துபையில் அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அபு அப்துல்லாஹ்வின் துவக்க உரையும் நிறைவுரையும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் தாயகத்திலிருந்து துபை வழியாக ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு மீண்டும் துபை வந்துள்ளார்கள். ஒரு மாத காலம் துபையில் தங்கி பிரச்சாரப் பணி செய்ய உள்ளார்கள். பிறகு குவைத் சென்று பிரச்சாரப் பணிகள் செய்து விட்டு தாயகம் திரும்ப உள்ளார்கள். அவரது துபை போன் நம்பர் 050 -5749048, 04-2718651
அபு அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை.
10-01-2007 புதன் கிழமை அதிகாலை 2 மணிக்கு கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் பேமிலி ஹாலில் நடந்த இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அபு அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இஸ்லாமிய பிரச்சார கூட்ட துவக்கமாக அமைந்து விட்டது.
அப்போதைய அந்நஜாத் நிர்வாகி அபு அப்துல்லாஹ் அவர்கள் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எதிர்பாராவிதமாக திடீரென துபை வந்தார்கள். அப்பொழுதுதான் ரெஸ்ட்ராரண்ட் ஊழியர்களுக்காக கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட்டில் இரவு 2 மணிக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதுதான் பைசல் ரெஸ்ட்ராரண்ட்டில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சார கூட்ட துவக்கமாக அமைந்து விட்டது. அதற்கு முன்பு வரை ஆண்டுக்கு ஒரு முறை மீலாது விழா கூட்டம் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
24 மணி நேரமும் இயங்கும் இஸ்லாமிய லைப்ரரியாக ஆகி விட்டது.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நஜாத் ஆசிரியர் (அப்போது அந்நஜாத் நிர்வாகி) அபு அப்துல்லாஹ் அவர்கள் செய்த குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரத்துக்குப் பின் கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட்ட 24 மணி நேரமும் இயங்கும் இஸ்லாமிய லைப்ரரியாக ஆகி விட்டது. அமீரகத்தில் எந்த தவ்ஹீது மர்க்கஸ்களும் இல்லாத காலத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் தவ்ஹீது மர்க்கஸ்ஸாக ஆகி விட்டது.
வியாபார நோக்கின்றி.
எந்த நேரம் வந்தாலும் இலங்கை வான் சுடர், அந்நஜாத், அல் ஜன்னத், புரட்சி மின்னல், வான் சுடர் மதுரை பதிப்பு, முஸ்லிம் பெண்மணி என அவ்வப்போது வந்த மாத இதழ்கள். ஆடியோ, வீடியோ கேஸட்கள் என அனைத்து பிரச்சார சாதனங்களை வெளியிடும் இடமாகவும், இலவசமாகவும் வியாபார நோக்கின்றி விலைக்கும் கிடைக்கும் இடமாகவும் ஆனது.
பெரம்பலூர் நஸர் அலிகான்.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் பிரச்சாரம் செய்த அன்றிலிருந்து வார வாரம் பிரச்சாரம் நடை பெற்று வந்தது. இந்த வாராந்திர நிகழ்ச்சியில் த.மு.மு.க. சார்ஜா கிளைத் தலைவர் பெரம்பலூர் நஸர் அலிகான், அவர்கள் மட்டும் தியாக உணர்வுடன் இரவு 2 மணிக்கு வந்து 200க்கும் மேற்பட்ட வாரங்களில் பல தலைப்புகளில் பேசி இருக்கிறார்கள்.
த.மு.மு.க. யு.ஏ.இ. தலைவர் அப்துல்ஹாதி.
மேலப்பாளையம் மவுலவி நிஜாமுத்தீன் மஹ்ழரி, மவுலவி எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜி, மவுலவி பூலி ஷம்சுல் லுஹா ரஹ்மானி, மவுலவி பூலி காஜா மைதீன் பிர்தவ்ஸி, த.மு.மு.க.யு.ஏ.இ. தலைவர் அப்துல்ஹாதி, திருச்சி அப்துர்றஹ்மான், திருச்சி அக்பர் அலி, திருச்சி யூசுப், குணங்குடி ஹனீபா மகனார் சுல்தான் உட்பட பல மார்க்க அறிஞர்கள் பேசி இருக்கிறார்கள்.
