தமுமுக சார்பில் அரசியல் கட்சி.

தமுமுக சார்பில் அரசியல் கட்சி தொடங்க திட்டம்
ஞாயிற்றுக்கிழமை, மே 11, 2008


நெல்லை: தமுமுக சார்பில் புதிய கட்சி தொடங்கப்படும் அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் பொதுகூட்டம் நடந்தது. இதுகுறித்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமுமுக சார்பில் பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறோம். எங்களது அமைப்பு தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று இருந்தோம். ஆனால் அந்த நிலை மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மக்களுக்காக எந்த விதமான சமுதாய பணிகளையும் மேற்கொள்வதில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் நலத் திட்டங்கள் செய்திட தமுமுக சார்பில் தனி கட்சி, புதிய கொடி ஆகியவற்றை விரைவில் அறிமுகபடுத்துவோம்.

எங்களது கட்சி சார்பில் உள்ளாட்சி முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை போட்டியிடுவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று எங்களால் ஒதுங்கி போக முடியாது. அந்த சாக்கடையை நாங்கள் விரைவில் சுத்தம் செய்ய இருக்கிறோம். இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்று யாராவது கூறினால் அது தவறு. அரசியல் அமைப்புகளில் யாரும் எளிதாக உறுப்பினராக முடியாது. நம்மிடம் 10 எம்எல்ஏக்கள் மற்றும் 5 எம்பிக்கள் இருந்தால் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் நம்முடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்றி பெற முடியும் என்றார்.

நன்றி;Abu Yahya http://thatstamil.oneindia.in/news/2008/05/11/tn-tmmk-plan-to-become-a-political-party.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு