மஞ்சள் பத்திரிக்கைகளை மிஞ்சும் வகையில் 'முன்பை விட வீரியமாக'
அபு-ஜஹில் என்றால் தவ்ஹீத் ஜமாத்தும் அந்த நிர்வாகி ஒருவருமா? என்னதான் சொல்ல வருகிறார்கள்!?
சென்னையிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்று சமீப காலமாக முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோட்டு, முஸ்லிம்களின் வலிமையை சிதைத்து, சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் முஸ்லிம்களின் விரோதிகளான சங்பரிவார்கள், ஆர். எஸ். எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் கனவை மெய்படுத்துவது போன்ற செயல்களைச் செய்து வருகிறது.
நேற்றுவரை அண்ணன் தம்பிகளாக இருகரம் கோர்த்து சமுதாயப் பணி செய்து வந்த சமுதாயச் சகோதரர்களை. இன்று விரோதிகளாக, எதிரும் புதிரும் வால் எடுத்து போர் புரியும் விரோதிகளைப் போன்ற நிலைக்கு உறுவாக்கிவிட்டு. சமூகக் களப்பணியாற்றிய இளைஞர்களை சூடேற்றி 'ம்....விடாதே.. அவர்கள் நமக்கு விரோதிகள்' என்று சமுதாயத்தை கூறுபோட்ட சமுதாய துரோகிகள். சமுதாயப் பத்திரிக்கை என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகளை மிஞ்சும் வகையில் 'முன்பை விட வீரியமாக' (?) என்று வீறுநடை போட்டு சமுதாயத்தை பிளவுபடுத்தி வருகிறது.
இந்த வார இதழைப் பற்றி நாம் மேலே குறிப்பிட்டுள்ளது பொய் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். கடந்த ஆகஸ்ட் 20 - 26 தேதியிட்ட இதழில். நமது இணையத்தில் வெளியிட்ட பின்னத்தூர் பிரச்சனை சம்பந்தமான செய்திக்கு க(ள்)ளத் தொகுப்பு என்ற பெயரில் 2 பக்கத்தை வீணடித்துள்ளார்கள். (அவர்களுக்கென்ன மக்கள் பணமல்லவா)
உண்மைக்குப் புரம்பான செய்திகளை கொடுத்து மக்களை கொதிப்படைய வைத்துள்ளார்கள். நமது இணையத்தை பார்த்த பலசகோதரர்களும் அந்த வார இதழைப் பார்த்தவுடன். அந்த வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இணையத்தில் நான் பார்க்கவில்லையே!.. பிறகு ஏன் இவ்வாறு அந்த வார இதழில் உள்ளது. அவர்களின் பொய் முகத்தை கிழித்தெறியுங்கள் என்று நமக்கு மின்-அஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளதால் நாமும் அந்த வார இதழுக்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொண்டோம்.
அந்த வாரஇதழில் 'பின்னத்தூரில் நடந்த ஒரு பிரச்சனையோடு சகோ-பி.ஜேவையும், தவ்ஹீத் ஜமாத்தையும் வம்புக்கிழுத்துள்ளார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது நாம் கேட்பது நமது இணையத்தில் பின்னத்தூர் பிரச்சனையை வெளியிட்ட போது அந்த தலையங்கத்தில் பி.ஜே என்றோ தவ்ஹீத் ஜமாத் என்றோ குறிப்பிடப்பட்டிருந்ததா? அல்லது அந்த அமைப்பின் நிர்வாகிகளின் பெயர்களாவது இருந்ததா? நிரூபிக்க முடியுமா? அல்லது பொது வாழ்விலிருந்து விலகத் தயாரா?
'அபு-ஜஹில்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைதான். அதன் பொருள் தவ்ஹீத் ஜமாத்தா? அல்லது அதில் உள்ள நிர்வாகி ஒருவரா? அந்த நிர்வாகி தன்னைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டார் என்றால் அவருடைய பெயரை அபு-ஜஹில் என்று மாற்றிக் கொண்டாரா? அல்லது அந்த பத்திரிக்கை வாதப்படி அபு-ஜஹில் என்றால் தவ்ஹீத் ஜமாத்தும் அந்த நிர்வாகி ஒருவருமா? என்னதான் சொல்ல வருகிறார்கள்!?
யார் தவறு செய்திருந்தார்களோ அவர்களை அபு-ஜஹில் என்று இந்த இணையத்தில் போடப்பட்டிருந்தது. பார்த்தீர்களா! தவ்ஹீத் ஜமாத்தையும், சகோ. பிஜேயையும் விமர்சித்துள்ளார்கள் என்று தக்லீதுகளை சூடேற்றி விட்டு சமுதாயத்தை துண்டாட நினைக்கும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
இதனால் அடையும் பயன் என்ன தெரியுமா? அடி தடி, வெட்டுக் குத்து கடைசியில் கொலை. இதைத் தான் சங்பரிவார்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்யத் துடிப்பதை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
பின்னத்தூரில் நடந்தது என்ன!
