பி.ஜே. எனும் ஜெய்னுல்லாபிதீனுக்கு

'ஜகா' வாங்கியதாக ஜம்பமடித்துக் கொள்கிறீர். இப்படியெல்லாம் நீர் தில்லுமுல்லுகள் செய்ய வெட்கப்படமாட்டீர்.

அனுப்புனர்:
S.H. அமீருத்தீன்
'அமீர் வில்லா'
26, ஜானகிராம் காலனி, அரும்பாக்கம்,
சென்னை-106
பெறுநர்:
P.ஜெய்னுல்லாபிதீன்
உணர்வு அலுவலகம்
7, வடமரைக்காயர் தெரு,
மண்ணடி, சென்னை-600 001


பி.ஜே. எனும் ஜெய்னுல்லாபிதீனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

உணர்வு அலுவலகத்திலிருந்து ஒரு அநாமதேயம் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கிடைத்தது. உணர்வு ஆசிரியருக்காக கையெழுத்திட்டிருக்கும் அவரின் பெயர் மற்றும் பொறுப்பு பற்றி அதில் குறிப்பிடப்படாததால் அப்படி விமர்சிக்கும் படி இருக்கிறது. இனிவரும் கடிதங்கள் ஏதும் அப்படியிருந்தால் அவைகள் குப்பை கூடைக்குதான் போகும்.

நமக்கிடையே நடந்து வரும் விவகாரம் குறித்த விஷயங்களில் தமது நேரிடை கையொப்பம் தேவை. ஏனெனில், ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் தாம் இடம் பெற்று இருந்தும் பாராளுமன்ற தேர்தலின் போது அதில் வெளியிடப்பட்ட விவாதத்திற்குரிய ஒரு கட்டுரைப் பற்றி தமக்குத் தெரியாது என்று மறுத்ததை நாங்கள் மறக்கவில்லை.

முத்துப்பேட்டை சகோதரர்களின் கடன் பத்திரம் விவாதப்பொருளல்ல. அது முன் நிபந்தனை. கடன்பத்திரத்தை தீர்ப்பதற்கு ஏதுவாகத்தான் செப்டம்பர் 10ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது. முன் நிபந்தனையை தீர்க்காமல் விவாத ஒப்பந்தம் செய்ய அழைப்பது அர்தமற்றது. போகாத ஊருக்கு வழிகாட்டுவது. 'லாயிலாஹா-இல்லல்லா' - 'கடவுள் இல்லை அல்லாஹ் ஒருவனை தவிற' என்ற கலிமாவின் சொற்றொடரில் முதல் பாதி 'லாயிலாஹா'-கடவுள் இல்லை என்பதைமட்டும் ஏற்றுக்கொள்வதைப் போன்றது.

வாதத்திற்கு என்னை அழைத்து வருபவருக்கு ரூ. 2,00,000 கொடுக்க தயார் என்று 'உதார்' விட்ட நீரும், உமது பரிவாரங்களும் இப்போது அதில் மூன்றில் ஒரு பங்கு கடன் தொகையை கொடுப்பதற்கு பின் வாங்குவது ஏன்? இப்படியாவது முத்துப்பேட்டை சகோதரர்களுக்கு அந்த பணம் போய் கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் நான் அந்த நிபந்தனையை முன்வைத்தேன். நீர் நேரிடை விவாதத்தில் உண்மையான அக்கரை உள்ளவராக இருந்தால் கடன் பத்திரத்தை முதலில் முடியும்.

இன்று சென்னையில் கிடைத்த இந்த வார உணர்வு (செப்டம்பர் (3-9-2004)) இதழில் நேரிடை விவாதத்தை ஏற்றுக்கொண்டு நான் எழுதிய 23-8-2004 மறுப்பரை கடிதம் பற்றி பொய்யும் மெய்யும் கலந்து எழுதியிருக்கிறீர். குறைந்தபட்சம் என் கடிதத்தின் அந்த பகுதியையாவது முழுமையாக வெளியிட்டு உமது நாணயத்தை காப்பாற்றி இருக்க வேண்டும், பனைக்குளம் வரமுடியாத நியாயமான காரணத்தையும்; மறைத்து 'ஜகா' வாங்கியதாக ஜம்பமடித்துக் கொள்கிறீர். இப்படியெல்லாம் நீர் தில்லுமுல்லுகள் செய்ய வெட்கப்படமாட்டீர் என்று தெரிந்துதான் நான் என் கடிதங்களை 'பொய் முகம் கிழிந்தது' என்ற தலைப்பில் முன்னதாக வெளியிட்டு உமது முகத்தில் கரியைப் பூசினேன்.

பொது சொத்தை அபகரிக்கும் எத்தர்களுக்கு அல்லாஹ் வெட்க உணர்வுகளையும் அகற்றி விடுவான் போலும்!

இப்படிக்கு

S.H. அமீருத்தீன்

சென்னை - 106
1-9-2004

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن