கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்து அழுத பி.ஜே.
பி.ஜே.யின் பினாமியாக ஹாமித் பக்ரி இருந்தபொழுது எழுதப்பட்ட கடிதம்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். 10.05.2002.
அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் மவுலவி நூஹுத் தம்பி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களுக்கு, அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் மேல் மட்டக் குழு உறுப்பினர் கா.அ.மு.ஹம்மது பழ்லுல் இலாஹி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர் வழி காட்டுவானாக ஆமீன்.
ஆதாரத்துடன் பதில் சொல்வது போன்ற ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டம்.
ஜே.ஏ.கியு.ஹெச்.(ஜாக்கி)ன் குற்றச் சாட்டுகளும் தவ்ஹீது ஜமாஅத்தின் பதில்களும். இந்த தலைப்பில் நமது கூட்டமைப்பு சார்பில் 2 வீடியோ கேஸட்டுகள் தயாரித்துள்ளீர்கள். இந்த கேஸட்டை அளவுக்கு அதிகமான முஸ்தீபுகள் எடுத்து நல்ல செட்டப்களுடன் தயாரித்து உள்ளீர்கள். அதன் ஆடியோ கிளீயரிலும் பிலிம் கிளீயரிலும் அதிக கவனம் செலுத்தி உள்ளீர்கள். தேவையான மிக்ஸிங்கள், வார்த்தைக்கு வார்த்தை ஆதாரத்துடன் பதில் சொல்வது போன்ற ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டம்.
கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பிரச்சாரம் பணி என்பது இதுதானோ?
கடந்த காலங்களில் மார்க்கப் பிரச்சார கேஸட்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி எழுதிய போதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தீர்கள். அதனால் இதன் விபரம் இதன் அருமை உங்களுக்குத் தெரிய வில்லை என்று எண்ணினோம். அது தவறு என்று இந்த கேஸட்டுகள் மூலம் தெரிந்து கொண்டோம். இந்தக் கேஸட் தயாரிப்பில் கவனம் செலுத்தியதோடு நின்று விடவில்லை. தொடர்ந்து மக்களிடமும் சென்றடைந்து விட வேண்டும் என்பதிலும் முழுக் கவனம் செலுத்தி உள்ளீர்கள். நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் வியக்கத்தக்கது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத்களுக்கு மட்டுமன்றி கிராமம் கிராமமாகவும் சென்றடைய கடுமையாக உழைத்து உள்ளீர்கள். கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பிரச்சாரம் பணி என்பது இதுதானோ?
இலவச வெளியீடாக ஆக்கியது யாருடைய பணத்தில்?
அது போல் கடல் கடந்து வளைகுடா நாடுகளுக்கும், குறிப்பாக ஐ.ஏ.ஸி. துணைப் பொதுச் செயலாளர் வி.களத்தூர் இ. தாஜுத்தீன் மூலம் துபை ஐ.ஏ.ஸி. க்கு என்று ஒரு செட்டும். சர்ஜா. ஐ.ஏ.ஸி. க்கு என்று ஒரு செட்டும் அனுப்பி உள்ளீர்கள். முன்னதாக வேறு வழியிலும் அனுப்பி உள்ளீர்கள். மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று பெரும்பாலும் இலவச வெளியீடாக ஆக்கி உள்ளீர்கள். இலவச வெளியீடாக ஆக்கியது. யாருடைய பணத்தில்?
ஹதீஸ் ஆதாரத்தை காட்டி உள்ளீர்கள்.
இவ்வளவு கடின உழைப்பு செய்து ஏன் இந்த கேஸட்டை வெளியிட வேண்டும்? இப்படிக் கேள்வி வருமே என்ற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தனி மனிதர்களைப் பற்றி தவறான தகவல் பரவும்போது பதில் அளிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி உள்ளீர்கள் அதற்கு முதலில் ஹதீஸ் ஆதாரத்தை காட்டி உள்ளீர்கள்.
இது மாதிரி ரிஸ்க் எடுத்து வெளியிட்டீர்களா?
குர்ஆன் ஹதீஸ்களுக்கு தவறான விளக்கம் தந்து மக்களை வழி கெடுப்போரின் உரைகள் வீடியோக்களாக நிறையவே பவனி வந்துள்ளன. அவற்றுக்கு இது போன்று முயற்சி எடுத்து பதில் கேஸட்டுகள் வெளியிட்டு இருக்கிறீர்களா? என்றால் இல்லை. ஏதாவது ஒரு ஊரில் இது போன்று பதில் அளிக்கக் கூறி அழைத்ததன் பேரில் பேசி இருக்கிறீர்கள். அது போல பொதுவான குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரங்கள் செய்து உள்ளீர்கள். அது மாதிரியான வீடியோக்களை இது மாதிரி ரிஸ்க் எடுத்து வெளியிட்டீர்களா? இல்லை இல்லவே இல்லை.
பதிலாவது போட்டீர்களா?
ஒவ்வொரு ஊர் ஜமாஅத்துக்கும் போய் சேர வேண்டும் என்று முயற்சி செய்திருக்க வேண்டாம். மனத் தளவிலாவது எண்னி இருக்கிறீர்களா? 2000 ஆகஸ்ட் 19,20. தேதிகளில் மதுரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மாநாட்டு நடந்தது. அதன் கேஸட்டுகளை ஓராண்டாகியும் ஒழுங்காக உடன் வெளியிடாமல் பாக்கரின் மீடியா வேல்டு பிற்படுத்தியது. அதை சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையிலும் ஐ.ஏ.சி.சார்பாகவும் கடிதங்கள் வந்தனவே பதிலாவது போட்டீர்களா?
கனவில் கூட முயற்சிக்காத நீங்கள் இதை இலவசமாக அனுப்பி உள்ளீர்கள்.
தனிப்பட்ட உங்கள் மீதான குற்றச் சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதற்கு ஹதீஸ் ஆதாரம் காட்டி உள்ளீர்கள். மார்க்கப் பிரச்சாரம் மக்களை சென்றடையச் செய்ய வேண்டும். இதற்கு உரிய ஹதீஸ் ஆதாரம் உங்களுக்கு கிடைக்கவில்லையா? வசூலுக்கு என்று வெளிநாடுகளுக்கு சென்ற ஒவ்வொரு தவ்ஹீது மவ்லவிகளிடமும், 'எங்களுக்கு மார்க்கப் பயான் கேஸட்டுகள் கிடைப் பதில்லை. கிடைப்பதற்கு வழிவகை செய்யுங்கள்' இவ்வாறு எத்தனை தவ்ஹீது சகோதரர்கள் அழாத குறையாக மிக மிக ஆவலுடன் கெஞ்சி இருக்கிறார்கள். அது பற்றியெல்லாம் அணு அளவாவது சிந்தித்துள்ளீர்களா? உரிய பணம் கொடுத்துக் கேட்ட தவ்ஹீது பிரச்சார கேஸட்களை அனுப்ப கனவில் கூட முயற்சிக்காத நீங்கள் இதை இலவசமாக அனுப்பி உள்ளீர்கள்.
வெளியிட்ட கேஸட்களை வெளியிடவில்லை என்றும் கூறி விட்டீர்கள்.
