தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?
கஞ்சா அடித்து விட்டு பஞ்சா தூக்கிடும் பஞ்சமாபாதக செயலை செய்கிறது இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டம். பஞ்சாவில் வைக்கப்படும் சிறுவர்களுக்கு கஞ்சா கொடுக்கிறார்கள். கஞ்சா மயக்கத்திலேயே 6 மணி நேரம் குதிரை மீது அமர வைத்து நகர் வலம் செல்கிறார்கள். பஞ்சாவில் இருப்பவருக்கு சிறு நீர் கழிக்க வேண்டி இருந்தால் குதிரை மீது இருந்தபடியே கழிக்கச் செய்கிறார்கள். குதிரைகள் கால்களில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி குதிரைகளை சித்திரவதை செய்கிறார்கள் .
இந்த பஞ்சா நெல்லை மாவட்டம் தென்காசி, ஏர்வாடி போன்ற பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. மேலப்பாளையத்தில் இன்னும் ஒழிக்கப்டவில்லை. பஞ்சாவை ஒழித்து அந்த இடத்தை நூலகமாக ஆக்க வேண்டும். இந்தப் பணியை தக்வா தவ்பா ஜமாஅத் செய்து முடிக்குமா?



Comments