யு.ஏ.இ. த.மு.மு.க. எழுச்சியும் எதிரிகளின் வீழ்ச்சியும்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 23-07-2005 கண்ணியத்ததிற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க. மாநில செயலாளர் தமீமுல் அன்சாரி, த.மு.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ஹாஜா கனி ஆகியவர்கள் 18-07-2005 அன்று மாலை 5 மணிக்கு துபை வந்து சேர்ந்தார்கள். யு.ஏ.இ.யின் அனைத்து கிளைகளிலிருந்தும் பெரும்பாலான பொறுப்பாளர்கள் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்கள். வந்ததிலிருந்தே தாயக செயல்பாடுகள் பற்றி கிளைப் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கேட்கக் கேட்க, வந்தவர்கள் பதில் சொல்லிக் கொண்டே இருக்க திங்கள் சென்று செவ்வாயும் பிறந்து உதயத்தையும் நெருங்கி விட்டது. ஆம் அறிவிக்கப்படாத கிளைப் பொறுப்பாளர்கள் மாநாடு விடிய விடிய நடந்து விட்டது. 21-07-2005 வியாழன் அன்று அல் அய்னில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாநில செயலாளர் தமீமுல் அன்சாரி அவர்களும் அதே நாளில் ஷார்ஜாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் த.மு.மு.க. மா...