தவ்ஹீது ஜமாஅத்தினரைக் கேவலப்படுத்திடும் இந்த அருவெருப்பான கேஸட். யார் பார்த்தாலும் காரி உமிழக் கூடிய இந்த கேஸட். வெளியிடப்பட்ட நோக்கம் நிர்ப்பந்தம் என்று கூறி உள்ளீர்கள். என்ன நிர்ப்பந்தம்? ஷ02.09.2000.அன்று மதுரையில் மாநில அளவில் நடந்த பொதுக்குழுவில்தான் பேசினோம். எங்களுடைய தேவைக்கு, எங்களுக்கு ஒரு ஆவணமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வீடியோ செய்த நாங்கள். அதன் காப்பியை ஒன்று இரண்டு பேரிடம் வைத்துக் கொண்டோம். அதை திருட்டுத்தனமாக எப்படியோ கைப்பற்றி நாங்கள் வெளியிட்ட மாதிரி காட்டிவிட்டார்கள். நாங்கள் வெளியிடவில்லை. இப்படி குற்றம் சாட்டி உங்கள் செயலை நியாயப்படுத்தி உள்ளீர்கள். இதற்காக நாம் வெளியிட்ட கேஸட்களை வெளியிடவில்லை என்றும் கூறி விட்டீர்கள்.
பேட்டி கண்டு நிரூபித்திருப்பார்.
சிந்திக்கும் நடு நிலையாளர்களின் கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கேஸட்கள் வைத்திருந்த அந்த ஒன்று இரண்டு பேர் யார் என்று நீங்கள் கூறவில்லை. அது உண்மையாக இருக்குமானால் அந்த ஒன்று இரண்டு பேர் யார் என்று கூறி இருப்பீர்கள். இப்படி கேமராவும் மைக்குமாக அலைந்த மவுலவி அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸியும் உங்கள் மூலம் வெளியானதா? உங்கள் மூலம் வெளியானதா? என்று அந்த ஒன்று இரண்டு பேரிடமும் பேட்டி கண்டு நிரூபித்திருப்பார்.
இது நடு நிலையாளர்களின் கேள்வி.
இப்போதைக்கு நீங்கள் வெளியிடவில்லை என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும். தமிழக அளவில் கூட்டப்பட்ட ஒரு பொதுக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் கூறியதன் நோக்கம். தமிழக அளவிலும் கடல் கடந்தும் செய்திகள் செல்லாமல் வந்திருப்பவர்களே நீங்கள் மட்டும் கேட்டு விட்டுச் செல்லுங்கள் என்று உறுதி மொழி வாங்கிச் சொன்னீர்களா? இவர்கள் மூலம் நாம் கூறும் குற்றச் சாட்டுகள் மக்களிடம் சென்றடைய வேண்டும். இதன் பயனால் மக்கள் ஜாக்கை புறக்கணிக்கட்டும். என்ற நோக்கத்தில் சொன்னீர்களா? இது நடு நிலையாளர்களின் கேள்வி.
பி.ஜே. (தன்னை அறியாமல்) கூறி விடுகிறார்.
இப்பொழுது வெளியிட்டுள்ள கேஸட்டில். எஸ்.கேயை பொய்யராகச் சித்தரித்து நிரூபித்த மாதிரி காட்டி விட்டால். இனி நாம் சொல்வதை மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில் எஸ்.கேயை பொய்யராக்க நிறைய முயற்சிகள் செய்து. உண்மைக்கு புறம்பானவற்றைக் கூறியுள்ளீர்கள். 'ஜம்இய்யத்து தஃவதுல் இஸ்லாமியாவை திட்டமிட்டு மறைத்ததாக கமாலுத்தீன் மதனி கூறுகிறாரே', இது முதல் கேள்வியாக கேஸட்டில் வருகிறது. இதற்கு பதில் சொல்ல வந்த பி.ஜே. 'நாம வெளியிட்டு மறைச்சதுலே இல்லே' என்று அவரை அறியாமல் சொல்லி விடுகிறார். அதாவது நீங்கள் வெளியிடவில்லை என்று மறுக்கும் மதுரை மஷ{ரா கேஸட் வெளியிடப்பட்டுள்ளது என்ற உண்மையை கூறி விடுகிறார். அது மட்டுமல்ல, அதில் சிலவற்றை மறைத்தும் வெளியிட்டுள்ளோம். என்ற இந்த உண்மையையும் சேர்த்து பி.ஜே. (தன்னை அறியாமல்) கூறி விடுகிறார்.
அடையாளம் காட்டும் விதமாக அமைந்து விட்டது.
அது போல் தான், மதுரையில் தவ்ஹீது அமைப்புகள் பற்றி பேசிய பி.ஜே.ஆரம்ப கால வரலாற்றைச் சொல்லும் முதல் தொடரிலேயே ஜம்இய்யத்து தஃவதுல் இஸ்லாமிய்யாவை சொல்லி இருக்க வேண்டும். திட்டமிட்டு சொல்லாமல் தவிர்க்கிறார், மறைக்கிறார். 2 வது தொடரில் துபை ஐ.ஏ.சியின் ஒருங்கிணைப்பு பணி பற்றி கூறும் போது சொல்லி ஆக வேண்டிய நிலை வருகிறது. இந்த நிர்பந்தத்தில்; ஜம்இய்யா பற்றி பி.ஜே.சொல்லுகிறார். இது தான் எஸ்.கே. சொல்ல வந்த விளக்கம். பி.ஜே. மாதிரி, தான் விளங்கியதை பிறர் விளங்கும்படி சொல்ல எல்லோராலும் முடியாது. இதுதான் எஸ்.கே. போன்றவர்களுக்கு உள்ள பலஹீனம். இதை விமர்சித்து எஸ்.கேயை பொய்யராக சித்தரிக்க பி.ஜே. முயல்கிறார். அதுவே நாம் வெளியிட்ட கேஸட்டை வெளியிடவில்லை என்று கூறிய உங்களை பொய்யராக நிரூபித்து பி.ஜே.யும் பொய்மைக்கு துணை போகின்றவர் என்பதை அடையாளம் காட்டும் விதமாக அமைந்து விட்டது.
அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புக்கு திரும்பி வருகிறது.
இதனால், தெடர்ந்து பி.ஜே. விமர்சிக்கும் ''நான் சொன்னதையும் போட்டு விட்டு இல்லை என்பது 'நொடிப் பொழுதில் பொய் சொல்லக் கூடியவர்' என்ற விமர்சனத்தில் துவங்கி 'விவரங்கெட்டவர்கள்... ...' என்று வரை உள்ள அனைத்து விமர்சனங்களும் அப்படியே அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புக்கு திரும்பி வருகிறது.
எடிட் செய்ய முடியாத அளவுக்கு கவனத்தை திருப்பிய.
'நாம வெளியிட்டு மறைச்சதுலே இல்லே' என்று பி.ஜே.சொன்னதை சபகுல் லிஸான் என்று சமாளிக்க முடியாது. (அதாவது தவறிய வார்த்தை, குளறிய வார்த்தை என்று கூறி மறுக்க முடியாது.) மதுரை கேஸட்டை அவர்கள் திருடவில்லை. நாம்தான் வெளியிட்டடோம் என்பது உள்ளத்தில் இருந்து வந்த உண்மை. அதனால்தான் வலது கையாலும் தன்னைக் காட்டி 'நாம வெளியிட்டு மறைச்சதுலே இல்லே' என்று உறுதியாக கூறி விடுகிறார். அந்த கேஸட்டில் எத்தனையோ எடிட் (கட்) கள் செய்த உங்களால் இதை எடிட் செய்ய முடியாத அளவுக்கு கவனத்தை திருப்பிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நடு நிலையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பிரச்சனை 1990ல் நாகூர் மாநாடு முடிந்த பிறகு பெரிதும் தலைதூக்கியது.
