மஸ்ஜிதுர்றஹ்மான் முன்னாள் பொருளாளர்

தருநர்:-  
      மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஸாதி, 9443581777
      முன்னாள் பொருளாளர்,
      மஸ்ஜிதுர்றஹ்மான், 
      91. வெள்ளை கலீபா ஸாஹிப் தெரு 
      மேலப்பாளையம்.

பெருநர்:-
       உயர் திரு ஆய்வாளர் அவர்கள், 
       கிரைம் பிராஞ், 
       மேடை போலீஸ் ஸ்டேசன், 
       பாளையங்கோட்டை.
       
மஸ்ஜிதுர்றஹ்மான் எனும் பள்ளிவாசல் கட்டுவதற்காக மேலப்பாளையத்தில்  உள்ள 11.ஏ. ராவுத்தர் கீழத் தெரு என்ற இடத்தை J.A.Q.H.  1993 இல் வாங்கி உள்ளது. 1995 இல் கட்டிடப் பணியை துவங்கியுள்ளது. 

இந்த பள்ளியின் கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்வதற்காக மவுலவி சம்சுல் லுஹா றஹ்மானி என்பவரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்கள். மேற்பார்வை வேலைக்கு சேர்க்கப்பட்ட சம்சுல் லுஹாவிடம் மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிடப் பணிக்காகும் செலவுத் தொகையையும்; J.A.Q.H.  அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறது. பள்ளி கட்டிடத்திற்கான முழுமையான பணத்தையும் கொடுத்து விட்ட நிலையிலும் கட்டிடம் முழுமை பெறவில்லை. 

இந்த உண்மைகளை மறைத்து இடையில் நிற்கும் பள்ளிவாசல் கட்டிடத்தை முழுமையாக கட்ட ஆலோசனை என 14-01-2000 வெள்ளிக்கிழமையன்று ஒரு கூட்டம் கூட்டினார். அந்த கூட்டதிற்கு பி.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தலைமை தாங்கினார். 

அந்த கூட்டத்தில் MASJIDUR RAHMAN EXECUTIVE COMMITTEE  எனும் பெயரில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதுவே பள்ளி நிர்வாகக் கமிட்டியாகவும் ஆக்கப்பட்டது. அதில் நான் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டேன். 

14-01-2000 வரையிலான வரவு செலவு கணக்குகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கூறப்பட்டது. கணக்குகளை கம்யூட்டரில் போட்டு ஆடிட் செய்து 3 மாதத்தில் ஒப்படைப்பதாக சம்சுல் லுஹா கூறினார். 

கூட்டத்தில் ஒப்புக் கொண்டபடி 3 மாதங்கள் கடந்த பின்னரும் கணக்குகளை ஒப்படைக்காத சம்சுல் லுஹா 14-01-2000க்குப் பிறகுள்ள வரவு செலவு கணக்குகளையும் அவரே பார்த்து வந்தார். 

பழைய கணக்குகள் இருக்கட்டும் நடப்பு வரவு செலவுகளை நான் பார்க்கிறேன் என்றதற்கு அதையும் தரவில்லை. 14-01-2000 வரையிலான வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்து விட்டு இதையும் சேர்த்து ஒப்படைக்கிறேன் என்றார். 

இப்படியே அவ்வப்போது நாட்களை கடத்தி வந்த லுஹா கணக்கு கேட்பவர்களுக்கு எதிராக கோஸ்டிகளை சேர்த்து வந்தார். இந்த சூழலில்தான்  J.A.Q.H.யின் அப்போதைய மேலப்பாளையம் அமீர், சம்சுல் லுஹா செய்துள்ள மோசடியால்தான்  பள்ளி கட்டிடம் பாதியில் நிற்கிறது என்று போட்ட நோட்டீஸ் பற்றி சிந்திக்க ஆரம்பித்தோம். 

இதைச் சுட்டிக் காட்டி கணக்குகளை கேட்டதற்கு இப்படி குற்றச்சாட்டுகள் வந்துள்ளதால் பள்ளிவாசல் கட்டிடப் பணியை முழுமையாக முடித்து விட்டுத் தருகிறேன் என்றார் லுஹா. 

