அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும் அற்ப வியாபாரி செயலை ஷிர்க் என்பதா? இறை(வார்த்தை) நிராகரிப்பு என்பதா
பி.ஜே. அவர்கள் வெளியிட்டுள்ள தர்ஜுமாவில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி இதுவரை இரு இதழ்கள் வெளியிட்டுள்ளோம். இவற்றைப் படித்தவர்களில் நியாயவான்களெல்லாம் வரவேற்று இது ஒரு வித்தியாசமான ஆய்வு என்று பாராட்டினார்கள். பலர் காப்பிகளாக எடுத்து வினியோகித்துள்ளார்கள். சிலர் புத்தமாக வெளியிட உள்ளதாகவும் அதற்கு அனுமதி உண்டா என்றும் கேட்டார்கள். நான் ரகசிய ராயல்டியோ அந்தரங்க கூலியோ வாங்கும் கூட்டத்தைச் சார்ந்தவனல்லன். எனவே தாராளமாக வெளியிடுங்கள் என்று கூறினேன். அந்த அளவுக்கு நமது முந்தைய வெளியீடுகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் பி.ஜேயை கண் மூடித்தனமாக பின்பற்றக் கூடியவர்களிடம் கடுமையான எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இந்த எதிர்ப்பைக் கூட மொட்டைக் கடித கூட்டத்தினர் பப்ளிக் பூத்திலிருந்துதான் காட்டினார்கள். எழுத முடியாத கொச்சை வார்த்தைகள் அதிலும் பொறுக்கி எடுத்த பச்சை வார்த்தைகள்தான் அவர்களது எதிர்ப்பில் வெளிப்பட்டன. http://mdfazlulilahi.blogspot.com/2005/05/blog-post.html அவர்கள் பேசுவதெல்லாம் பச்சையானது கொச்சையானது. பார்ப்பதெல்லாம் புளுவானது. படிப்பதும் எழுதுவதும் மஞ்சல்களானத...