மேலும் அந்த கேஸட்டில் எஸ்.கே.யை பொய்யராக சித்தரிக்க அப்துர் றஹ்மான் பிர்வ்ஸியும் பி.ஜே.யும் எடுத்து வைக்கும் வாதம். கமாலுத்தீன் மதனி எதற்nடுத்தாலும் வல்லாஹி -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று பொய் சத்தியம் பண்ணுவார் என்பது. இது (2002ல் உள்ளது அல்ல )ஆரம்பத்திலேயே உள்ளது என்றும் கூறி விட்டார்கள். கமாலுத்தீன் மதனியின் கீழ் பிர்தவ்ஸிய்யாவில் பணியாற்றிய கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி உட்பட மவுலவிகள் அனைவரும் இதைப் பெருங் குற்றமாக கருதி நிர்வாகிகளிடமும் பி.ஜே. இடமும் முறையிட்டனர். யாரும் கண்டு கொள்ளவில்லை. இதை 01.10.1988முதல் 17.02.1990 வரை தொடராக ஒன்றரை ஆண்டுகள் தாயகத்தில் இருந்த நான் அடிக்கடி நாகர் கோயிலுக்கு சென்று வந்ததன் மூலம் அறிந்தேன். இந்தப் பிரச்சனை 1990ல் நாகூர் மாநாடு முடிந்த பிறகு பெரிதும் தலைதூக்கியது.
பி.ஜே. இப்படி பதில் கூறி இருக்கிறார்.
அப்பொழுது 'வல்லாஹி என்பது அரபிகளிடம் சர்வ சாதாரனமாக பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை. எஸ்.கே. அரபு நாட்டில் இருந்தவர். அந்தப் பழக்க வார்த்தை அவரை தொற்றிக் கொண்டுள்ளது. பழக்கத்தில் உள்ள இந்த வல்லாஹி என்ற வார்த்தையை அல்லாஹ்வே குற்றம் பிடிக்க மாட்டேன் என்று 2:225 வசனத்தில் கூறி இருக்கும்போது நீங்கள் ஏன் இதை பெரிதாக ஆக்குகிறீர்கள். வல்லாஹி என்பது தமிழ் வழக்கில் உள்ள உண்மையாக, நிஜமாக, மெய்யாக என்பது மாதிரியானதுதான். ஒருவன் உண்மையிலே சொல்கிறேன் என்று ஏதாவது ஒன்றைச் சொன்னால் சத்தியம் செய்து சொன்னான் என்று சொல்லமாட்டோம். அது போல்தான்'' . இப்படி பி.ஜே. பதில் கூறி இருக்கிறார். இதை அப்பொழுதே பிர்தவ்ஸிய்யாவில் உஸ்தாதுகளாக பணியாற்றியவர்கள் மூலம் அறிந்தேன்.
பி.ஜே. கூறிய பதிலைக் கேட்டு வியந்து அசந்து விடுவார்கள்.
10ஆண்டுகளுக்கு பிறகு 2000த்திலும் பொய் சத்தியம் பற்றி பேசியபோது 2:225வது வசனத்திற்கு இதே விளக்கத்தை கூறி உள்ளார். கமாலுத்தீன் மதனியின் வல்லாஹி பற்றி இப்பொழுது பொய் சத்தியமாக கூறும் பி.ஜே. அடுத்து எஸ்.கேயை பொய்யராக சித்தரிக்க செட்டப்பு படி பிர்தவ்ஸி கேட்கும் கேள்வி. பி.ஜே. தனி அணி ஆன பிறகுதான் பிரச்சனை வந்ததாக கமாலுத்தீன் மதனி கூறுகிறாரே' என்பது. இதற்கு பதில் சொல்லும் பி.ஜே. 'அவர்(எஸ்.கே.) வெளியிட்ட கேஸட்டிலேயே இதற்கு பதில் இருக்கிறது' என்று கூறி. எஸ்.கே.காட்டும் காரணம் குறிப்பிடப்படாத பி.ஜே.ன் ராஜினாமா கடிதத்துடன் முடிச்சுப் போடுகிறார். இந்த ராஜினாமா கடிதத்தின் அந்தரங்கம் தெரியாதவர்கள் உண்மை நிலை புரியாதவர்கள் கேள்வியும் நீயே பதிலும் நீயே என்ற பாணியில் பி.ஜே. கூறிய பதிலைக் கேட்டு வியந்து அசந்து விடுவார்கள்.
அரிஸ்ட்டோ ஹோட்டல் கூட்டத்தில் பேசினார்கள். நீங்களும் பேசினீர்கள்.
அதே தொடரில் பி.ஜேயே தனது அணியால்தான் பிரச்சனை என்பதற்குரிய ஆதாரங்களைக் கூறுகிறார். 'தனது அணி பற்றி பஸாது பேசித் திரிந்தார்கள் அதை பேசி தீர்ப்பதற்காகத்தான் 01.05.1997ல் ஹாமித் பக்ரி ஒரு கூட்டத்தை கூட்டினார். என்று கூறுகிறார். பி.ஜே. அணியால் தான் பிரச்சனை என்ற எஸ்.கே.ன் கூற்றுக்கு இப்படி ஒரு ஆதாரத்தைக் கூறும் பி.ஜே. அரிஸ்ட்டோ ஹோட்டலில் வைத்து எஸ்.கே. சொன்னபடி எழுதியதாக காட்டுகிறாரே தீர்மானம் அதுவும் பி.ஜே. அணியால் பிரச்சனை என்பதற்கு உரிய ஆதாரமாக உள்ளது. பி.ஜே. அணியால் பிரச்சனை என்று தெளிவாகவும் உறுதியாகவும்;தான் எல்லா மவுலவிகளும் அரிஸ்ட்டோ ஹோட்டல் கூட்டத்தில் பேசினார்கள். நீங்களும் பேசினீர்கள்.
இதுவும் பி.ஜே.யின் கூற்றுக்கு பாதமாகவே உள்ளது.
'1994 லேயே ராஜினாமா கொடுக்கும் அளவுக்கு நான் போகிறேன் என்றால் அவர்களது நடவடிக்கை சரியில்லை என்று நான் கொடுத்து இருப்பேனா? 1995 ஆகஸ்ட்டில்தான் தனி கட்சி உருவாகிறது. தனி கட்சி தான் காரணம் என்றால் எனக்கு என்ன? இல்முல் கைபா இருக்கு' என்று பி.ஜே. கேட்டுள்ளார். வாத ரீதியான கேள்விதான் என்றாலும் இதுவும் பி.ஜே.யின் கூற்றுக்கு பாதமாகவே உள்ளது. எப்படியெல்லாம் பாதமாக உள்ளது என்பதை அறியும் முன்.
தலையை வெட்டுவேன் என்று பிர்தவ்ஸி பேசினார்.
02.04.1994 அன்று ஜாக் பிரதிநிதிகள் மாநாட்டில் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையே இதற்கு பதிலாக உள்ளது. இருந்தாலும் அது 7 மாதத்திற்கு முந்தைய உரை என்று சமாளிப்பார்கள். ஆனால் இந்த ராஜினாமா கடிதத்திற்கு பிறகு 15.01.1995ல் திருச்சி ஸலபி நகர் பள்ளியில் வைத்து நீங்கள்தான் அமீர் என்று கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்து பி.ஜே. அழுதார் என்பதையும் மறுக்கவில்லை. 'அமீர் கமாலுத்தீன் மதனியை எதிர்ப்பவர்கள் தலையை வெட்டுவேன்' என்று பிர்தவ்ஸி பேசினார் என்பதையும் மறுக்கவில்லை.
பறக்கும் அவுலியா கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி.
ஆனால் கூட்டம் நடக்கும்போது அந்த கூட்டத்திற்கு வர முடியாத தூரத்தில் - சவூதியில் இருந்த பறக்கும் அவுலியா கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி. முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி குத்பிய்யத் கூட்டத்தில் ஹாஜராகின்ற மாதிரி. திருச்சி ஸலபி நகர் பள்ளியில் வந்து ஹாஜராகி கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்து அழுதுள்ளார்?. இது பி.ஜே.கண்ணுக்கும் பிர்தவ்ஸி கண்ணுக்கும் மட்டும் தெரிந்துள்ளது. அதனால்தான் 'ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அழுததைப்பார்த்து ஏமாந்து நாங்களும் அழுதோம்' என்று கூறி உள்ளனர்.
பிரச்சனைக்கு பி.ஜே.தான் காரணம் என்று விளங்கிக் கொண்டார்கள்.
யாராக இருந்தாலும் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறினாலும், வெளியேற்றப் பட்டாலும் விவகாரங்கள் வெடிக்கும். எது மாதிரியான அமைப்பிலிருந்து வெளியேறினார்களோ? அது மாதிரியான வேறு அமைப்பை உடன் காண்பார்களே தவிர. ஓராண்டு கழித்து முற்றிலும் வித்தியாசமான அமைப்பு காண மாட்டார்கள். இதை சிந்தித்த அறிவுடையோர் பிரச்சனைக்கு பி.ஜே.தான் காரணம் என்று விளங்கிக் கொண்டார்கள்.
தவ்ஹீது வாதிகளெல்லாம் பி.ஜே.யை விட்டு விலகி இருப்பார்கள்.
பி.ஜே. காட்டும் அரிஸ்ட்டோ தீர்மானங்கள். ஜாக்கிலிருந்து பி.ஜே. உளமார வெளியேற வில்லை. 'ஜாக்'குக்கு கட்டுப்பட்டுத்தான் பி.ஜே. அரசியல் கட்சியில் இருந்தார் என்பதை தெளிவாக்குகிறது. பி.ஜே.கட்சியின் செயல்பாடுகள் குர்ஆன் ஸுன்னா விற்கு உட்பட்டதுதான். போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றி அப்பொழுது எஸ்.கே. இடமிருந்து கையெழுத்து வாங்கவில்லை எனில், அன்றைய சூழலில் தவ்ஹீது வாதிகளெல்லாம் பி.ஜே.யை விட்டு விலகி இருப்பார்கள் என்பது தனி விஷயம்.
இதற்கு முன் 26.03.1997 புதன் அன்று நடந்த கூட்டத்தில்தான் எடுத்த தீர்மானங்கள்தான் என்ன.
தீர்மானம் 1:- ஜம் இய்யத்து அஹ்லுல் குர்ஆன்-வல்ஹதீஸ் சகோதரர்களுக்கிடையே தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (என்ற பி.ஜே. அணி) பற்றிய கருத்து வேறுபாடுகளை களையும் முகமாக ஜே.ஏ.கியூ.ஹெஜ். அமீர் மவுலவி எஸ்.கமாலுத்தீன் மதனி அவர்களையும் டி.எம்.எம்.கே.அமைப்பாளர் பி.ஜெய்னுல்-ஆபிதீன் அவர்களையும் அழைத்து குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பேசி தீர்வு கான்பது. அவ்விருவரையும் அழைத்து வர மவுலவி கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் தலைமையில் ஒரு நல்லிணக்க குழு அமைக்கப்பட வேண்டும்.
தீர்மானம் 2:- அடுத்த கூட்டத்திற்கு வரும் ஜே.ஏ.கியூ.ஹெஜ். தாஇகள் த.மு.மு.க (என்ற பி.ஜே. அணி) தேவையா இல்iயா என்பது பற்றி குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கொண்டு வர வேண்டும்.
தீர்மானம் 4 :- ஜே.ஏ.கியூ.ஹெச். த.மு.மு.க. 2 அமைப்புகளின் செயல்பாடுகளை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்ட தீர்மானங்களும் பிஜே.யால்தான் பிரச்சனை என்பதை தெளிவாக்குகின்றது.
நான் ஜாக்கில் இல்லை என்று பி.ஜே. கூறவில்லை.
தாருல் ஹதீஸ் சார்பில் நீங்கள் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்து இருந்தாலும். தாருல் ஹதீஸ் கூட்டம் என்று அறிவிக்கவில்லை ஜே.ஏ.கியூ.ஹெச். தாஇகள் கூட்டம் என்றுதான் அறிவிப்பு செய்தீர்கள். அதில் கலந்து கொண்ட அனைவரும் பி.ஜே. உட்பட எல்லோரும் ஜே.ஏ.கியூ.ஹெச். தாஇகளாகத்தான் கலந்து கொண்டீர்கள். அந்தக் கூட்டத்தில் கூட, இப்பொழுது ஜாக் ஷ{ராவில் யார் யார் இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அப்பொழுது கூட ''பி.ஜே. ஷ{ராவில் இருக்க மாட்டார்'' என்றுதான் பி.ஜேயே கூறினாரே தவிர. நான் ஜாக்கில் இல்லை என்று பி.ஜே. கூறவில்லை.
01.10.1996. தேதியிட்டு டைப் செய்யப்பட்ட 9 பக்க பிரசுரம்.
இதற்கும் முன்பு. 27.08.1996. அன்று சென்னை ஜாண் டிரஸ்ட்டில். ஒரு சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் ''தற்போது த.மு.மு.க. இதெல்லாம் ஒரு ''டிராமா'' போலத்தான்'' என்று பி.ஜே. கூறினார். இதை விமர்சித்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது? என்ற தலைப்பில் 01.10.1996. தேதியிட்டு டைப் செய்யப்பட்ட 9 பக்க பிரசுரம் ஒன்று வெளியானது.
இதுவும் பி.ஜே.யால்தான் பிரச்சனை என்பதை இன்னும் தெளிவாக்குகின்றது.
இந்த பிரசுரம் சம்பந்தமாக, 27.08.1996 தேதிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் பி.ஜே. ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ''நாம் ஜான் ட்ரஸ்ட் அலுவலகத்தில் கூடி டி.எம்.எம்.கே., ஜே.ஏ.கியூ.ஹெச். இடையே எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்து சுமுகமான முடிவுக்கு வந்தோம்'' என்றே கடிதத்தை துவங்கி உள்ளார். இதுவும் பி.ஜே.யால்தான் பிரச்சனை என்பதை இன்னும் தெளிவாக்குகின்றது.
பி.ஜே.யிடம் அடகு வைத்து விட்ட நிலையில் உள்ளவர்கள்.
ஒரு அமைப்பு சரி இல்லை, அதன் தலைமை சரி இல்லை என்று வெறுத்து வெளியேறிவர்கள். தாங்கள் இருக்கும் புதிய அமைப்பின் செயல்பாடுகள் சரிதான் என்ற ஒப்பதலை பெறுவதற்கும், அமைப்பு ரீதியாக ஒத்துழைக்க நிர்வாகத்தை கலந்து தகவல் தருவதற்கும் இவர்கள் குற்றம் சாட்டி வெளியேறியதாகக் கூறும் அதே தலைமையுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்களா? இதை அறிவுடையோர்தான் கேட்பார்கள். பி.ஜே.யிடம் அடகு வைத்து விட்ட நிலையில் உள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.
வார்த்தை விளையாட்டால் சத்தியம் பண்ணுவதை பார்த்து விட்டோம்.