இந்த நிலையில் லுஹாவின் கணக்கு வழக்குகள் சரி இல்லை. பள்ளி பணத்தை வேறு வகைகளுக்குப் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாக 28-8-2001 அன்று பி.ஜெய்னுல் ஆபிதீன் என்பவரும் ஜமாஅத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

2001 டிசம்பரில் குவைத் போகிறேன். பள்ளிக்கு பக்கத்தில் உள்ள இடத்தை வாங்குவதற்கு வசூல் செய்து விட்டு வருகிறேன் என்றார் லுஹா. பழைய கணக்குகளை ஒப்படைக்காமல் எந்த வசூல் செய்வதற்கும் செல்லக் கூடாது என்றதற்கு நெஞ்சில் அடித்து அழுதார். ஓரு மவுலவி நெஞ்சில் அடித்து அழுகிறார் என்றதும் கமிட்டியினர் மனம் இறங்கி விட்டனர். 

குவைத் சென்ற அவர் அங்கு எதுவும் வசூல் ஆகவில்லை என்றார். பிறகு அங்கிருந்து யு.ஏ.இ. (துபை) சென்றுள்ளார். அங்கும் வசூல் ஆகவில்லை என்றார். ஆனால் யு.ஏ.இ.யில் உள்ளவர்களிடம் யு.ஏ.இ.க்குட்பட்ட ஜார்ஜாவில் கடை வைத்திருக்கும் லுஹாவின் தம்பி காஜாமைதீன் என்பவரிடம் பள்ளிக்கு இடம் வாங்க நன்கொடை கொடுக்கும்படி கூறி வந்துள்ளார். 

லுஹாவின் சொல்படி அவரது தம்பி காஜாமைதீன் என்பவரிடம் பள்ளிக்கு இடம் வாங்க பலரும் நன்கொடைகள் கொடுத்துள்ளனர். நன்கொடைகள் கொடுத்துள்ள சிலருக்கு ரசீதுகள் அனுப்பாமல் லட்டர் பேடுகளில் பணம் பெற்றுக் கொண்டதாக கடிதம் கொடுத்துள்ளார். 

2002 ஜுனில் தாயகம் வந்த லுஹாவின் தம்பி காஜாமைதீனிடம் பணம் கொடுத்து விட்டவர்களுக்கு 5, 6 மாதங்கள் முன் தேதியிட்டு ரசீது கொடுத்தனுப்பியுள்ளார். 

பள்ளிக்கு இடம் வாங்க என்று துபையிலிருந்து மட்டும் காஜா மூலம் 10 லட்சத்திற்கு மேல் வந்துள்ளதாக அறிந்தோம். பள்ளியின் வங்கி கணக்கில் வந்து விடா வண்ணம் எல்லாவற்றையும் ஹவாலா மூலமே வரவழைத்துள்ளார் லுஹா. 

பொருளாளர் என்ற முறையில் பலர் என்னிடம் முறையிட்டனர். எனக்கும் மானப் பிரச்சனையாக ஆனது. வெளி நாட்டிலிருந்து வந்த பண விபரங்களையும் 14-01-2000 கூட்டத்தில் முடிவு செய்தபடி எல்லா கணக்குகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினேன். 

எனவே எனக்கு எதிராக கோஸ்டி சேர்த்து வந்தார். திடீரென 26.01.2004  திங்கள் அன்று தர்பியா நிகழ்ச்சி என்று ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் அவரது கோஸ்டிகளை அதிகமாக வர வைத்து அதை பொதுக்குழு என அறிவித்து என் போன்றோரை நீக்கினார்.  

பள்ளிக்கு இடம் வாங்க என்றும் பள்ளி கட்டிடப் பணிக்கென்றும் வசூலித்து லுஹா பல லட்சங்கள் மோசடி செய்துள்ளது உண்மை என்பதை உணர்ந்தேன். சரியான ஆதாரங்கள் கிடைக்காததால்  நான் காவல் துறையில் புகார் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். 

