நீங்கள் நியாயவான்கள் இறையச்சமுடைவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வாருங்கள்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 21-12-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தஞ்சாவூர் மாவட்டம் ஆவூரைச் சார்ந்த மன்சூர், சலீம் ஆகியவர்களுக்கு கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி எழுதிக் கொள்வது bsaleem_storm2002@yahoo.com என்ற முகவரியிலிருந்து வந்த உங்கள் இ.மெயிலை இன்று காலை கண்டேன். 20 நாள் மருத்துவ லீவில் வந்த நான் பி.ஜே.யின் பகிரங்க அழைப்பை சந்திக்கத்தான் எனது பயணத்தை ஒத்தி வைத்தேன். அடுத்தடுத்து வந்த பணிகளால் பயணத்தை ஒத்தி வைத்த நான், இறுதியாக வரலாற்று சிறப்புமிக்க டிசம்பர் 10க்காக பயணத்தை ஒத்தி வைத்தேன். இப்பொழுது 25-12-2005 அன்று பயணம் செல்ல உள்ளேன். இந்த நிலையில் உங்கள் மெயில் வந்துள்ளது. இலாஹியுடன் முபாஹலாவுக்குத் தயார் என்ற உங்கள் மெயிலைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. இப்படிப்பட்ட அறிவாளிகள் உள்ளதால்தான் பி.ஜே.யால் த.த.ஜ. நடத்த முடிகிறது. ஒரு கொள்கைப் பிரச்சனையை ஒட்டி...