ஜே.ஏ.கியு.ஹெச்.யிலிருந்து பி.ஜே. ஏன் விலகினார் என்பதற்கு பல காரணங்களை நீங்கள் வெளியிட்டுள்ள கேஸட்டில் பி.ஜே. கூறி உள்ளார். அவைதான் காரணமா? ஹீலா சத்தியமின்றி. அல்லாஹ்வுக்கு அஞ்சி சத்தியம் பண்ணுங்கள் என்று சொல்ல மாட்டேன். ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் சத்தியம் பண்ணுங்கள் என்பேன். பொதுமக்களாலும் தவ்ஹீது வாதிகளாலும் பெரிதும் மதிக்கப்படக் கூடியவர்களெல்லாம், நீங்கள் உட்பட எல்லோரும் வார்த்தை விளையாட்டால் சத்தியம் பண்ணுவதை பார்த்து விட்டோம். இதன் பிறகு எதற்கும் யாரையும் சத்தியம் பண்ணச் சொல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
இந்த ராஜினாமா கடிதத்தின் உண்மை நோக்கம், உங்களுக்குத் தெரியும்.
எனவே உங்களை சத்தியம் பண்ணச் சொல்லவில்லை. தூய எண்ணத்தோடு சிந்தியுங்கள். இந்த நிமிடமே நீங்கள் மரணித்து விட்டால் மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வீர்கள். இதை எண்ணிப் பாருங்கள். மொட்டையாகக் கூறாமல் உங்களுக்கும் நினைவூட்டும் நோக்கில் எழுதுகிறேன். செட்டப் கேஸட்டில் பி.ஜே. சொல்லிக் காட்டுகிறார். ''பிரச்சனைக்கு காரணம் பி.ஜே. அணிதான் என்று எஸ்.கே. கூறு கிறார். அதற்கு அவரே முரண்படுவதைப் பாருங்கள். எஸ்.கே. வெளியிட்டுள்ள கேஸட்டில் 27.11.1994லேயே நான் ராஜினாமா செய்த கடிதத்தை காட்டுகிறார். பி.ஜே.க்காக உருவான அணி 1995 ஆகஸ்டில் வந்தது. அதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பே ராஜினாமா செய்து உள்ளேன். அதில் காரணம் கூறப்படவில்லை என்றாலும் இப்பொழுது கூறும் குற்றச் சாட்டடுக்கள்தான் காரணம்'' என்று பி.ஜே. வாதிடுகிறார். இந்த ராஜினாமா கடிதத்தின் உண்மை நோக்கம், உங்களுக்குத் தெரியும். தெரியாது என்று சொல்ல முடியாது. உங்களிடம் அப்பொழுது 1994ல் சொன்னாரா என்பது தெரியாது.
சர்ச்சைக்குரிய ராஜினாமா கடிதம் பற்றி பி.ஜே.
17-08-1994-முதல் 12-02-1995-வரை நான் தாயகத்தில் இருந்தேன். இந்த கடிதம் எழுதும்போது அதன் நோக்கத்தை பி.ஜே. என்னிடம் விரிவாக விளக்கி இருக்கிறார். கடிதத்தை ஒட்டி மட்டுமல்ல அதன் முன் பின் விபரங்களையும் வருங்கால திட்டங்கள் பற்றியும் பேசி இருக்கிறார். எந்த அளவுக்கு என்றால். ஷம்சுல்லுஹா, அலி றஹ்மானி, இக்பால் போன்றவர்கள். மனம் நொந்து வெறுத்துப் போய்விட்டார்கள். ''பல பேர் இருக்கும் போது ஒருவரிடம் மட்டும் தனித்து ரகசியம் பேச ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா?.'' இப்படி பிரச்சனையாக பேசும் அளவுக்கு தனித்து என்னிடம் பேசி இருக்கிறார். இப்பொழுது சர்ச்சைக்குரிய ராஜினாமா கடிதம் பற்றி பி.ஜே. கூறிய விபரத்தை சுருக்கமாகத் தருகிறேன்.
ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன்.
''தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று தாஇகள் உருவாகிவிட்டார்கள். சொல்லப்பட வேண்டிய எல்லா மஸாயில்களும் சொல்லப்பட்டு விட்டது. மிக முக்கிய தீமையான ஷpர்க்கை தெளிவுபடுத்தி விட்டோம். நாட்டு சூழலில் இனி நம்மீது உள்ள கடமை ஜிஹாதுதான். நானே ஸ்பாட்டுக்கு போவேன், (இப்படிச் சொன்னால், இப்படிச் சொல்லி யாரையாவது பலி ஆக்கப் போகிறார் என்று அர்த்தம். இதை இப்பொழுது எல்லோரும் தெரிந்து கொண்டோம் என்பது தனி விஷயம்.) ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன். எதுவும் நடக்கலாம். அதனால் ஜாக் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆகனும்.
ஜாக் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று உருவான அமைப்பு. அது இருந்தால் தான் தவ்ஹீது பிரச்சாரம் நடைப்பெறும். நம்மால் அது பாதித்து விடக்கூடாது. எனவே என்னுடன் ஜிஹாதுக்கு வரக் கூடியவர்கள், ஆதரவு தருபவர்கள், இப்படி உள்ள அனைவரும் ஜாக்கிலிருந்து வெளியேறனும். அது ஒரு டிராமாதான் என்றாலும் டிராமா என்று தெரியக்கூடாத அளவுக்கு இருக்கனும். டிராமாதான் என்றாலும் டிராமாவில் நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆகனும். அது மாதிரி உள்ளத்தால் ஜாக்கை நேசித்தாலும் அணு அளவு கூட அது வெளித் தெரியா வண்ணம் ஜாக் எதிர்ப்பைக் காட்டனும்.
ஜாக்கிலிருந்து நாம் விலகவில்லை. ஜாக்கிலிருந்து விலகுகிறோம் என்றால் தவ்ஹீது அமைப்பிலிருந்து விலகுகிறோம் என்று ஆகிவிடும். ராஜினாமாவில் கூட ஜாக்கிலிருந்து விலகுகிறேன் என்று எழுத மாட்டேன். ஷ{ராவிலிருந்து விலகுகிறேன் என்றுதான் எழுதுவேன். வெளியில் அது பொதுவான விலகலாகவே பேசப்படும். (இதற்கு வேறு ஒரு சமயம் வேறு ஒரு காரணம் சொன்னார். ஷ{ராவிலிருந்து விலகுகிறேன் என்று எழுதுவதற்கு காரணம் பிரச்சனை வந்தால் பி.ஜே. ஜாக்கில் இல்லை என ஜாக் நம்மை கை விட்டு விடக் கூடாது என்று)
சீனி நெய்னா முஹம்மது கைது.
நம்மை ஜாக்கின் எதிர் அணியினர் என்று காட்டுவதற்காக நாம் சொல்லும் காரணங்கள் பொய்யாக இருந்தாலும் ஜிஹாதிற்காக கூறப்படும் பொய் மார்க்கத்தில் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது. அமீரிடம் மட்டும் உண்மையை சொல்லி விட வேண்டும். எதிர்ப்பைக் காட்ட தலைமையைத்தான் கடுமையாக சாட வேண்டியதிருக்கும்'' என்றார். இது மாதிரியான கால கட்டத்தில்தான் சீனி நெய்னா முஹம்மது கைது, பி.ஜே. தகப்பனார் மறைவு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
பி.ஜே. சொன்னார்ன்னா? பி.ஜே. சொன்னார்! பி.ஜே. சொன்னார்னு நிப்பீங்க.
பி.ஜே. அமீரிடம் சென்னாரா என்பது எனக்குத தெரியாது சொன்னதாக 01-09-1997-ல் சொல்லிக் காட்டுகிறார். பி.ஜே. சொன்ன மாதிரி 1994-ல் அமீரிடம் ஒருவர் (அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி) கூறினார். இது எனக்குத் தெரியும். அப்பொழுது அமீர் அவர்கள் 'இது நீடிக்காது' என்று கூறினார்கள். அதற்கு வந்திருந்தவர், 'நாட்டின் இன்றைய சூழ்நிலையைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அமீர் அவர்கள் 'உங்கள் மீது ஜிஹாத் கடமையா?' என்று கேட்டார். வந்திருந்தவர், திரும்பவும் நாட்டுச் சூழல் பற்றி பேசினார். உடன் அமீர் அவர்கள், அவருக்கே உரிய பாணியில் டென்சனாகி ''ஏங்க! நீங்களெல்லாம் நான் சொன்னா கேட்க மாட்டீங்க. உங்க மாதிரி சில பேர் இருக்கீங்க பி.ஜே. சொன்னார்ன்னா? பி.ஜே. சொன்னார்! பி.ஜே. சொன்னார்னு நிப்பீங்க.
இன்னும் எத்தனை ஊரில் ஷpர்க்க பத்தி சொல்ல வேண்டி இருக்கு.
அவரும் எங்கிட்ட ரொம்ப நாளா சொல்லத்தான் செஞ்சார். இஸ்லாத்தை விமர்சிக்கிறான்னா நீங்க அவனைக் கூப்பிட்டு இஸ்லாத்தை சொன்னீங்களான்னு கேட்டேன். அவர் வாதம் பண்ணினார். அவர் மாதிரி வாதம் பண்ணெல்லாம் எனக்கி தெரியாது. அவர் வழி அவருக்கு என் வழி எனக்கி. அவர் இதிலே இனி நான் தலையிட மாட்டேன். அவர் பின்னாலே போறா இருந்தா போங்கோ. இன்னும் எத்தனை ஊரில் ஷpர்க்க பத்தி சொல்ல வேண்டி இருக்கு. இத முதல்ல சிந்திச்சு பார்த்தேளா?
நீங்க என்னை என்ன மாதிரி பேசினாலும் அதுக்கு நான் பதில் பேச மாட்டேன்.
இப்பொழுது பி.ஜே. கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் பொய்.
இந்த அடிப்படையில் தான் பி.ஜே. வின் ராஜினாமாவே தவிர. இப்பொழுது நீங்கள் வெளியிட்டுள்ள கேஸட்டில் கூறப்பட்டுள்ள காரணங்கள் அல்ல. அப்பொழுது அதிகமான அந்தரங்கங்கள் உங்களைப் போன்றோருக்கு தெரியாது. ஆனாலும். பி.ஜே. வின் ராஜினாமா ஜாக்கை எதிர்த்தோ எஸ்.கே. அவர்களை வெறுத்தோ அல்ல என்பது லுஹா உட்பட பி.ஜே.க்கு நெருங்கிய எல்லா மவுலவிகளுக்கும் குறிப்பாக உங்களுக்கும் தெரியும். இப்பொழுது பி.ஜே. கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் பொய். உண்மைக்கு புறம்பானவை என்பதும் தெரியும்.
கேஸட் ஆதாரத்துடன் தர முடியும்.
நான் கூறும் இந்த உண்மையான காரணத்தை பொய்யாக்கிட எல்லோரும் சேர்ந்து சத்தியம் செய்து மறுத்து விட எண்ணாதீர்கள். அப்படி முயற்சி செய்தால். 01.05.1997 அன்று உங்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில்.38 மவுலவிகளுக்கு முன்னால் பி.ஜே. கொடுத்த இதே மாதிரியான வாக்கு மூலத்தையும் அப்படியே கேஸட் ஆதாரத்துடன் தர முடியும், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அது வேற விஷயம். சொல்ல முடியாது.
இந்தக் கூட்டத்தின் காலை அமர்வில் பி.ஜே., எஸ்.கே.யை எவ்வளவோ கடுமையாக விமர்சித்தார். இருந்தாலும் அந்த அமர்வில் ராஜினாமா கடிதம் பற்றி கூற வேண்டி நிலை வந்த போதும் எஸ்.கே.என்ன சொன்னார்? ராஜினாமா தந்திருக்கார்ன்னா... அது வேற விஷயம். சொல்ல முடியாது. என்று தான் சொல்கிறாரே தவிர. எதற்காக ஷ_ராவிலிருந்து விலகினார் என்று சொல்லவில்லை.
கொடுத்த வாக்குறுதியை காத்து வருகிறார் கமாலுத்தீன் மதனி.
நான் என்ற அகம்பாவம் அனா நிய்யத்து, கணக்கு சரி இல்லை. இப்படி 38 மவுலவிகள் முன் அநியாயமாக கேவலப் படுத்தினார் பி.ஜே. அப்போதும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார் எஸ்.கே. யாராக இருந்தாலும் இவ்வளவு பொறுமையைக் காட்ட மாட்டார்கள். நீங்கள் ஏன் ராஜினாமா கடிதம் கொடுத்தீர்கள்? சொல்லவா? என்று மிரட்டியாவது இருப்பார்கள். இப்படியெல்லாம் மிரட்டாமல் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு பொறுமையுடன் ''நீங்க என்னை என்ன மாதிரி பேசினாலும் அதுக்கு நான் பதில் பேச மாட்டேன்'' என்று கொடுத்த வாக்குறுதியை காத்து வருகிறார் கமாலுத்தீன் மதனி. அவரை பொய்யராக்கியதோடு பொய் சத்தியம் செய்பவராக சித்தரித்ததோடு நின்றீர்களா?. இல்லை.
வெளியாகவில்லை என்ற எண்ணத்தில் பி.ஜே. இப்படிக் கூறுகிறார்.
தொடர்ந்து விடாப் பிடியாக மோசடியாளராக சித்தரிக்க பி.ஜே.யும் பிர்தவ்ஸியும் சேர்ந்து செய்யும் செயல். ஜாக் கணக்கு கேட்டா மனைவி இடம் இருக்கு. தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த கணக்கு என் மனைவி இடம் இருக்கு என்று சொன்னதாக கூறும் குற்றச்சாட்டு. என்ன தைரியத்தில் இப்படி இட்டுக் கட்டி பேசுகிறார் என்றால், அதையும் இந்த வீடியோ கேசட்டில் அவரே கூறுகிறார். திருச்சி அரிஸ்டோ ஹோட்டல் கேஸட்டை வெளியிடவில்லை. வெளியிடக் கூடாது என்ற கேஸட்டை வெளியிட்டு விடுவோம். அவர் (அதாவது கமாலுத்தீன் மதனி) அசிங்கப்பட்டுப் போவார் எனவே வெளியிடாதீர்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். அதனால் வெளியிடாமல் வைத்து இருக்கின்றோம். 6 ஆடியோ வெளியிட்டு விடுவோம் என்று பி.ஜே. பயமுறுத்தி கூறுகிறார். வெளியாகவில்லை என்ற எண்ணத்தில் பி.ஜே. இப்படிக் கூறுகிறார்.
தங்களிடம்தான் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டது.
அதுபோல், வெளியாக்க மாட்டோம் என்ற தைரியத்தில்தான் உண்மைக்குப் புறம்பான வற்றை வீடியோ முன் விலாசித் தள்ளி இருக்கிறார். அரிஸ்டோ ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியின் 6 ஆடியோ கேஸட்களும் நிகழ்ச்சியின் அமீர்; என்ற முறையிலும் தாருல்-ஹதீஸின் தலைவர் என்ற முறையிலும் 38 மவுலவிகள் சார்பில் தங்களிடம்தான் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டது.
பி.ஜே பொய்களை அரங்கேற்றி இருக்கிறார்.
இது 1997-லேயே யு.ஏ.இ.க்கு வந்து விட்டது. 1999ல் யு.ஏ.இ. முழுக்க முக்கிய மானவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு விட்டது. வெளியிடக்கூடாது என்று முடிவு செய்து. பாதுகாப்பு நோக்குடன் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட. அந்த கேஸட்டுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்று தான் இன்றும் 34 மவுலவிகள் நம்புவது போல் பி.ஜே.யும் நம்பி உள்ளார். இதை இப்பொழுது வெளியிட்டுள்ள வீடியோ மூலமும் தெளிவு படுத்தி விட்டார். அதனால்தானே தைரியமாக விட்டடிக்கும் வீடியோக்கள் இரண்டிலும் முஸ்லிம் டிரஸ்ட் அரங்கத்தில் இருந்து கொண்டு பி.ஜே பொய்களை அரங்கேற்றி இருக்கிறார்.
சத்தியம் செய்து உறுதி செய்கின்றனர்.
ஜாக் கணக்கை கேட்டதற்கு மனைவி இடம் இருக்கிறது போய் கேள் என்று கூறியதாக பி.ஜே. சொல்கிறார். அதை உறுதி செய்ய எஸ்.கே. பொய் சத்தியம் செய்வார் என்று சொல்லும் அணியைச் சார்ந்த மவுலவி ஷம்சுல் லுஹா றஹ்மானியும் மவுலவி எம்.எஸ்.சுலைமான் பிர்தவ்ஸியும் வல்லாஹி - அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம் செய்து உறுதி செய்கின்றனர்.
பி.ஜே. 3 வது தடவை பேசும்போது.
நாம் கேட்ட அளவில் அப்படி இருக்கவில்லை. எனவே மீண்டும் அந்த 6 கேஸட்களை எடுத்துப் போட்டுக் கேட்டோம். முதல் கேஸட்டிலிருந்து 3வது கேஸட் எ. பக்கம் வரை 3 தடவையாக பேசிய பி.ஜே. 3 வது தடவை பேசும்போது காமலுதீன் மதனியைப் பார்த்து ஷஅமைப்பு பணம் கடனாக கொடுத்து பிறரிடம் இருந்தால். உங்கள் மவ்த்துக்கு பிறகு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். வாரிசுக்கு கூட போய் விடலாம் என்று கூறுகிறார்.
நான் என் மனைவி இடம் கூட சொல்லி வைத்திருக்கிறேன்.
இப்படிக் கூறிய குற்றச் சாட்டுக்கு பதில் கூறும் போதுதான் கமாலுதீன் மதனி கூறுகிறார். ''நான் செத்துப் போனால் ஜம்இய்யத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்களோ அதை கொடுத்து விட்டுத்தான், என் சொத்தை வித்து கொடுத்து விட்டுதான், மற்றது செய்யனும் என என் மனைவி கிட்ட சொல்லி இருக்கிறேன். நான் செத்துப் போனால் என்று (பி.ஜே.) கேட்கிறார். ஜம்இய்யத்து பேரில் உள்ள கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்து பாதுகாப்பாக வைத்து உள்ளேன். நான் (சொந்தமாக) கொடுக்கும் கடனை எழுதி வைப்பேன் வைக்காமலும் இருப்பேன். நான் என் மனைவி இடம் கூட சொல்லி வைத்திருக்கிறேன்''.
என்னை மீறி அறியாமல் தப்பு நடந்து இருந்தால்.
இப்படித்தான் சொல்கிறாரே தவிர. ஜாக் கணக்கு என் மனைவி இடம் இருக்கு என்று சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சியில் 4 வது தடவையாக பேசும்போது இப்படிக் கூறிய கமாலுத்தீன் மதனி. இதற்கு முன்னும் இதற்குப் பின்னும் இந்த பேச்சின் தொடரிலும், ஒவ்வொரு தடவை பேசும் போதும் 'கணக்கை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்கிறார். ஷஏற்கனவே ஷ_ராவிலும் தாஇகள் அமர்விலும் மற்ற அமர்வுகளிலும் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. ஒரு அமர்வில் சுருக்கமாக படித்துக் காட்டியதாக பி.ஜே. குற்றம் சாட்டினார். சில கூட்டங்களில் சுருக்கமாகவும் சில இடங்களில் விரிவாகவும்தான் கணக்கு படித்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஆடிட் செய்யப்படுகிறது. என்னை மீறி அறியாமல் தப்பு நடந்து இருந்தால் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் ஏற்கிறேன்'.
இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கணக்கை பாருங்கள் என்றுதான் கூறுகிறாரே தவிர, மவுலவி அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி பேட்டி கண்ட மாதிரி கணக்கு வழக்கை கேட்டபோது கணக்கு வழக்கெல்லாம் என் மனைவி இடம் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த கணக்கெல்லாம் என் மனைவி கிட்ட இருக்கிறது. இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வயலும் வாழ்வும் ரேடியோ நிகழ்ச்சி பேட்டி மாதிரிதான் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் பேட்டி உள்ளது.
உண்மைக்கு புறம்பாக பொய் சத்தியம் செய்துள்ளார்கள்.
இப்படி இல்லாத ஒன்றை உண்மைப்படுத்த, பி.ஜே. அணியின் மாநில பேச்சாளர்களும் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பைச் சேர்ந்த மவுலவிகளுமான ஷம்சுல் லுஹா றஹ்மானியும் எம்.எஸ். சுலைமான் பிர்தவ்ஸியும் அல்லாஹ்வின் பள்ளி மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மானில் வைத்து, வல்லாஹி என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று உண்மைக்கு புறம்பாக பொய் சத்தியம் செய்துள்ளார்கள்.
அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி பொய் சத்தியத்தைக் கேட்டு வாங்கியுள்ளார்.
கூட்டமைப்பைச் சேர்ந்த மவுலவிகளில் நல்லவர்களாக என்னளவில் எஞ்சி இருந்தவர்கள். இந்த இரு மவுலவிகளே. இவர்களும் இப்படி பொய் சத்தியம் செய்திருக் கிறார்கள் என்றால். நீங்கள் வெளியிட்டுள்ள அந்த கேஸட்களில் மற்றவர்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி கூறத் தேவையில்லை. அவர்களாகவா பொய் சத்தியம் செய்கிறார்கள். சிறு பிள்ளைகள் மிட்டாய்கள் கேட்டு வாங்குவது போல் அல்லவா ஒவ்வொருவரிடமும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி பொய் சத்தியத்தைக் கேட்டு வாங்கியுள்ளார்.
பி.ஜே. அழுததும் சமாதானம் பேச வந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
கணக்குக் கேட்டால் என் மனைவி இடம் இருக்கு போ என்று கூறுகிறார். என்ற இந்தக் குற்றச் சாட்டை பி.ஜே. பல இடங்களில் அரங்கேற்றி வெற்றி கண்டிருக்கிறார். 15-8-2000 அன்று நெல்லை ஏர்வாடியில் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு இரவு 1-மணி முதல் 3-மணி வரை ஒரு அமர்வு நடந்தது. கடையநல்லூர், ஏர்வாடி தவ்ஹீது சகோதரர்களும் மவுலவி கே.எஸ் ரஹ்மதுல்லா இம்தாதி போன்ற பிரமுகர்களும் பி.ஜே யைக் கண்டு சமாதானம் பேச வந்தனர். குறிப்பாக மதுரை மாநாட்டுக்கு எஸ்.கே.யை அழைக்க வேண்டும் அதை ஒட்டி சமாதானம் ஆகிவிட வேண்டும். என்பதுதான் நோக்கம். அப்பொழுதும் இதே குற்றச் சாட்டைக் கூறி பி.ஜே. அழுதார். இப்படி பி.ஜே. அழுததும் சமாதானம் பேச வந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
அடையாளம் காட்டவும் எல்லோரும் அடையாளம் காணவும்.
அந்த அமர்வு முடிந்து வீட்டை விட்டு வெளியே வந்ததும். அந்த தெருவில் வைத்தே இது பற்றி லுஹாவிடம் கேட்டேன். அதற்கு லுஹா ''அப்படி சொல்ல வில்லையே....இவர் ஏன் இப்படி சொல்கிறார்....'' என்று இழுத்தார். அந்த லுஹாதான் இன்று சத்தியம் செய்துள்ளார். ஏன் இப்படி திரும்ப திரும்ப இல்லாத ஒன்றை அழுத்தம் திருத்தமாக, தெம்பாக பி.ஜே. கூறுகிறார். என்றால். கேஸட் வெளியிடப் படவில்லை என்ற தெம்புதான். நீங்கள், கேஸட் வெளியிட்டதை சொல்லாமல் இருந்ததுதான் எல்லோரையும் அடையாளம் காட்டவும் எல்லோரும் அடையாளம் காணவும் வசதியாக ஆகிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்!
எதை எதிர்பார்த்து எனக்கு அனுப்பி வைத்தீர்கள்.
பி.ஜே. இன்றும் இப்படி நம்பிக் கொண்டிருக்க. அந்த 6 ஆடியோக்கள் எப்படி 1997 லேயே யு.ஏ.இ.க்கு வந்தன. 1999 லேயே யு.ஏ.இ. முழுக்க ஏன் வினியோகிக்கப்பட்டது. அது 38 மவுலவிகள் சேர்ந்து தங்களை நம்பி ஒப்படைத்த அமானிதம் என்று பாராமல் எதை எதிர்பார்த்து எனக்கு அனுப்பி வைத்தீர்கள். இவற்றைக் கூறி உங்களை அடையாளம் காட்ட முடியும்.
அல்லாஹ்வுக்கு அஞ்சி உடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
எனவே நமது வேண்டுகோள் என்னவென்றால். இதில் சுட்டிக் காட்டி உள்ள தவறான செய்திகள் போல் நிறைய தவறான செய்திகள். தெளிவாகச் சொல்வதென்றால் பொய்கள் கேஸட்கள் முழுக்க உள்ளன. எதிர் தரப்பில் ஆதாரம் இல்லை என்பதற்காக உண்மைக்கு புறம்பானவற்றை நாம் கூறக் கூடாது. இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ள தவறான செய்திகள், இன்னும் கேஸட் முழுக்க உள்ள தவறான செய்திகள். அனைத்திற்கும் கூட்டமைப்புத் தலைவர் என்ற முறையில் தாங்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அவற்றுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி உடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
கூட்டமைப்புக்கு நிதி தந்தவர்கள்.
இலவசமாக வெளியிடப்பட்டுள்ள கேஸட்களுக்குரிய பணம் எது. அது அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால். இலவசமாக வெளியிட முடிவு செய்தவர்கள் பொறுப்பு ஏற்று கூட்டமைப்புக்கு தந்து விட வேண்டும். கூட்டமைப்புக்கு நிதி தந்தவர்கள் தவ்ஹீதுப் பிரச்சாரப் பணிக்குத்தான் நன்மையை நாடி நன்கொடைகள் தந்துள்ளனர். இது போன்ற பொய்ப் பிரச்சாரங்ககளுக்கு அல்ல.
அதற்கும் பதில் பெற்று அனுப்பித் தர வேண்டுகிறேன்.
6 மாதங்களுக்கு முன்பே 2001லேயே தயாரிக்கப்பட்டதுதான் இந்த கேஸட். அண்ணன் பி.ஜே. அவர்களுக்கு 06.04.2002 அன்று 25 பக்க கடிதம் ஒன்று அனுப்பினேன். அதன் பிறகுதான் புதிய சேர்ப்புகளுடன் வேகமாக காப்பிகள் போட்டு வினியோகிக்க உத்தரவு இட்டுள்ளார். அந்த கடிதத்திற்கு பி.ஜே. அவர்களிடமிருந்து இன்று வரை எனக்கு பதில் வரவில்லை. அதன் காப்பியை இத்துடன் இணைத்துள்ளேன். அதற்கும் பதில் பெற்று அனுப்பித் தர வேண்டுகிறேன்.
2 மாதத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் எப்படி செலவு ஆனது.
26.9.2000. அன்று சென்னையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மதுரை மாநாட்டு கணக்குகளை ஒப்படைத்தேன். என்னிடம் ரொக்கமாக இருந்த மீதிப் பணம் ரூ1,87,000க்குரிய செக்கையும் ஓப்படைத்தேன். அது 03.10.2000 அன்று பாஸாகி உள்ளது. அதற்குப் பிறகு அல்முபீன் கணக்கில் இருந்த மாநாடு பணம,; சிலோனிலிருந்து வந்த 50ஆயிரம், மாநாட்டு திடல் அட்வான்ஸ் 25 ஆயிரம். இப்படி மாநாட்டு மீதிப் பணம் இரண்டரை லட்சத்திற்கு மேல் கூட்டமைப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டரை இலட்சமும் 2மாதத்தில் செலவு ஆகிவிட்டதாக கூறினீர்கள். எனவே 2 மாதத்தில் இரண்டரை இலட்சம் ரூபாய் எப்படி செலவு ஆனது. இந்த கேள்விக்கும் இது வரை பதில் வரவில்லை. அனைத்திற்கும் உடன் பதில் அனுப்பவும். இந்தக் கடிதம் கிடைத்த விபரத்திற்கு ஈ-மெயிலில் உடன் பதில் தரவும் வஸ்ஸலாம்.
அன்புடன்:-
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,
மேல் மட்டக் குழு உறுப்பினர்,
அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு.
அன்று சென்னையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நடு நிலையாளர்களே! நியாயவான்களாகுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
06.04.2002ல் பி.ஜே.க்கு அனுப்பிய கடிதத்திற்கு இன்று வரை பி.ஜே. இடமிருந்து பதில் வரவில்லை. அது போல் 10.05.2002 அன்று ஹாமித் பக்ரிக்கு அனுப்பிய இந்தக் கடிதத்திற்கும் இன்று வரை எந்த பதிலும் வரவில்லை.
16-05-2002-அன்று காலை 10-மணிக்கு மவுலவி ஷம்சுல் லுஹா றஹ்மானி போன் போட்டார். ஜாக் கணக்கை கேட்டதற்கு என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னாரா என்று கேட்டேன். இல்லை என்றார். கேஸட்டில் சொல்லி உள்ளீர்களே என்றேன் ''அப்படி சொல்ல வேண்டிய நிலை ஆகிவிட்டது'' என்றார். சத்தியம் வேறு பண்ணி உள்ளீர்களே என்றேன். அப்படியா என்றார்.
இதையும் நடு நிலையாளர்களின் கவனத்திற்குத் தருகிறேன். .....எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். அல் குர்ஆன்.5:8 நீதியை நிலை நாட்ட வேண்டியே இந்தக் கடிதத்தை நடு நிலையாளர்களே! உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். நீதியை நிலை நாட்டிடுவீh அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவீர்.
அன்புடன்:-
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி
09.06.2002.
Comments