின்றான்.
3:154 .பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக
நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது.
மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி
விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம்
கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; ''இ(ப்போர்)க்
காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?'' (என்று, அதற்கு)
''நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று
(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத்
தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; ''இக்காரியத்தால்
நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;'' ''நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு
மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும்
இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!'' என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு
ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள்
நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ்
உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
3:186 .(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள்
ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம்
கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும்
செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்)
பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத்
தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும;
3:165 .இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள்
(பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த
போதிலும், ''இது எப்படி வந்தது?'' என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது
(வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும்
பேராற்றலுடையவனாக இருக்கிறான்,''
3:166 .மேலும்,
(நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு
கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின்
அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து)
அறிவதற்காகவேயாம்.
8:46 .இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும்
கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு
கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்;
உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச்
சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
8:47 .பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள்
வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை
அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள்
ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
8:65 .நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில்
பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும்
உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி
கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத
மக்களாக இருப்பது தான் (காரணம்).
8:66 .நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம்
அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும்
(சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது
வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின்
உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் -
(ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
11:11 .ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர்
நற்கருமங்கள் செய்கின்றார்களோ,
அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான
நற்கூலியும் உண்டு.
7:128 .மூஸா தம் சமூகத்தாரிடம்; ''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும்
பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன்
அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்'' என்று கூறினார்.
11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம்
இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன்
இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில்
(நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக!
நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
12:111 .(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல)
படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக
இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும்
இது விவரித்துக் காட்டுவதாகவும்,
நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும்
இருக்கிறது
20:132. (நபியே!) உம் குடம்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!
(தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு
கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச்
சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
இறுதியாகச் சிறந்த நிலை
பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
3:200, 3:118 , 3:119
Comments