முஸ்லிம் லீக் தலைவர் அ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாஹிப்.
இந்த வதராந்திர இஸ்லாமிய பிரச்சார நிகழ்ச்சி சில நேரங்களில் துபை வரும் அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியாகவும் ஆகி இருக்கிறது. முஸ்லிம் லீக் தலைவர் அ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் 3 முறை உரையாற்றி இருக்கிறார்கள். முதன் முதலில் 1988 ஆ ம் ஆண்டு முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் மேலப்பாளையம் சாந்து காஜா மைதீன் எம்.பி. அவர்களுடன் வந்திருந்தபோது உரையாற்றினார்கள்.
மைதீன் மதனி.
1994 ஆகஸ்டில் துபை வந்த அப்பொழுது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் M.L.A. அவருடன் வந்த சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் சிவபதி M.L.A. ஆகியோர் உரையாற்றி இருக்கிறார்கள். மைதீன் மதனி அவர்கள் எம்.எல்.ஏ.க்களுடன் ஒரு முறையும் அ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்களுடன் 2 முறையும் வந்து உரையாற்றி இருக்கிறார்கள். முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் நெல்லை மஜீத் 2 முறை உரையாற்றி இருக்கிறார்கள்.
த.மு.மு.க. பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் .
1997, 2006 என இரண்டு முறை வந்திருந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் இரண்டு முறையும் உரையாற்றியதுடன் இரண்டு முறையும் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் ஊழியர்களுடன் கலந்துரையாடல் செய்திருக்கிறார்கள். 2005இல் வந்த த.மு.மு.க. மாணவரணி தலைவர் ஹாஜா கனி அவர்கள் உரையாற்றி இருக்கிறார்கள்.
அமைச்சர் மைதீன் கான்.
தேசிய லீக் தலைவர்கள் சுலைமான் சேட், அப்துல் லத்தீப் ஸாஹிப் ஆகியோர் வந்தார்கள். அசதியினால் உரையாற்றவில்லை. இறுதியில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதுபோல் அமைச்சர் மைதீன் கான் அவர்களும் வந்தார்கள். அசதியினால் உரையாற்றவில்லை. அவரது நிகழ்ச்சியும் இறுதியில் ரத்து செய்யப்பட்டது.
முடித்து வைத்தவன்.
இப்படி பல நிகழ்ச்சிகள் நடை பெற்று வந்த அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் 2006 ஆகஸ்ட இறுதியில் இடிக்கப்பட இருந்தது. எனவே கடைசி நிகழ்ச்சிக்கு கீழை புகாரி அவர்களை அழைத்து இருந்தோம். ரொம்ப வேதனைப்பட்டார். துவக்க நிகழ்ச்சிக்கு அழைத்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். முடிவு நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டீர்களே. பிரச்சார கூட்டத்தை முடித்து வைத்தவன் என்ற பெயர் அல்லவா வரும் என்றார்.
முடிவுரையா? நிறைவுரையா?
முடிவு என்பது வேறு நிறைவு என்பது வேறு. முடிவு என்றால் அத்துடன் முடிந்து விட்டது. நிறைவு என்றால் அப்படி அல்ல. ஒன்றில் நிறைந்து விட்டால் மற்றொன்றில் துவங்கப்படும். எனவே இதை முடிவு நிகழ்ச்சி என எண்ணாதீர்கள். இது நிறைவு நிகழ்ச்சி என்றேன். அல்லாஹ்வின் நாட்டம் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் இடிப்பு 2006 டிசம்பர் 31 என்று ஆனது. டிசம்பர் 31 2007 ஜனவரி 15 என்று ஆனது. இந்த நிலையில்தான் துபை வழியாக ஹஜ்ஜுக்குச் சென்ற அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்கள் மீண்டும் துபை வந்துள்ள செய்தி கிடைத்தது.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அல்லாஹ்வின் நாட்டம் 1987இல் எதிர்பாராவிதாக துபை வந்த எந்த அபு அப்துல்லாஹ் அவர்களைக் கொண்டு கிஸஸ் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட்டில் இரவு 2 மணிக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய பிரச்சாரம் துவங்கப்பட்டதோ அதே அபு அப்துல்லாஹ் அவர்களைக் கொண்டு 2007 ஆம் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
Comments