ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும்.
சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும்.
ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்று 1995ஆம் ஆண்டு எழுதிய அருட்செல்வன் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது தேர்தலில் போட்டியிடுவதால் அவர் இப்பொழுது அந்தக் கருத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
அருட்செல்வன் எழுதுவதற்கு முன்பே இந்த வாதம் வைக்கக் கூடியவர்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதத்தை நிலை நாட்ட நீண்ட நெடுந் தொடர்களையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாதத்தின் மூலம் ஜனநாயகம் என்றாலே ஷpர்க். ஜனநாயகம் என்ற வார்த்தையே ஷpர்க். ஜனநாயகம் என்றாலே ஹராம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு முதல் காரணம் ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பது தெரியாததுதான். ஜனநாயகம் என்பதை ஒரு மந்திரச் சொல்லாகவே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெரிய வைத்து விட்டால் அந்த மாயை தமிழ் மக்களை விட்டும் விலகி விடும். அந்த தாக்கம் தனாக தகர்ந்து விடும் இன்ஷhஅல்லாஹ். எனவே ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் பார்ப்போம்.
ஜனம் என்றால் மக்கள் என்று அர்த்தம். நாயகம் என்றால் தலைவர், தலைமை என்று அர்த்தம். ஜனநாயகம் என்றால் மக்கள் தலைவர், மக்கள் தலைமை என்று அர்த்தம். தமிழ் மக்களுக்கு புரியும்படியான மக்கள் தலைமை என்ற வார்த்தையை பயன்படுத்தி ஹராம், ஷpர்க் என்ற வாதம் வைத்திருக்க வேண்டும் அப்படி வைத்திருந்தால் மக்கள் தலைமை ஹராமா? மக்கள் தலைமை ஷpர்க்கா? எப்படி என்ற எதிர் கேள்வி விரைவாக வந்திருக்கும்.
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்பார்கள். இஸ்லாமிய ஆட்சி என்ற கோஷத்தையும் வைப்பார்கள். கோஷம் நன்றாகத்தான் இருக்கிறது. மார்க்கத்தை பேணக் கூடிய பேணாத எல்லா தரப்பு முஸ்லிம்களையும் எளிதில் ஈர்க்கக் கூடிய கோஷம்தான் இது. எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விரும்பக் கூடிய கோஷமாகத்தான் இருக்கிறது.
ஒரு நாட்டை இஸ்லாமிய சட்டம்தான் ஆள வேண்டும் என்றால் முதலில் சட்ட திட்டங்களை வகுக்கக் கூடிய அதிகாரத்துக்கு முஸ்லிம்கள் வர வேண்டும். அதற்கு முதல்படி ஆட்சியில் அமர்வது. இந்த வாதக்காரர்கள் கூற்றுப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வருவது ஹராம், ஷpர்க் என்றாகி விட்டது. அப்படியானால் இஸ்லாமிய முறைப்படி ஆட்சிக்கு வருவது எப்படி? ஆட்சியில் அமர்வது எப்படி? எந்த முறையில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று இஸ்லாம் கூறி இருக்கிறது என்பதை இந்த வாதக்காரர்கள் கூற வேண்டும். இது பற்றி அவர்கள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்த மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனது எப்படி? இந்தக் கேள்விக்கு ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள். அனைத்து தரப்பு மக்களாலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் தலைவராக இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களா? பலாத்கார முறையில் மக்களை அடக்கி மதீனாவின் ஆட்சியை கைப்பற்றினார்களா? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் முஹம்மது நபி ஒரு சர்வாதிகாரி என்றும் இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போலவா.
இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மக்காவில் அவர்கள் குடும்பத்தார் நிறைந்து இருந்த மக்காவில் இருந்தவரை ஆட்சியாளராக ஆகவில்லை. இறுதி நபி ஆட்சிக்கு வந்த முறையை ஆய்வு செய்தாலே போதும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பது இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கை என்பதும் விளங்கி விடும். இஸ்லாத்தை களங்கப்படுத்த இஸ்லாத்தின் எதிரிகள் கட்டி விட்ட புத்தக கதையை நம்மவர்கள் தூக்கி சுமக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.
மதீனாவில் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியாளராக ஆனதே ஜனநாயக(ம் எனும் மக்கள் தலைமை) வழியில்தான். அப்படி இருக்கும்போது ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதம் தவறானது என்பதை நிரூபிக்க நீண்ட நெடுந் தொடர்களை எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் வாதம் என்ற பெயரில் வலம் வந்து விட்டதால் அந்த வாதங்கள் எப்படியெல்லாம் சொத்தையானது என்பதை விளக்கியே ஆக வேண்டும். பதில் அளிக்கா விட்டால் அந்த சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும். எனவே அந்த சொத்தை வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

Comments