திருமணம் ஆன ஒருவர், ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி விட்டால். ஒரு ஜமாத் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? அல்லது ஊர் பஞ்சாயத்து என்ன செய்ய வேண்டும்? அந்தப் பெண்ணுக்கு. இந்தா உனக்கு நஷ்டஈட்டுத்தொகை உன்னை சரி செய்து கொள், இனி மேல் இந்தத் தவறு செய்யாதே. என்று அறிவுரை கூறுவார்களா?
அல்லது ராஸ்கல் என்னடா காரியம் செய்தே! ஒரு அபலைப் பெண்ணை இவ்வாறு செய்து விட்டாயே என்று கண்டித்து திருமணம் செய்து வைப்பார்களா? உங்கள் அகராதியில் என்ன முடிவு தெரிகிறது? விபச்சாரம் செய்வது ஹராம் அதை ஹலாக்கிக் கொள்வதுதான் சிறந்த வழி என்று மேடைகள் தோறும் முழங்கி எங்களுக்கு கற்றுக் கொடுத்த நீங்களா இவ்வாறு எழுதுவது? என்ன நேர்ந்தது உங்களுக்கு?
தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பாளர்களில் ஒருவர் பிரபல்யமானவர். இன்றும் உங்களோடு இருப்பவர் 'அடுத்தவருடைய மனைவியுடன் தொடர்பு வைத்திருந்து, விசயம் வெளிஉலகுக்குத் தெரிந்து, முன்னால் கணவனிடமிருந்து விவகாரத்துப் பெற்று மீண்டும் (இதில் கவனிக்க வேண்டியது இன்னொருவருடைய மனைவி)
இந்த தவ்ஹீத் ஜமாத்தின் தஃயிக்கு மரியாதைக்குறிய சகோ-பி.ஜே அவர்களுக்குத் தெரிய அல்லது அவர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மறந்து விட்டீர்களா?
ஒரு மனைவி இருக்க இன்னொரு மனைவியை திருமனம் செய்து கொள்வது மார்க்க ரீதியில் தவாறா? உங்கள் ஏற்பாட்டில் செய்து வைத்த 2 வது திருமணங்களின் பட்டியலைத் தரட்டுமா?
அவசர அவசரமாக ஆய்வு செய்து பின்னத்தூர் செய்தியை வெளியிட்டிருக்கும் மஞ்சள் பத்திரிக்கை. இதே இணையத்தில் பல கேள்விகள் கேட்டும் அந்தக் கேள்விகளுக்கு இது வரை பதில் அளிக்காதது ஏன்?
தமுமுக விலிருந்து பி.ஜே விலக்கப்பட்டாரா? அவராகவே விலகினாரா? என்று பல ஆதாரங்களுடன் இந்த இணையத்தளம் உலா வந்தது. இது வரை அதற்கு பதில் அளிக்கவில்லையே ஏன்? தவ்ஹீதுதான் காரணம் என்றும் தமுமுக தன்னை வெளியேற்றி விட்டது என்றும் பிரச்சாரம் செய்வது பொய் என்று ஆரம்பம் முதல் சொல்லி வந்தோம் அதற்கு ஏன் இன்று வரை பதில் இல்லை?
எங்களிடம் இருந்த உணர்வு வார இதழை நான்தான் சேர்மன் என்று அபகரித்துக் கொண்டார் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தோம் இந்த இணையத்தில். அதற்கு ஏன் இன்று வரை பதில் இல்லை?
உணர்வு இதழ் 8:42 ல் அந்த இதழ் துவங்கப்பட்ட விபரமாக சகோ - ரபீக் அவர்களை சம்பந்தப்படுத்தியதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது வரை அதற்கு பதில் இல்லையே ஏன்?
தமுமுகவிற்கு வழங்கிய சொத்துக்கள் தனக்கு வழங்கியதாக சொல்லி அபகரித்துக் கொண்டார் என்று பகிரங்க குற்றசாட்டு வைத்தோம் அதற்கும் பதில் இல்லையே ஏன்?
இவைகளுக்கு மஞ்சள் பத்திரிக்கை பதில் அளிக்குமா?
- அழகன்
தன்னுடைய சுய நலனுக்காக சமுதாயத்தை துண்டாடும் சமுதாய விரோதிகளின் உண்மை நிலையை உலகுக்கு காட்டுவோம். சமுதாயத்தைக் காப்போம்.
Comments