இந்நிலையில் 29-11-2005 அன்று J.A.Q.H. மேலப்பாளையம் கிளை சார்பாக அதன் செயலாளர். நெல்லை மாநகர கமிசனரிடம் ஒரு பெட்டிசன் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷனுடன் கீழே குறிப்பிட்டுள்ள ஆதாரங்களையும் இணைப்பாக  கொடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:- 

வெளிநாட்டவர்களிடமிருந்து வந்த பணங்களை  பெற்று விட்டு பொருளாளராக இருந்த எனக்குத் தெரியாமல் லுஹா மட்டும் கையெழுத்திட்டு (பொருளாளர் கையெழுத்தின்றி) அனுப்பியுள்ள ரசீதுகளின் காப்பிகளை இணைப்பாக  கொடுக்கப்பட்டுள்ளது.  ரசீது நம்பர், திர்ஹம், இந்திய மதிப்பு கீழே உள்ளது. 

பில் ந{ர் திர்ஹங்கள் இந்திய ரூபாயின் மதிப்பு
2318 810 10,000.00
2321 300 3,750.00
2322 100 1,250.00
2323 300 3,750.00
2325 100 1,250.00
3703  2,700 33,750.00

அஹ்மது இமாம் என்பவரிடம் ரூபாய் 5000 பெற்றுள்ளார். இதற்கு, மஸ்ஜிதுர் - ரஹ்மான் கட்டட வளர்ச்சி நிதி ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், 20, அத்தியடி கீழத் தெரு, மேலப்பாளையம் என அச்சிட்ட ரசீது கொடுத்து உள்ளார். 

ரசீது எண் 270. ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் பெற்றுக் கொண்டு ரசீது அனுப்பாமல் மேலப்பாளையம் ஜாக் என்ற லட்டர் பேடில் கடிதம் மட்டும் லுஹா கொடுத்துள்ளார் என்பதற்குரிய ஆதாரம். ரசீதுகளில் நம்பர் இல்லாமல் மஸ்ஜிதுர் றஹ்மான் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ள  ரசீதுகளில் 2 ரசீதுகள்.


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சார்பில் மாநாடு நடத்தப் போவதாக வெளிநாடுகளுக்கு நன்கொடை கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் பொருளாளர் என்று எஸ். ஹெச். அப்துல் காதர் பார்ட்னர் எஸ். ஆர். டிரஸ்ஸஸ் என உள்ளது. 

அவருடைய செல் நம்பர் 9444413440க்கு போன் போட்டுக் கேட்டால் எனக்குத் தெரியாது என்கிறார். அதில் இணைச் செயலாளராக போட்டுள்ள ரிபாஈ பாஸி,ரஷாதி 9443581777 என்ற எனது எண் உள்ளது. இப்படி ஒரு லட்டர் பேடையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அதில் கவுரவத் தலைவராக போட்டுள்ள நிஜாமுத்தீன் ஆலீமை 2352145 என்ற எண்ணுக்கு போன் போட்டுக் கேட்டால் இந்த லட்டர் பேடு  பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். 

இந்த விபரங்கள் J.A.Q.H. மேலப்பாளையம் கிளை சார்பாக செயலாளர் செய்யது அஹமது ஸலபி நெல்லை மாநகர கமிசனரிடம் கொடுத்துள்ள பெட்டிசனுடன் இணைப்பாக உள்ளது. 

நான் பொருளாளராக இருந்த நிலையில் எனக்குத் தெரியாமல் மஸ்ஜிதுர்றஹ்மான் எனும் பெயரால் லுஹா செய்துள்ள மோசடிகள் மீதும், எனக்குத் தெரியாமல் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா என்ற அமைப்பின் பெயரால் வசூலித்த லட்டர் பேடில் என் பெயர் பயன்படுத்தியுள்ளதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
இப்படிக்கு:-
மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஸாதி,


முன்னாள் பொருளாளர்,
மஸ்ஜிதுர்றஹ்மான்,
91.வெள்ளை கலீபா ஸாஹிப் தெரு
மேலப்பாளையம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு