பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
பி.ஜே. ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை ஒரு விலை என்பார் பி.ஜே.க்குரிய விலையை பாக்கர் கொடுத்து விட்டார்.
(06-04-2002ல் பி.ஜே.க்கு எழுதப்பட்டு பதில் வராமல் பரபரப்பான கடிதம்.
25 பக்க கடிதம் என்று பிரபலமான கடிதத்தின் சுருக்கம்.)
அன்புள்ள அண்ணன் மவுலவி பீ.ஜே. அவர்களுக்கு கா.அ.மு. உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நான் எழுதிய விமர்சனக் கடிதத்தால் எல்லோரும் மனம் நொந்து விட்டதாக பாக்கர் அவர்கள் (மியாம்பள்ளி) ஜின்னாவிடம் வருந்தியுள்ளார். விமர்சனக் கடிதம் என்பது இன்று நேற்று எழுதவில்லை. 'விமர்சனம் எழுதுங்கள். உங்கள் விமர்சனங்கள் ரசிக்கும்படியாக உள்ளன' என்று நீங்களும் யூசுப் மிஸ்பாஹியும் சேர்ந்து சொன்ன காலம் முதல் எழுதி வருகிறேன். தொழுகை புக் முதல் வெளியீடு வந்தது. அதில் '(குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான) ஜனாஸா தொழுகை சட்டம் அடுத்த பதிப்பில் என்று போட்டிருந்தது. (அது வரை ஜனாஸாக்களை ஐஸ் பாக்ஸில் வைக்கவா? அல் ஜன்னத் ஆபீஸுக்கு அனுப்பி வைக்கவா? என்று) அப்போது நான் எழுதி இருந்தேன். அந்த விமர்சனத்தை நேரில் கூறி மகிழ்ந்தீர்கள்.
நீங்கள் விளக்கம் அளித்தபோதுதான் எல்லோரும் புரிந்தார்களாம்.
கடந்த நோன்பில்கூட போனில் பேசும்போது அனைத்து தவ்ஹீ;து ஜமாத் கூட்டமைப்பை கண்காணித்துக் கொள்ளுங்கள். தவறுகள் தெரிந்தால் சுட்டடிக்காட்டி எழுதுங்கள் என்றீர்கள். நிறைய விமர்சனங்கள் உள்ளன என்றேன். எழுதுங்கள் என்றீர்கள். இன்னும் சொல்லப் போனால் 95 லிருந்து 2001வரைஉள்ள எல்லா விமர்சன கடிதங்களும் உங்களிடம் போனில் கலந்தே எழுதி உள்ளேன். குறிப்பாக தேர்தல் புறக்கணிப்பு வாபஸ் பற்றிய விமர்சனக் கடிதம் உட்பட. அப்படி இருக்க, இப்பொழுது நான் எழுதிய விமர்சனக் கடிதத்திற்கு நீங்கள் விளக்கம் அளித்தபோதுதான் எல்லோரும் புரிந்தார்களாம்.
விளக்கம் என்னிடம் தான் கேட்டிருக்க வேண்டும்.
அல்லாஹ் தான் அருளிய வேதத்தை எளிதானது, தெளிவானது என்று சொல்லும் அதே நேரத்தில். தான் அருளிய வேதத்தை தான் தான் விளக்க முடியும், சரியாக புரிய வைக்க முடியும் என்றுதான் தூதர்களை அனுப்பி விளக்கமளித்துள்ளான். அல்லாஹ்வின் வேதத்தின் நிலையே இப்படி என்றால். மிகச் சாதாரண பாமரன் நான் எழுதிய கடிதம் எப்படி நீங்கள் விரும்பியவாறு புரியும்படி இருந்திருக்கும். நான் எழுதிய கடிதம் சரியாக புரியும்படி இல்லாமல், தவறாக விளங்கும்படி இருந்திருந்தால் விளக்கம் என்னிடம் தான் கேட்டிருக்க வேண்டும்.
நாம் எழுதிய கடித்திற்கு விளக்கம் எழுதும் முன். 1986லிருந்து இதுவரை எழுதிய விமர்சன கடிதங்களெல்லாம் தப்பர்த்தம் கொள்ளவில்லை. ஆரோக்கியமான விமர்சனங்களாக எடுத்துக் கொண்டீர்கள். அந்த நிலை மாறி எதிரியாக விளங்கக் காரணமான நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.
மவுலவிகள் நமது வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
17-09-2000 ஞாயிறு அன்று அ.த.கூ. தலைவர் மவுலவி ஹாமித்பக்ரி, அப்போதைய த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்போதைய தலைமை நிலையச் செயலாளர் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ, யு.எ.இ. ஐ.ஏ.ஸித் தலைவரும் த.மு.மு.க.தலைவருமான. மவுலவி கே.எப்.நிஜாமுத்தீன், மஸ்ஜிதுர் ரஹ்மான் தலைவர் மவுலவி ஷம்சுல்லுஹா, அல் இர்ஷhத் இஸ்லாமிய மகளிர்; கல்லூரி முதல்வர் மவுலவி எம்.எஸ்.சுலைமான் ஆகிய மவுலவிகள் நமது வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது த.மு.மு.க தலைமையை தவ்ஹீது விரோதப் போக்கு தலைமையாக சித்தரித்து பேசினார்கள். (அதில் லுஹா பேசியவையே அதிகம்).
இப்படி ஏன் கொள்கிறீர்கள் என்று பாக்கர் கேட்பார்.
நாங்கள் பி.ஜெ.யை சந்திக்க த.மு.முக.வினர் தடையாக உள்ளனர். பி.ஜெ. யை எளிதில் சந்திக்க முடிய வில்லை. த.மு.மு.க வினர் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டி இருக்கிறது. அவசர நிமித்தம் ஒரு மஸாயில் பிரச்சனைக்கு கூட தொடர்பு கொள்ள இயலவில்லை. சந்திப்பு கிடைத்து மார்க்க மஸாயில் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தால், இன்னும் முடியவில்லையா? இன்னும் முடியவில்லையா? என ஒருவர் மாற்றி ஒருவர் வந்து தொந்தரவு செய்வர். அவரைப் போட்டு இப்படி ஏன் கொள்கிறீர்கள் என்று பாக்கர் கேட்பார். இவர்கள் (த.மு.மு.க.வினர்) மட்டும் தினமும் மணிக்கணக்கில் அவரை வைத்து உலக (அரசியல்) விவகாரம் பேசுவார்கள். என்றைக்காவது ஒரு நாள் சந்திப்பு கிடைத்து பேசிக் கொண்டிருந்தால் தவ்ஹீது வாதிகளே இப்படித்தான் என்பார்.
மாநில அமைப்பாளராக உள்ள பி.ஜே.ன் கவனத்திற்கு கொண்டு போனால்
த.மு.மு.க. வால் பி.ஜெ.யின் தவ்ஹீது பிரச்சாரம் பாதித்து விட்டது. என்று ஜே.ஏ.கியூ.ஹெச் கூறிய குற்றச்சாட்டை குறை சொல்வதற்கில்லை. த.மு.மு.க.வின் வளர்ச்சிக்காக அடி உதை ஜெயில் என களத்தில் இறங்கி தியாகம் செய்தவர்கள் தவ்ஹீது வாதிகள். (இப்பொழுது நான் குறுக்கிட்டு உயிர்த்தியாகமும் என்றேன்.) தவ்ஹீது வாதிகளின் தியாகத்தில். வளர்ந்து விட்டு. த.மு.மு.க இன்னும் வளரனும், அதாவது தங்கள் தலைமைத்துவம் விரிவடையனும் என்றால், சுன்னத் ஜமாஅத்தினரை கவர் பண்ணனும். சுன்னத் ஜமாஅத் வட்டத்தை கவர் பண்ணனும் என்றால் தவ்ஹீது வாதிகளுக்கு எதிரானவர்கள் என்று தங்களை காட்டவேண்டும். என்று எண்ணி தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இதை மாநில அமைப்பாளராக உள்ள பி.ஜே.ன் கவனத்திற்கு கொண்டு போனால் அவர் இதை கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் அவர்களது செயலை நியாயப் படுத்தவும் செய்கிகிறார்.
குராபி பத்திரிக்கையின் விளம்பரம் உணர்வில் வருகிறது.
தவ்ஹீதுப் பத்திரிக்கையான அல்முபீனுக்கு உணர்வில் விளம்பரம் போடவேண்டும் என்றால். அங்கே கேளுங்கள் இங்கே கேளுங்கள் என்று அலைக்கழிக்கப் படுகிறது. இப்பொழுது 2 - 3வாரமாக ஒரு குராபி பத்திரிக்கையின் விளம்பரம் உணர்வில் வருகிறது. பி.ஜே. ஆசிரியராக உள்ள இந்த வார உணர்வில் மதுரையில் இஸ்லாமிய மாநாடு என்ற வாசகத்துடன் அந்த பத்திரிக்கையின் விளம்பரம் வந்துள்ளது. அதில் நாம் மதுரையில் நடத்திய தவ்ஹிது மாநாடு பற்றி விமர்சித்து எழுதி உள்ளது. (இதற்குப் பிறகு பி.ஜெ.யாகிய நீங்கள் உங்களுக்கே உரிய பாணியில் வழக்கம் போல கேள்விப் பகுதியில் போட்டு கவனக்குறைவுக்கு வருந்துகிறோம் என்று போட்டீர்கள்)
பி.ஜே. இடம் பேசுகிறேன்.
இது சம்பந்தமாக பி.ஜே.யிடம் (பழுலுல் இலாஹியாகிய) நீங்கள் பேசுங்கள். நாங்கள் தெரிவித்ததாக கூற வேண்டாம். நீங்கள் கேள்விப்பட்ட மாதிரி பேசுங்கள் என்றனர். நான் யு.ஏ.இ. யிலிருந்து வந்து 5 மாதம் ஆகிவிட்டது. எனவே யு.ஏ.இ.ல் நான் கேள்விபட்ட மாதிரி சொல்ல முடியாது. எனவே கே.எப்.நிஜாமுத்தீன் கேள்விப்பட்ட மாதிரி ஐ.ஏ.ஸி.யின் அமர்வில் கேள்வி கேட்கப்பட்ட மாதிரி பி.ஜே. இடம் பேசுகிறேன் என்று சொன்னேன்.
பி.ஜே ஒரு வார்த்தை சொன்னால் என்ன.
(பி.ஜே.யின் ஆலோசனைப்படி அவர் வகுத்து கொடுத்த திட்டப்படி) த.மு.மு.கவிலிருந்து தீவிர தவ்ஹீது வாதிகளையும் தவ்ஹீது மவுலவிகளையும் நிர்வாகம் வட்டத்திலிருந்து ஒரங்கட்டும் பணி நடந்தது. பல சூழ்ச்சிகள் நடந்தது என சொல்லிக் காட்டினர். அந்த வரிசையில் ஸைபுல்லாஹ் ஹாஜா சொன்னார். என்னைப் பார்த்து ஹைதர் அலி சொல்கிறார். நீங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள். ஒன்று த.மு.மு.க.( மாநில துணைப் பொதுச்செயலாளர்) பொறுப்பிலிருந்து விலகுங்கள். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் சம்பளம் வாங்குவதை நிறுத்துங்கள். 2ல் எதைச் செய்கிறீர்கள் என்று. அதுவும் பீ.ஜே.யை வைத்துக் கொண்டே சொல்கிறார். இவர் (அதாவது பி.ஜே) ஒரு வார்த்தை சொன்னால் என்ன அவர் வாய் திறப்பாரா பேசாமல் இருக்கிறார் என்றார்.
ஸைபுல்லாஹ் ஹாஜாவை நீக்குவது என்பது அண்ணன் பி.ஜே. கருத்துதான்.
அப்பொழுது நான் சொன்னேன். இது கூடத் தெரியாதா உங்களுக்கு?. ஹைதர் அவர்கள் எங்கே சுயமாக சொன்னார். அண்ணன் சொல்லித்தான் பி.ஜே. செய்த செட்டப்புபடி தான் சொல்லி உள்ளார். வெளிநாட்டு நிறுவனம் பற்றி பேச பி.ஜே.க்கு அணுவளவும் அருகதை இல்லை. நானிருக்கும் போதும் ஹைதர் அவர்கள் ஒரு அமர்வில் இதைச் சொன்னார். பாக்கர் ஜவாஹிருல்லா இந்ததால் நான் ஒன்றும் பேசவில்லை. அந்த 2 பேர் இல்லாதிருந்தால், இப்படிக் கூறும் யோக்கியதை (பி.ஜே.யாகிய) உங்களுக்குண்டா என்று கேட்டிருப்பேன். பிறகு ஒருமுறை ஹைதர் அவர்களிடம் பேசியபோது ஸைபுல்லாஹ் ஹாஜாவை நீக்குவது என்பது அண்ணன் பி.ஜே. கருத்துதான் என்று கூறினார் என்றேன்.
அப்பொழுது ஜே.எஸ்.ரிபாஈ அவ்வோ அப்ப அப்ப ஒரு பாலிஸி எடுப்பாக. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மனிதம் பேசுவாக ஆப்ரிக்கனுக்கும் நாம் உதவணும் என்பாக தவ்ஹிதுன்னு வரும்போது இப்படி மாறிக்குவாக என்றார்.
நான் சொன்னேன். மனிதன் சூழ்நிலையின் கைதி என்பார்கள் அதுபோல்தான் அண்ணனும் உள்ளார். அண்ணனிடம் 1000 குறைகள் இருந்தாலும், அவரிடம் உள்ள குர்ஆன் ஹதீஸ் ஆராய்ச்சித் தன்மை. விளங்குவது, விளங்கியதை பாமரனும் விளங்கும்படி விளக்குவது போன்றவற்றிற்காகத்தான் அவரோடு இணங்கி, பலவற்றை அணுசரித்துப் போகிறேன் என்று.
அத்தனை குற்றங்களும் பி.ஜே. தரப்பில் இருக்கிறது.
இந்த சமயத்தில் லுஹா, சுலைமான் ஆகிய 2 மவுலவிகள் தங்கள் அணுபவத்தைக் கூறி தங்களிடமுள்ள மார்க்க அறிவை புகழ்ந்து மகிழ்ந்து இதனால்தான் அவர்களும் தங்களுடன் உள்ளனர் என்பதை வார்த்தையால் கூறாமல் குறிப்பால் உணர்த்தினர். எஸ்.கேயைப் பார்த்து என்னக் குற்றச்சாட்டு அண்ணன் பி.ஜே. வைத்தாரோ என்ன விமர்சனங்களைக் கூறினாரோ அத்தனை குற்றங்களும் பி.ஜே. தரப்பில் இருக்கிறது.
நாம் சொன்ன கொள்கையை ஏற்று செயல்படுத்த போன இடத்தில் அடிபட்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவனையே எஸ்.கே. பேசுகிறார் என்று ஜே.ஏ.கியூ.ஹெச்.ஐ விட்டு விலகிய காரணங்களில் ஒன்றாக பலமுறை பி.ஜே. கூறியிருக்கிறார். சென்னை புளியந்தோப்பு பள்ளியில் தொழப்போன தவ்ஹிது சகோதரர் தொடையில் கடித்து விட்டார்கள் இது விசயமாக ஹைதர் அலி அவர்களுக்கு போன் போட்டுள்ளனர். இது மாதிரி பிரச்சனை எல்லாம் இங்கு (த.மு.மு.க.வுக்கு) கொண்டு வரக்கூடாது என்று கோபமாக சப்தம் போட்டுள்ளார்.
ஏன் போகனும் என்று பி.ஜே. கேட்கிறார்.
இந்த சம்பவ அன்று நான் சென்னையில் இருந்தேன். இதுபற்றி எனக்கு தகவல் கூறிய மவுலவி (வெள்ளை நிஜாமுத்தீன்) இடம் ஹைதர் ஹைதர் அலி அவர்களிடம் பேசவா? யார் சொன்னார்கள் என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லவா? என்று கேட்டதற்கு நமக்கு எதுக்கு வம்பு ஹைதர் பேசியது உண்மை. புளியந்தோப்பு தவ்ஹீது வாதிகளிடம் விசாரித்து விட்டு பேசுங்கள் என்றார். பிறகு கலில் ரசூலிடம் பேசும் போது இது பற்றி குறிப்பிட்டேன். அவர் சொன்னார் பி.ஜே.யும் அதே கருத்தில்தான் உள்ளார். ஏன் போகனும் என்று பி.ஜே. கேட்கிறார் என்று கூறினார்.
அதற்கு தடை பி.ஜே.தான் என்பதை ரிபாஈ அவர்கள் விளக்கினார்.
துபை வந்த ஹைதர் அவர்கள் முதலில் நான் தவ்ஹிது வாதி பிறகுதான் த.மு.மு.க என்று கூறினார். அப்படிப் பட்டவர் என்ன செய்திருக்கனும்? த.மு.மு.க செயலாளராக இருந்தாலும் நான் ஒரு தவ்ஹிதுவாதி என்ற முறையில் ஈடு படுகிறேன் என்று பாதிக்கப்பட்டவனுக்கு உதவி இருக்கவேண்டும் என்றேன். அதற்கு தடை பி.ஜே.தான் என்பதை ரிபாஈ அவர்கள் விளக்கினார்.
த.மு.மு.க.வுக்கு உதவுவதும், மார்க்கத்துக்கு உதவுவதும் ஒன்று.
கே.எப்.என். ஆரம்பத்தில் தவ்ஹீது வாதிகள் த.மு.மு.க.வை ஜீரணிக்க வில்லை. பி.ஜெ.யை காப்பாற்றுவதற்க்காக. த.மு.மு.கவை ஆதரித்தோம். எஸ்.கே.தரப்பில் விமர்சனம் வந்தது. எனவே ஜே.ஏ.கியூ.ஹெச் இருக்கும்போது த.மு.மு.க.தேவையா? த.மு.மு.க.பெயரில் செய்வதை ஜே.ஏ.கியூ.ஹெச் பெயரில் செய்யலாமே என்று பொது மக்கள் கூறினர். த.மு.மு.க.வுக்கு உதவுவதை பாவமாக கருதினர். நாம்தான் த.மு.மு.க.வுக்கு உதவுவதும், மார்க்கத்துக்கு உதவுவதும் ஒன்று என்று பிரச்சாரம் செய்தோம்.
த.மு.மு.க. எப்படி எல்லாம் தவ்ஹீது ஜமாஅத்துக்கு உதவியது.
இருந்தாலும் அவ்வப்போது வரும் விமர்சனங்கள் எதிர் கருத்துக்களால் அரை குறையாகவே த.மு.மு.கவை ஆதரித்தனர். பி.ஜெ.யும் த.மு.மு.க. எப்படி எல்லாம் தவ்ஹீது ஜமாஅத்துக்கு உதவியது என்று கேஸட்டில் பேசி இருந்தார். அதில் ஜவாஹிருல்லா, ஹைதர் ஆகிய இருவரும் தவ்ஹீது ஜமாஅத்துக்காக உயர் அதிகாரிகளிடம் பேசியதாக சிலாகித்து கூறி இருந்தார். (என்றும் அந்த கேஸட்டில் மேலும் உள்ள தகவல்களை கூறிவிட்டு) அண்ணன் பழல் அதை பல காப்பி போட்டு தவ்ஹீது வட்டத்துக்கு மட்டும் கேட்டு விட்டு தரும்படி கொடுத்து வாங்கினார்.
இப்படி நடந்த கலந்துரையாடலில். (பி.ஜே.யாகிய) உங்களின் போலீஸ் ஸ்டேஷன் தன்மை, உங்கள் சேனல் யாருக்கெல்லாம் வேலை செய்யாதிருந்து. பிறகு வேலை செய்தது. அதாவது தஃபா வாசல் திறப்பு (அதாவது யாருடனெல்லாம் பேசாமல் இருந்தீர்கள். பிறகு பேசினீர்கள்) பற்றியெல்லாம் பேசினார்கள்.
நான் சொன்னேன், இவர் ஒரு எடுப்பார் கைப் பிள்ளை. ஒவ்வொரு வரையும் கண்டிக்க என்று ஒருவர் இருக்க வேண்டும். குடும்ப அளவிலோ ஜமாத் அளவிலோ இவரை கண்டிக்க என்று யாரும் இல்லை. இவரது அண்ணன் பி.எஸ். அலாவுதீன் இறப்பு ஜமாத்துக்கு பேரிழப்பு. அவர் இருந்திருந்தால் கண்டிக்க கூடியவராக இருந்திக்கலாம். கண்டிக்க என்று ஆளில்லாததால் இவர் ஒரு எடுப்பார் கை பிள்ளையாக ஆகி விடுகிறார்.
மதுரை மாநாட்டை ஒட்டி நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் (பொதுக்கூட்டத்திலோ-பொதுமக்களிடத்திலோஅல்ல) நிர்வாகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் த.மு.மு.க.வா தவ்ஹீதான்னு வருமானால் நாம் தவ்ஹீதுக்குத்தான் முதலிடம் கொடுப்போம் என்று பேச ஆரம்பித்து விட்டேன். குறிப்பாக மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானிலும் மதுரை முபாரக் மஸ்ஜிதிலும் மாநாட்டுக்கு முன்பும் பின்பும் இதை அழுத்தமாக பேசினேன். மஸ்ஜித் முபாரக் தலைவர் சொல்ல வேண்டிய விஷயம் என்று சந்தோஷப்பட்டார்.
இது பி.ஜேயே திட்டமிட்டு செட்டப் செய்து கூற வைத்ததுதான்.
கோவை மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஜாபர் நான் மதுரை மாநாட்டுக்கு வரலாமா என்று கேட்டார். அப்பொழுது ஜவாஹிருல்லா அவர்களுக்கு போன் போட்டு, த.மு.மு.க. பொறுப்பில் உள்ளவர்கள் தவ்ஹீதில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் உள்ளதா? என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். தவ்ஹீது வாதிகளால் த.மு.மு.க.வின் வளர்ச்சி பாதிக்கிறது என்று பி.ஜே. இடம் சில த.மு.மு.க நிர்வாகிகள் கூறியதை கிட்ட இருந்து கேட்டேன். இது பி.ஜேயே திட்டமிட்டு செட்டப் செய்து கூற வைத்ததுதான்.
இன்றைய சூழலில் த.மு.மு.க வை நாம் புறக்கணிக்க முடியாது. அது வளர்ந்து விட்ட அமைப்பு நம்மால் (தவ்ஹீதுவாதிகளால்) வளர்க்கப்பட்ட அமைப்பு. ஒன்று அதை நாம் கைப்பற்ற வேண்டும். அல்லது அதை அழிக்க வேண்டும். குறிப்பாக இனி மக்களுக்கு சேவைப் பணிகள் மக்களை ஈர்க்கும் அறப்போராட்டங்கள் போன்றவற்றை தவ்ஹீது ஜமாஅத் பெயரால் செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் திட்டமிட்டு ஹிக்மத்தாக செய்ய வேண்டும் எது மாதிரியெல்லாம் ஹிக்மத் செய்யவேண்டும் என்று சில வியூகங்களை கூறியதோடு நான் அமைத்த வியூகங்களையும் கூறினேன். ஸைஃபுல்லாஹ்வை எக்காரணம் கொண்டும் த.மு.மு.க மாநில துணை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலக்கக்கூடாது. ஹாமித் பக்ரியை த.மு.மு.க தலைவராகக் கொண்டு விடுவோம். அதற்க்கு வியூகம் அமைப்போம் என்று கூறினேன்.
(இதன் பிறகு துபை வந்த நான் ஐ.ஏ.ஸி. கூட்டங்களில் பேசியபோது தவ்ஹீது வாதிகளின் தியாகத்தில் வளர்ந்த த.மு.மு.க வின் தவ்ஹீது வீரோதப் போக்குகள் என தவ்ஹீத் ஜமாஅத் மவுலவிகள் பட்டியலிட்டுக் கூறியதைச் சொல்லிக் காட்டினேன்.)
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மவுலவி ரிபாய் இங்கு நடந்தவற்றை அப்படியே த.மு.மு.க.வில் வந்து சொல்லிவிட்டார் என்று லுஹா கூறினார். (லுஹாதான் இரட்டை வேடம் போட்டிருப்பார் என்று இப்பொழுது நம்புகிறேன்.) மவுலவிகளை மதிக்காமல் பேசி வந்த த.மு.மு.க. தலைமையினர் மவுலவிகளை கீழ்த்தரமாகவும் பேசும் நிலைக்கு எப்பொழுது ஆளானார்கள். த.மு.மு.க தலைமையினர் மவுலவிகளை மேலும் கீழ்த்தரமாக எப்பொழுதிலிருந்து மிதிக்கத் துவங்கினர் (என்பதை லுஹா மூலம் அறிந்தேன்) நான் தாயகத்தில் இருந்தபோது மவுலவிகளை இந்த சம்பவததை ஒட்டி இழிவாகப் பேசிய பாக்கர். அதே சாக்கடையில் வீழ்ந்து விட்டார். மன்னிக்கவும் மறுமணம் செய்யும் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில், விதவை மறுமணம் பற்றி விலாவாரியாக விளக்கிப் பேசியவர்கள் பலதாரமணம் பற்றி பரவலாக பேசியவர்கள் எழுதியவர்கள் என்று எல்லோரும் சேர்ந்து தடுத்து நிறுத்தி மூடி மறைத்துவிட்டீர்கள் (என்பதை லுஹா மூலம் அறிந்தேன்)
இந்த ஒழுங்கக் கெட்டவர்களால் நமக்கு கேவலம் என்று உங்களிடம் போனில் பேசி இருக்கிறேன். மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த மவ்லவி ஸைபுல்லா ஹாஜாவும் மற்ற மவுலவிகளும் மாநில பேச்சாளர்களாக மவுலவிகள் பாiஷயில் செல்லாகாசு பொறுப்பாளர்களாக ஆக்கப் பட்டுள்ளனர். கடையநல்லூர் மதரஸா பொறுப்பு இருப்பதால் விடுவிக்கப்பட்டாதக அவர் வாயால் கூறுகிறார். இவர் (பி.ஜே.) ஒரு வார்த்தை சொன்னால் என்ன என்று கேட்டாரே அதுதான் அவர் உள்ளத்தில் உள்ளது. ஆக என் வீட்டில் வைத்து போட்ட திட்டம் லுஹாவால் காட்டிக் கொடுக்கப்பட்டதால் த.மு.மு.கவை ஹாமித்பக்ரி தலைமையில் கைப்பற்ற முடியாமல் பழைய தலைமையே வந்து விட்டது. அதனால் நன்மைதான் நடந்துள்ளது.
நீங்கள் விரிவுரை வழங்கிய எனது கடைசி முயற்சி என்ற கடிதத்திற்கு வருவோம். நான் செய்ததையெல்லாம் கடிதத்தில் சொல்லிக் காட்டியுள்ளதாக விமர்சித்துள்ளீர்கள். சொல்லிக்காட்டுகிறேன் என்றால் தெரியாத பிறரிடம் சொல்லிக் காட்டி பெருமை அடித்தால் இது பொருந்தும். எதற்காக செய்தோமோ அந்த நோக்கம் மாறிப் போவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் எழுதவில்லை. சம்பந்தப்பட்டவர்களில் தலைவருக்கு மட்டும்க்குத்தானே எழுதினேன். அதுவும் 3 ஆண்டு பொறுமைக்குப் பின்தானே எழுதினேன்.
மக்கள் என்ன மடையர்களா?
விமர்சனங்களெல்லாம் பொது மக்கள் கூறியது அல்ல. இவர் (இலாஹி)தான் உண்டு பண்ணி எழுதுகிறார் என்றீர்களாம். கொதித்துப் போன பாக்கர் கோயமுத்தூர் பொதுக்குழுவுக்கு வந்தவர்களிடம் டென்சனாகி பேசி இருக்கிறார். இவர் யாரைத்தான் விமர்சிக்கவில்லை என்றீர்களாம். இவரை விமர்சிக்கணும் விமர்சிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளதா? விமர்சனங்கள் நான் உண்டு பண்ணியதா பொதுமக்களிடமிருந்து வந்ததா என்பது இருக்கட்டும். நீங்கள் பிரச்சாரத்தில் கூறும் கூற்று என்ன யார் விமர்சனம் என்று பார்க்கக் கூடாது. என்ன விமர்சனம் என்றுதான் பார்க்கவேண்டும் என்பதுதானே உங்கள் பிரச்சார கொள்கை. கடைசி முயற்சி கடிதத்தின் உட்கருத்தை விளங்கி விளக்கி உள்ளீர்கள். உள்கருத்து உருவாக காரணம் என்ன? நான் உண்டு பண்ணி சொல்ல மக்கள் என்ன மடையர்களா?
6-2-1999அன்று பட்டுக்கோட்டை ரத்ன மஹாலில் அதிரை, மதுக்கூர் ஜமாஅத்தார் சார்பில் மாற்றுமத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது இன்றைக்கு அதன் பெயர் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம். இந்த நிகழ்ச்சிக்கு ரிக்கார்டிங் வகைக்கு என்று பாக்கர் 25,000 ரூபாய் வாங்கி உள்ளார்.(இதை நான் எப்படி உண்டு பண்ணி கூறமுடியும்?)
அதிரை ஜமீல் அண்ணன் என்னிடம் பேசினார். 2000 ரூபாய் கொடுத்தால் உள்ளூர்க்காரன் வீடியோ பண்ணுவான் இவர்களை யார் கூப்பிட்டா? கேஸட்டை வேர தர மாட்டேங்கராங்க என்றார்.
மதுக்கூர் ஹாஜா சொன்னார் இது என்ன அண்ணே அநியாயமக இருக்கிறது 25.000மும் வாங்கிட்டு கேஸட் தர மாட்டேங்கராங்க. நிகழ்ச்சிக்காக வசூல் செய்தவர்களிடம் கேஸட் தருகிறோம் என்று சொல்லி வசூலித்தோம் என்றார்.
இது மாதிரி பல சகோதரர்கள் போனிலும் நேரிலும் கேட்டனர். இல்லை இல்லை ஆவசேப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி யு.மெட்டிக் கேஸட், டி.வியில் ஒளிபரப்ப உள்ளனர் உங்கள் நிகழ்ச்சியும்; டி.வியில் வருகிறதே என்று சந்தோஷப்படுங்கள் என்று கூறினேன்.
இதுபற்றி உங்களிடம் தொடர்பு கொண்டு நான்கைந்து முறை பேசினேன். நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு ஒரு பிரிண்ட் கொடுத்து விடுங்கள். யூமெட்டிக்கிலிருந்து காப்பி போட கூடுதல் செலவாகும் நீங்கள் போட்டுக் கொள்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு இறுதியில் பாக்கரிடமுள்ள யு.மெட்டிக் கேஸட்டை வாங்கி லுஹாவிடம் கொடுத்து விடுகிறேன் என்றீர்கள். பாக்கரிடம் போன லுஹா, பாக்கர் வருத்தத்தில் உள்ளார் என்றார். இதை ஒட்டி விவகாரம் வேண்டாம் என்று விட்டு விட்டோம்.
அல்லாஹ் அருளால் 8.10.1999 முதல் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற டைட்டிலுடன் மாற்று மத நிகழ்ச்சி டி.வியில் மீடியா வேல்ட் என்ற பெயரில் ஒளிபரப்பாக துவங்கியது. முஸ்லிம்மீடியா டிரஸ்ட் என்ற பொது நிறுவனத்தின் மூலம் டி.வியில் நிகழ்ச்சி நடத்தியபோது நஸ்டம். தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றால், அதை நடத்தியவர்களே மீடியா வேல்ட் என்ற பெயரில் தனியாக மட்டும் எப்படி நடத்த முடியும். என்ற கேள்வி வந்தது. இது மனித இயல்புதான். தனக்கு என்று வரும்போது கடின உழைப்பும் கவனமும் கவலையும் கூடுதலான பொறுப்புணர்வும் இருக்கும். எப்படியோ இஸ்லாமிய நிகழ்ச்சி தொடராக டி.வியில் வருகிறதே என்று சந்தோஷப்படுங்கள் என்று நான் கூறினேன்.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பட்டுக்கோட்டை நிகழ்ச்சியும் 31.12.1999முதல் ஒளிபரப்பானது. அதில்தான் முதல் முறையாக 'இந்த நிகழ்ச்சியை கேட்கும் பார்க்கும் அன்பார்ந்த நேயர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......மிகுந்த பொருட் செலவில் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கப்படுவதால் இறைவனுக்கு அஞ்சி ஆடியோ,வீடியோ,சி.டி.க்களை தனிப்பிரதி எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேடுட்டுக் கொள்கிறோம். தேவைப்படுவோர் மீடியா வேல்டு நிறுவனத்திடமே வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.' என்று பாக்கர் அறிவிக்கின்றார்.
உடன் எதிர்ப்பு வருகிறது பட்டுக்கோட்டை நிகழ்ச்சியை நடத்தியவர்களிடமிருந்து. நிகழ்ச்சியை நடத்த நாங்க ரூம் ரூமாக ஏறி இறங்கி வசூல் செய்தோம். முதலில் தயாரிப்பு மீடியா வேர்ல்டு என்று போட்டார்கள். இப்பொழுது செலவுகள் செய்ததாகவும் கூறி பிரிண்ட் எடுக்கக்கூடாது என்று உரிமை கொண்டாடுகின்றார்களே என்னவென்று கேளுங்கள் என்றனர். மறு வாரம் இந்த அறிவிப்பு வராததால் நான் சொல்லிதான் நின்று விட்டதாக விளங்கிக்கொண்டனர். நான் ஒன்றும் சொல்லவில்லை.
தயாரிப்பு மீடியா வேல்ட் என்று ஏன் போடனும்? சினிமா மாதிரி டைரக்ஷன் (இயக்கம்) அது இது என்று ஏன் போடனும்? வார வாரம் டைட்டில் தேவையா? ஓவர் விளம்பரம் ஏன். இப்படி பல கேள்விகள். தயாரிப்பு என்பது உரிமையைக் கொண்டாட போடவில்லை. டி.வி. நிகழ்ச்சிக்கு என்று சில விதிகள் இருக்கு. டைட்டில் இவ்வளவு நேரம் விளம்பரம் இவ்வளவு நேரம். நிகழ்ச்சி இவ்வளவு என்று. 5 நிமிஷத்திற்கு அதிகமாக விளம்பரம் போடவும் முடியாது. நிகழ்ச்சியின் உயிர் நாடி விளம்பரம்தான் என்பதோடு இன்னும் நீண்ட விளக்கம் பலருக்கும் கூறி இருக்கிறேன்.
திருவாரூர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது மீடியா வேர்ல்டு கேமராவுக்கு என்று 75000 ரூபாய் கேட்பதாகவும் கொஞ்சம் குறைக்க சொல்லுங்கள் என்று இங்குள்ள சகோதரர்கள் கூறினர். ஒவ்வொரு ஊர் நிகழ்ச்சிக்கும் இங்கு பணம் கேட்டு அந்தந்த பகுதியினருக்கு கடிதம் வரும். அதன் தொடர்சியாக செலவு பற்றிய விபரமும் வரும். அதனால் அதை ஒட்டிய கேள்விகளும் எழுகின்றது. காரைக்குடி நிகழ்ச்சிக்கு மட்டும் தான் வசூலிக்கப்படவில்லை என்று எண்ணினேன். ஆனால், அதற்க்கும் வசூல் செய்யப்பட்டுள்ளது. அந்த சமயம் நான் தாயகத்தில் இருந்ததால் இப்பொழுதுதான் அறிய முடிகிறது.
திருச்சி நிகழ்ச்சிக்கு மொத்த செலவில் 25 விழுக்காட்டிற்கு மேல் இங்கிருந்துதான் அனுப்பப்பட்டு நிகழ்ச்சி தள்ளிப்போடுவது தவிர்க்கப்பட்டது (இந்த வாசகத்தை டைப் செய்தவர் திருச்சி யூசுப்) ஆக ஒவ்வொரு ஊர் நிகழ்ச்சிக்கும் மீடியா வேர்ல்டு பாக்கர் கேமரா வகைக்கு 25 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வாங்கிய விபரங்களை எல்லோரும் அறிந்திருக்கின்றனர். நீங்களோ எந்த நிகழ்ச்சியிலும் பேச பணம் வாங்குவதில்லை என்று அறிவிக்கின்றீர்கள்.
மீடியா வேல்டுக்கு என்ன செலவு இருக்கிறது. இது பச்சை பொய்யில்லையா?
இந்த நிலையில் மீண்டும் டி.வியில் அந்த விளம்பரம் வருகின்றது. வாழைப்பழத்தில் ஊசி போடுவது போல். முதலில் மிகுந்த பொருட் செலவில்....... என்று துவங்கிய விளம்பரம் இப்பொழுது மீடியா வேர்ல்டினால் மிகுந்த பொருட் செலவில்...... என்று வருகிறது. தொடர்ந்து மக்களிடமிருந்து கேள்விகளும் விமர்சனங்களும் வருகின்றன. பி.ஜேயும் பணம் வாங்கவில்லை என்கிறார். பாக்கரும் கேமராவுக்கென்று பணம் வாங்கி விடுகின்றார். டி.வி நிகழ்ச்சிக்கு நிறைய விளம்பரங்கள் உள்ளன. இதற்க்குப் பிறகும் என்ன ஏராளமான பொருட் செலவு என்கின்றார் பாக்கர்! இதில் மீடியா வேல்டுக்கு என்ன செலவு இருக்கிறது. இது பச்சை பொய்யில்லையா?
சில வாரங்கள் இது போன்று டி.வியில் வந்தது. பிறகு எல்லா கேசட்டுகளிலும் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்த விளம்பரம்தான். இது பற்றி விமர்சித்தவர்களில் மூன்று பேர் பெயரை மட்டும் குறிப்பிடுகின்றேன். முத்துப்பேட்டை தீன், பெங்களுர் சுலைமான் மற்றும் பேட்டை அப்துல் கப்பார். ஆரம்ப காலங்களில் விளம்பரம் பற்றாக் குறை என்று கூறி சமாளித்து விட்டு மீடியா வேர்ல்டுக்கும் விமர்சனங்களை எழுதி உள்ளேன்.
ஏராளமான பொருட்செலவு என்று கூறுவது பச்சை பொய்யாக தெரிகிறது. காப்பி எடுக்காதீர்கள் என்று உரிமை கொண்டாடுவதும் ஜாக்கில் கூட இப்படி சொன்னது கிடையாது என்கின்ற விமர்சனம் வருகின்றது. எனவே ஒரிஜினல் பிரிண்ட்க்கு எங்களை அணுகுங்கள் என்று வேண்டுமானால் விளம்பரம் போடுங்கள் என்று எழுதியிருக்கின்றேன்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தயாரிப்பு மீடியா வேர்ல்டு என்று போட்ட போது டி.வி க்காக என்று கூறி இருந்தோம். நோன்பில் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பில் என்று உணர்வில் விளம்பரம் போட்ட நிகழ்ச்சிகளிலும் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஒளிபரப்பப்பட்ட மதுரை மாநாட்டு நிகழ்ச்சியிலும் தயாரிப்பு மீடியா வேர்ல்டு என்று வந்ததற்க்கும் விமர்சனம் வந்தது. இதையும் மீடியா வேர்ல்டுக்கு சுட்டிக்காட்டி எழுதி உள்ளேன். எந்த விமர்சனக் கடிதத்திற்க்கும் பதிலோ, செயல்பாட்டில் மாற்றமோ கிடையாது. போனில் பாக்கரிடம் கேட்டால் எந்தக் கடிதமும் வரவில்லை என்கிறார்.
ஐ.ஏ.ஸியின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்க்கும் பதிலில்லை. மீடியா வேர்ல்டில் பணிபுரிபவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும், வெளி நாட்டில் உள்ளவர்கள் சவூதி, கத்தார், துபை கேஸட் வியாபாரிகள் என்றும் மீடியா வேர்ல்டுதான் தமிழ் நாட்டில் தவ்ஹீது எழுச்சியை ஏற்படுத்தியதாகவும் பேசத் துவங்கி விட்டார்கள். இதை நேரில் அனுபவித்தேன். நம்மை கேஸட் வியாபாரிகளாக கருதுகிறார்கள் என்று கத்தர் சகோதரர்கள் போனில் கூறினர். அதே நேரம் கேமரா விஷயமாக என்னிடம் தொடர்பு கொண்டவர்களும் மீடியா வேல்டு பற்றி பேசினர்.
வியாபார நோக்கில் உருவான மீடியா வேல்டு தவ்ஹீது வாதிகள் மீது சேற்றை வாரி வீசுவதை சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பொது நிறுவனத்தை மோசடி செய்து தனி நிறுவனத்தை வளர்ப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அதுதான் கடைசி முயற்சி என்ற தலைப்பில் வந்த கடிதம். அந்த கடிதத்தில் உள்ள இந்த உள்ளார்ந்த அர்த்தத்தை நீங்கள் விளக்கும் போது தான் மற்றவர்கள் புரிய முடிந்திருக்கிறது. அந்த கடிதம் பற்றி விளக்கம் அளித்த நீங்கள் இவர் செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டி உள்ளார் என்றீர்களாம். பொது நல நோக்குடன் செய்யப்பட்டதை தனி நபரின் சுயநலத்துக்கு ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏன் செய்யப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்களில் முதன்மையான வருக்குத்தான் சுட்டிக் காட்டி எழுதினேனே தவிர ஊர் உலகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை.
குர்ஆன் கிளாஸ் ஜான் ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளை இடத்தில் நடந்தது. இஸ்லாமிய இளைஞர் இயக்கம் என்ற பெயரில் இயங்கிய அமைப்பினர் மேல் செலவுகளை செய்து வந்தனர். வாரா வாரம் வீடியோ பண்ண கேமரா வாடகை மட்டும் 800 ரூபாய் ஆகிறது. யாராவது கேமரா வாங்கித் தந்தால் இந்தச் செலவு மிச்சமாகுமே என்று முயற்சி செய்தனர்;. குடத்தினுள் இருந்த விளக்காக, மன்னிக்கவும். கிணற்றினுள் விளக்காக இருந்த உங்களை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியவர்கள் தவ்ஹீதுவாதிகள். சிறந்த மார்;க்க ஆய்வுரையாளரான உங்கள் உரைகளை கேட்காமலே சுன்னத் ஜமாஅத் மவுலவிகளின் புரளியால் மக்கள் வெறுத்தனர். உங்கள் உரையைக்கேட்டால் உண்மையை விளங்குவார்கள் என்று இலவச கேஸட்கள் வெளியிட்டவர்கள் தவ்ஹீதுவாதிகள். (நான் செய்த இந்தப் பணியை தவ்ஹீதுவாதிகள் செய்ததாக குறிப்பிட்டுள்ளேன்.)
இலவசமாக கொடுத்தாலும் வாங்காதவர்களம் வாங்கியும் கேட்காதவர்;களும் உண்டு. அப்படிப்பட்டவர்களும் கேட்டிட, கி.வீரமணி, ஆவடி மனோகரன், மதுரை ஆதீனம் போன்றவர்களின் உரைகளுடன் உங்கள் உரையைப் பதிந்து கேட்க வைத்தவர்கள் தவ்ஹீதுவாதிகள். உங்கள் உரைகளை தேதி, ஊர் வாரியாக விபரங்கள் குறித்து வைத்து பாதுகாத்து வருபவர்கள் தவ்ஹீதுவாதிகள். (நான் செய்த இந்தப் பணியை தவ்ஹீதுவாதிகள் செய்ததாக குறிப்பிட்டுள்ளேன்.)
வீடியோவில் பதிவது அதிசயம் என்றிருந்த காலத்தில் வீடியோ பதிந்தால், என் செலவு என்று தனியாக பொறுப்பேற்றவர்கள் தவ்ஹீதுவாதிகள். (நான் செய்த இந்தப் பணியை தவ்ஹீதுவாதிகள் செய்ததாக குறிப்பிட்டுள்ளேன்.) இவர்களுக்கு வியாபார நோக்கில் உருவான மீடியா வேல்டு கொடுக்கும் பெயர் கேஸட் வியாபாரிகள். மீடியா வேல்டு கூறும் கேஸட் வியாபாரிகளில்? ஒருவனான என்னிடம் தப்ஸீர் கிளாஸுக்காக இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தினர் கேமரா வாங்கி கேட்டனர். கேமரா வாங்கித்தந்தால் கேஸட் உரிமை உங்களுக்கு என்றனர். உரிமைவேண்டாம் ஒவ்வொரு நிகழ்ச்சியின் கேஸட் காப்பி ஒன்று மட்டும் அனுப்பி விடுங்கள் கேஸட்டுக்குரிய பணத்தை தந்து விடுகிறேன் என்று பேசி கேமரா வாங்கிகொடுக்க முடிவு எடுத்தேன்.
அப்பொழுதுதான் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் போன் போட்டு கேமராவை முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்கு தாருங்கள். இனி முஸ்லிம் டிரஸ்டில் குர்ஆன் கிளாஸ் நடத்துவோம் என்றார். சரி கேமரா வாங்கி அனுப்பவா பணம் அனுப்பவா என்றதற்கு பணம் என்றார். உடன் 45.000 ஆயிரம் ரூபாய் கேமராவுக்கு என்று கொடுத்தேன். உடன் பாக்கர் இஸ்லாமிய இளைஞர் இயக்கம் கலைக்கப்பட்டதாகவும். இனி குர்ஆன் கிளாஸ் முஸ்லிம் டிரஸ்ட்டில் நடக்கும் வீடியோ, ஆடியோ கேஸட் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் இருக்கும் என்று கூறி, அதுவரை பதியப்பட்ட சூரத்துல் பகரா சூரத்துல் அஹ்ஸாப் போன்ற முந்தைய நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் கேஸட்களை வாங்கி இருக்கிறார்.
குர்ஆன் கிளாஸ் நடைபெறும் பகுதிக்குரிய வாடகைப் பணம் என் மூலம் ஒருவர் மாத மாதம் தந்து கொண்டிருக்கிறார். மற்ற மற்ற செலவுகளுக்கு என்று வந்தவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இது போக ஸ்பான்சர் என்ற பெயரிலும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. ஆக இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் உதவியுடன் மற்றும் முஸ்லிம் டிரஸ்ட் - முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்ற பொது நிறுவனத்தின் சார்ப்பிலானது. இதன் ஒரிஜினல் கேஸட்கள் இங்குதான் இருக்கவேண்டும். இங்கு இருந்துதான் மூலப் பிரதியைக் கொண்டு சவூதி. துபை. கத்தர். மற்றுமுள்ள பகுதிகளுக்கு அமைப்பு ரீதியாக வாங்குபவர்களுக்கு கொடுக்கவேண்டும். அதன் மூலம் விற்பனை லாபங்கள் இந்த பொது நிறுவனத்திற்கு வரவேண்டும்.
மீடியா வேல்டு என்று பாக்கர் தனி நிறுவனம் நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. எல்லோரையும் போல் அவரும் ஒரு காப்பி முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்டிலிருந்து வாங்கி காப்பி போட்டு விற்கட்டும். யாரும் ஆட்சேபிக்க முடியாது. தனி நபரின் சுய லாபத்திற்காக பொது நிறுவனத்திற்கு மூடு விழா நடத்துவது எந்த வகையில் நியாயம்.
ஒரு இயக்கம் செய்து கொண்டிருந்த பணியை இன்னொரு இயக்கத்தின் பெயரால் வாங்கி விட்டு எல்லாச் செலவுகளையும் இயக்கத்தின் பெயரால் வசூலித்து விட்டு விற்பனை லாபங்களும் உரிமையும் தனியார் நிறுவனமான பாக்கரின் மீடியா வேல்டுக்கே எனக் கூறுவதை நியாயவான்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மக்கள் மறதியாளர்கள் என்பதால் அரசியல் வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி பொதுமக்களை ஏமாற்றி வாழ்கிறார்கள். சமுதாயம், சமுதாயம், சமுதாயம். என பேசி விட்டு தனது ஆதாயத்தைத்தான் பார்க்கிறார்கள். நாங்கள் முஸ்லிம் சமுதாயத்திற்காகத்தான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் வைத்திருக்கிறோம். இஸ்லாம் ஓர் அறிமுகம் நடத்தினோம். விரைவில் தனி சாட்டிலைட் துவங்குவோம் என்று பேசினீர்கள். முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' 'மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகி இரு ரமாழன் நிகழ்ச்சிகளுக்கு பிறகு தொடர்ந்து நடத்த முடியாமல் நஸ்டம் என்கிறீர்கள். ஆனால் சாட்டிலைட் வாங்கும் பணியை பாக்கருக்கு தாரை வார்த்து விட்டீர்கள். இதை கேட்க வந்தால் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் ட்ரஸ்டில்pருந்து எடுத்து விட்டோம் என்கீறீர்கள்.
டி.வி. நிகழ்ச்சி பற்றிதான் கேட்க முடியாது. இன்று மீடியா வேல்ட்டுக்கு என 10 கேமரா இருக்குமானால், அது முஸ்லிம் ட்ரஸ்டுக்கு என வாங்கப்பட்ட ஒரு கேமரா என்ற விதையில் முளைத்ததுதான். பாக்கர் தங்க கடையில் இழந்த முதலை கேஸட்டில் எடுத்து விட்டார் என்று (பி.ஜே.யாகிய) நீங்களே சொன்னீர்கள், சொல்லி இருக்கிறீர்கள். முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் என்ற பெயரில் வாங்கிய பணியை முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் தொடராமல் முடக்கி மீடியா வேல்ட்டுக்கு எப்படி தாரை வார்க்கலாம் என்று கேட்க உரிமை இருக்கிறதல்லவா? இது தானே அந்த கடிதத்தின் உள்ளர்த்தம் என்று விளங்கி இருக்கிறீர்கள்.
இப்படி விளங்கி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் சார்பில் துவங்கிய டி.வி. நிகழ்ச்சியை மீடியா வேல்ட்க்கு தாரை வார்த்தது தப்பு நடந்த தவறுக்கு வருந்துகிறோம் என்று அறிவித்து இருக்க வேண்டும். இது போல் ஜாக் சார்பில் ஒரு பணி துவங்கப்பட்டு அது கோவை ஐயூபுக்கோ முஸ்தபா கமாலுக்கோ தாரை வார்க்கப்பட்டு இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
இங்கு என்ன செய்தீர்கள். உங்கள் சேனல் எனக்கு அடைக்கப்பட்டது. இலாஹியை த.மு.மு.க.விலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டார்கள் என்று மேலப்பாளையம் மக்களிடம் அறிவித்தவரிடம் ஏன் என்று கேட்டதற்கு கடைசி முயற்சி என்ற கடிதம்தான் காரணம் என்று கூறி உள்ளார். பிறகு சென்னை சென்று வந்தவர் பழையபடி இலாஹிக்கு செல்வாக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் பணம் அனுப்பி இருக்கிறார். எனவே முன்போல் ஈ.மெயில்லெல்லாம் வந்து போய் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் இந்த கடிதத்திற்கு பிறகு அடைக்கப்பட்ட உங்கள் சேனல் நமக்கு திறக்கப்படாததை விளங்கிக் கொண்டேன்.
நான் எழுதிய கடைசி முயற்சி என்ற கடிதம் பாக்கர் மனதை விட உங்கள் மனதைத்தான் ரொம்பவும் பாதித்து விட்டதாம் பாக்கர் கூறி இருக்கிறார். எண்ணிப் பார்க்கிறேன். பாக்கர் பெயருக்கு அனுப்பப்பட்ட ரூ 30 ஆயிரம் செக்குக்கும் பக்ரி இடம் கொடுக்கப்பட்ட அ.த.கூ. 35,000க்கும் ரசீது வரவில்லை என்று கூறிய போது ஹாமித் பக்ரியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதி அனுப்பச் சொன்னீர்கள். அதே மாதிரி ரசீது அனுப்பாத பாக்கர் மீது நடவடிக்கை எடுக்க கூறி எழுதக் கூறவில்லை. 2 இடத்தில்லிருந்தும் 6மாதம் கழித்து தான் ரசீது வந்தது.
திருச்சி இ.ஓ.இ.மா. நிகழ்சிசிக்கு சென்று வந்த அப்துர்ரஹ்மான். ஒரு மவுலவி (அலி அக்பர்) பெயரைக் கூறி அவர் சொன்னார். சி.டி.யெல்லாம் பி.ஜே.தான் போடுகிறாரர் மீடியா வேல்டு மூலம் அந்த வருமானம் பி.ஜே.க்கு தான் போகிறது இதை அந்த மவுலவியிடம் பாக்கர் கூறியதாக கூறினார். இதைப் பற்றி யாரிடமும். பேச வேண்டாம் என்று அப்துர்ரஹ்மானிடம் கூறிவிட்டேன். ஏனென்றால் பாக்கர் கூறி இருப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே மாதிரி மற்றவர்களிடமும் பாக்கர் கூறி இருக்கிறார்.
வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் மிக மிக நைசாக முதலில் மிகுந்த பொருட் செலவு என்றும் பிறகு மீடியா வேல்டினால் மிகுந்த பொருட்செலவு என்றும் விளம்பரம் செய்த பாக்கர் தஃவாக்காக (அதாவது மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்காக) என்றாலும் எங்களிடம் அதன் உரிமையை பெறனும் என்று உரிமை கொண்டாடி விளம்பரம் செய்கிறார். கண் காணிப்பதில் வல்லமை மிக்க அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்கிறார்.
ஒவ்வொரு ஊர் ஜமாஅத்தும் தெருத் தெருவாக வசூலித்து நடத்திய அதாவது தயாரித்த நிகழ்ச்சியை காப்பி போட அவர்களுக்கு உரிமை இல்லை. தயாரிப்பு என்ற இடத்தில் அந்த அந்த ஊர் ஜமாஅத் பெயர் ஏன் போடவில்லை. இந்த துறையின் நிகழ்ச்சிகளில் தயாரிப்பு என்று போட்டால் என்ன அர்த்தம். முதலீடு (பணம்) போட்டு தயாரித்தவர் என்பதுதானே. தயாரிப்பு மீடியா வேல்டு என்று துவங்கி காப்பி ரைட் வரை வந்தாகி விட்டது.
இந்த விளம்பரத்திற்குப்பின் வந்த விமர்சனங்களை ஒட்டி அப்துர்ரஹ்மான், நாஸர், அக்பர் அலி, போன்றோர் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அப்துர்ரஹ்மான் மீண்டும் திருச்சி நிகழ்வை விரிவாகக் கூறுகிறார். இந்த தகவலை அலி அக்பர் உமரி சொன்னாரா?, ஸைபுல்லாஹ் ஹாஜா சொன்னாரா? ஞாபகம் இல்லை. 2 பேரில் ஒருவர் சொன்னார் பாக்கர் கூறியாதக. இவர்கள் சென்ற பின் சிறிது நேரத்தில் ஜின்னா 4 பேருடன் ரூமுக்கு வருகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு மற்றவர்களை கீழே போக சொல்லி விட்டோம்.
பிறகு ஜின்னாவிடம் நடந்த விமர்சனங்களை, திருச்சி அப்துர்ரஹ்மான் கூறியதை, மீடியா வேல்டுக்கு ஏற்கனவே நான் எழுதிய கடித விபரங்களைக் கூறி பாக்கரிடம் சொல்லுங்கள். இந்த விளம்பரம் பல விமர்சனங்களுக்குரியது. தரமான ஒரிஜினல் பிரிண்ட் என சொல்லலாம் என்று சொல்லி அனுப்பினேன்.
பாக்கரிடம் ஜின்னாவும் தனியாகவே கூறி இருக்கிறார் ஆனால் பாக்கர் தனக்கே உரிய பாணியில் இலாஹி முபாஹலா செய்வாரா? என்று கேட்டு பூதகரமாக ஆக்கி இருக்கிறார். உடன் அப்துர்றஹ்மானிடம் எழுதி வாங்கினேன். மவுலவிகள் பெயரைக் குறிப்பிடாமல் எழுதக் கூறினேன் அப்படியே எழுதி தந்தார். பாக்கர் மற்றவர்களிடம் கூறியதை மறுக்கலாம் என்னிடமே கூறி இருக்கிறார். இதற்கு பிறகு துபையில் என்ற வாசகத்துடன் என்னை கொச்சைப்படுத்தும் வகையில் உணர்வில் விளம்பரம் போட்டீர்கள்.
உங்களுடன் இருந்து கொண்டு, உங்களை பலர் விமர்சிக்க அஞ்சுவதே உங்களிடம் மீடியா இருக்கிறது. அதில் போட்டு கேவலப்படுத்திவிடுவீர்கள் என்ற பயத்தில்தான் என லுஹா பல முறை கூறி இருக்கிறார். நான் எழுதிய விமர்சனங்களால் பெரிய அளவில் நன்மை ஏற்படாவிட்டாலும், நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. இத்தனை காலம் மறந்து இருந்த முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்டின் பெயர் மலிவு விலை புத்தக கண்காட்சி என்ற பெயரில் நினைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக உணர்வு குடும்பம், உணர்வு நிர்வாகம் என்ற பெயரில் பெருநாள் வாழ்த்துக்கள் போட்டு வந்த உணர்வு வார இதழில், இப்பொழுது முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் வாழ்த்துகிறது என்ற அறிவிப்பு நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ளது. மீடியா வேல்டு மீடியா வேல்டு என்று கூறிக்கொண்டு இருந்த பாக்கரும் 6 ஆண்டுகளாக முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் மீடியா உலகில் சிறந்த பணி ஆற்றியதாக நினைவு கூறி உள்ளார். இது போன்ற விமர்ச்சனங்களை பரவலாக பேசும் பலர் உங்களிடம் சொல்வதை உங்களுக்கு எழுதுவதை வேண்டாம் என்றே கூறுகிறார்கள்.
உங்கள் சேனல் அடைக்கப்படால் தவ்பா வாசல் திறக்க மற்றவர்களைப் போல் என்னையும் அணுகக் கூறினர். சிலர் மன்னிப்புக் கேட்டு எழுதக் கூறினர். மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் தப்பு செய்யவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுவது தப்பு என்றால் அந்த தப்பை தொடர்ந்து செய்ய தயங்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
சமுதாய நிறுவனமான முஸ்லிம் ட்ரஸ்ட், முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் பொறுப்பாளர் என்று நிகழ்ச்சிகளில் தன்னை அறிமுகப்படுத்தும் பாக்கர், தன் சுய இலாபத்திற்காக தன் சொந்த நிறுவனமான மீடியா வேல்டின் வளர்ச்சிக்காக சமுதாய நிறுவனத்தை முறையாக செயல்பட விடவில்லை. இது எமது தெளிவான குற்றச்சாட்டு. முஸ்லிம் ட்ரஸ்ட்டில் பிரச்சார நோக்கில் நடைபெறும் நிகழ்சிகள் முழுமையாக வெளி நாட்டிற்கு உடனடியாக போய்விட்டால் மீடியா வேல்டு வியாபாரம் பாதிக்கிறது. மீடியா வேல்ட் நஸ்டம் ஆகிறது அதனால் வெளிநாட்டு வாசிகளுக்கு கேஸட் கிடைப்பதற்கு தடையாக இருந்தது மீடியா வேல்ட். இப்போழுது காப்பி தரத்தை குறைத்து வெளியிடுகிறது. 3 வது 4 வது பிரிண்டை வெளியிட்டு அதிலிருந்து காப்பி எடுக்க முடியாதவாறு செய்து. வியாபார நோக்கில் பிரச்சாரபணிக்கு தடையாகவும் உள்ளது.
அந்த பணம் முஸ்லிம் ட்ரஸ்டுக்கு வருகிறதா?
விற்பனை விலை ரூ 250 என்று உள்ளபோது ரூ 300ம் ரூ 200 என்று உள்ளபோது ரூ 250ம் மீடியா வேல்ட்டில் வாங்கினார்கள். ரூ 175 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெளி நாட்டவர்களிடம் ரூ 200ம் மீடியா வேல்ட்டில் வாங்குகிறார்கள். பாக்கரிடம் கேட்டால் புது தலைப்புக்கு அப்படி வாங்குவார்கள் என்கிறார். (புது தலைப்புக்கு மட்டும் அல்ல பழைய தலைப்புக்கும் கூடுதாக வங்குவதற்கு ஆதாரமாக பில் உள்ளது.) அங்கு வேலை செய்பவரிடம் கேட்டால், ஒருவர் சொல்கிறார் தயாரிப்பு செலவுக்கு என்று. ஒருவர் சொல்கிறார் வெளிநாட்டுக்கு கேஸட் போவதால் எங்கள் மீடியாவேல்டுக்கு வியாபாரம் பாதிக்கிறது. அதனால் கூடுதலாக வாங்குகிறோம் என்று. புது தலைப்பு என்ற அடிப்படையிலோ தயாரிப்பு என்ற அடிப்படையிலோ எப்படி கூடுதலாக வாங்கினாலும் கூடுதலாக வாங்கும் அந்த பணம் முஸ்லிம் ட்ரஸ்டுக்கு வருகிறதா?
உண்மையான பொறுப்பாளர் என்ற முறையில், அல்லாஹ்விடம் நீங்கள் தான் பொறுப்பாளி என்ற முறையில் உங்களிடம் முறையிடுகிறேன். பொது மக்களிடம் வசூலித்து நடத்திய நிகழ்சிகளின் அனைத்து கேஸட்களின் ஒரிஜினல்களும் முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்கு வரவேண்டும். முஸ்லிம் ட்ரஸ்டுக்கு என்று இடம் இருக்கிறது. ஊழியர்கள் இருக்கின்றார்கள். அங்கிருந்து எல்லோருக்கும் நல்ல பிரிண்ட் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாருக்கும் காப்பிரைட் வழங்க வில்லை என்று உணர்விலும் வீடியோ, சி.டி. க்களிலும் உங்கள் அறிவிப்பு வந்தது.
@ காப்பிரைட் எம்பளத்துடன் பதிவு உரிமை மீடியா வேல்டுக்கே மீறி பதிவு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றவாசகம் ஆடியோ, வீடியோ, சி.டி. கேஸட் கவர்களில் வந்துள்ளது. அது உங்களுக்கு தெரியாது என்று நம்புகிறோம். அந்த காப்பிரைட் விளம்பரம் இன்றும் மீடியா வேல்ட் ஆடியோ கேஸட்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உங்கள் கவனத்திற்குதெரிவித்து கொள்கிறோம்.
அ.த.ஜ.கூ.விலிருந்து நிதி கேட்டு கடிதம் வந்தது. அதில் தாஈகளுக்கு (பிரச்சாரகர்களுக்கு) சம்பளம், முடுக்கி விடப்பட்ட பிரச்சாரப் பணிகளுக்கு ஏற்படும் செலவுகள் என்று மொட்டையாக எழுதி உள்ளனர். இந்தக் கடிதம் மற்றவர்களுக்கும் வந்திருக்கிறது. கடிதம் வரப் பெற்றவர்களில் சிலர் தாஈ யார்? என்ன சம்பளம் என்ன பணி என்ற விபரம் கேட்டார்கள். அந்த அடிப்படையிலும் மேல்மட்ட குழு உறுப்பினர் என்ற அடிப்படையிலும் வந்த கடிதத்தை ஒட்டியும் ஏற்கனவே உள்ள விமர்சனங்களைத் தழுவியும் கடிதம் எழுதினேன். பதிலே இல்லை என்பது மட்டுமல்ல பகைமை கொண்டாடப்பட்டது. கடைசி முயற்சி கடித்தத்தினால் ஏற்பட்ட வெறுப்புணர்வை அதன் மூலம் முழுமையாக காட்டாமல் கூட்டமைப்புக்கு எழுதிய இந்தக் கடிதம் மூலம் வெறுப்பு ஏற்பட்டதாக காட்டப்படுகிறது.
பணம் இரண்டரை லட்சத்திற்கு மேல் கூட்டமைப்பில் ஒப்படைத்துள்ளோம்.
நான் 26.9.2000. அன்று சென்னையில் நடந்த அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்ப கூட்டத்தில் மதுரை மாநாட்டு கணக்குகளையும் மீதி பணம் ரூ1,87,800க்குரிய செக்கையும் ஓப்படைத்தேன். அது 3.10.2000 அன்று பாஸாகி உள்ளது. அதற்குப் பிறகு அல்முபீன் கணக்கில் இருந்த மாநாடு பணம் சிலோனிலிருந்து வந்த 50 ஆயிரம் மாநாட்டு திடல் அட்வான்ஸ் 25 ஆயிரம் என்று மாநாட்டு மீதிப் பணம் இரண்டரை லட்சத்திற்கு மேல் கூட்டமைப்பில் ஒப்படைத்துள்ளோம்.
மேல் மட்டக்குழு உறுப்பினர் பதவி எதற்கு சிங்கி அடிக்கவா?
2 மாதம் கூட ஆகவில்லை. ரமழானில் ஸஹர் நேர டி.வி. நிகழ்ச்சிக்காக போன் பண்ணிய நீங்கள் பொருளாதாரம் இல்லை. இதன் பெயரால் கூடுதல் வசூல் செய்து அமைப்புச் செலவுகளுக்கு பயன்படுத்தனும் என்கிறீர்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் என்ன வழியில் செலவு ஆனது, இது பற்றி கேட்டு எழுதக்கூட உரிமை இல்லாத மேல் மட்டக்குழு உறுப்பினர் பதவி எதற்கு சிங்கி அடிக்கவா?
மாநாட்டுக்குப் பிறகு உருவான அ.த.ஜ.கூட்டமைப்பு மாநாட்டு மீதப் பணத்தை எந்த உரிமையோடு பெற்றது? அந்த உரிமையில் தான் மாநாடு முடிந்து ஆண்டு ஓன்றாகியும் மதுரை மாநாட்டு ஆடியோ வீடியோக்களை வெளியிடாமல் பாக்கர் லேட் செய்கிறாரே அதைப் பற்றி கவனியுங்கள் என்று கூட்டமைப்புக்கு எழுதினேன். 1999 ஜூலை. த.மு.மு.க. மாநாட்டை விறு விறுப்பாக வித விதமாக வெளியிட்ட பாக்கர் நிறுவனம். தவ்ஹீது மாநாட்டு கேஸட்டை வெளியிடாமல் பிற்படுத்துவது பி.ஜே.யுடன் இருப்பவர்களிடம் தவ்ஹீது விரோதப் போக்கு உள்ளது என்று மவுலவிகள் கூறியது போல, இதை தவ்ஹீது ஜமாஅத் விரோதப் போக்கு என்று ஏன் எண்ணக்கூடாது. இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? கேட்டு எழுதக் கூடாதா?
ஜாக்கை குறை சொல்லி வந்தவர்கள் அதைவிட மோசமாக உள்ளனர் என்று பொதக்குடி அப்துஸ்ஸமது விமர்சிக்கிறார். அல்முபீனில் ஓரிருவர் கட்டுரை மட்டும் தானே வருகிறது மற்ற மவுலவிகள் ஏன் எழுதவில்லை. பரங்கிப்பேட்டை ஸாஜிதுர்ரஹ்மான் கேட்கிறார். ஏன் பெயர் போடுகிறேன் என்றால் எல்லா விமர்சனமும் நான் உண்டு பண்ணியது என்கிறீர்களாமே அதற்காகத்தான். விமர்சனம் யார் கூறினாலும் பொது வாழ்கையில் உள்ளோர் பதில் சொல்லி ஆகவேண்டும் என்று பேசிய நீங்கள், எனக்கு பதில் எழுதக் கூடாது. என்னுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டீர்கள்.
விமர்சிப்பவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்பாத தலைமை உருப்படாது. கோவையில் கமாலுத்தீன் மதனியை விமர்சித்து பேசிய போது நீங்கள் கூறிய தத்துவம் இது. மார்க்க ரீதியான மஸாயில் பிரச்சனையில் எவ்வளவு குறுக்குக் கேள்விகள்- விமர்சனங்கள் வந்தாலும் புன் முறுவலுடன் பதில் கூறுவீர்கள். உங்களால் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேட்டை விமர்சித்தால் தாங்கிக்கொள்ள முடியாது. மஸாயில் என்பது மார்க்கக் கொள்கையை விமர்சிப்பதாக இருக்கும். நிர்வாகம் உங்களை விமர்சிப்பதாக இருக்கும். நான் எழுதிய நிர்வாக விமர்சனம் உங்களை விமர்சிப்பதாக இருந்ததது. அதனால் உங்கள் சேனலை அடைத்ததோடு மற்றவர்களையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டீர்கள். இனி சுருக்கமாக வருகிறேன். இனி விரிவாக எழுதுவதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்.
பி.ஜே.யின் கள்ளப் பிள்ளை.
குல்லுகும் ராயின் குல்லுகும் மஸ்வூல் அர்ருவியதிஹி. ஹதீஸை தங்களுக்கு விளக்க வேண்டியது இல்லை, த.மு.மு.க ஆகட்டும் கூட்டமைப்பு ஆகட்டும் உண்மைத் தலைவர் நீங்கள்தான் ஜாக்கில் மட்டும் என்ன நீங்கள் இருந்த காலம் வரை உங்கள் கருத்துக்கு மன்னிக்கவும் விருப்பத்துக்கு மாற்றமாக எஸ்.கே. ஏதாவது செய்துவிட முடியுமா?. நீங்கள் எந்த பொறுப்பிலும் இல்லை என்று சொல்லலாம். ஜவாஹிருல்லாஹ்வும் சரி பக்கிரியும் சரி டம்மிகள்தான். இம்மியளவும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக அசைய முடியாது. பி.ஜே.யின் கள்ளப் பிள்ளை என்று வர்ணிக்கப்பட்ட கல்விச் சங்கத்தை கலை என்ற உடன், கல்விச் சங்கம் கலைக்கப்பட்டாதக அறிவித்தார் ஹாமித்பக்ரி. இதன் மூலம் எனக்கு சம்பந்தமே இல்லை என்று நீங்கள் கூறிய கல்விச் சங்கத்தின் உண்மைத் தலைவர் நீங்கள்தான் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
நான் எந்தப் பொறுப்பிலும்; இல்லை என்று இந்த உலகில் கூறிவிடலாம். மறுமையில் அல்லாஹ்விடம் நீங்கள் தான் பொறுப்பாளி எனவே உங்கள் பொறுப்பை உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் இருப்பவர்கள் முழு மனதுடன் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையில் தான் உள்னனர். மவ்த் ஹயாத் எல்லோருக்கும் உள்ளது. ஒரு தலைவரின் மரணத்திற்குப் பின் பல பிரிவுகளாக இருந்த அமைப்புகள் ஒன்று பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஒரு தலைவரின் மரணத்திற்குப் பின் ஒரு அமைப்பு பல கூறுகளாகப் பிரிந்த வரலாறும் உண்டு.
த.மு.மு.க. என்ற அமைப்பு 2 அணிகளாகப் பிரியும் அறிகுறி தென்பட்டு விட்டது. த.மு.மு.கவின் ஆரம்பத்தில் தவ்ஹீதுவாதிகளிடம் கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸுக்குட்பட்டு என்ற வார்த்தை இப்பொழுது வெளியிட்ட பைலா புக்கில் இல்லை. உணர்வில் வெளிவரும் த.மு.மு.க கிளைகளின் புதிய நிர்வாகிகள் பட்டியலைக் காணும் ஒவ்வொரு ஊர்த் தோழர்களும் இவண் குராபி இவண் குடிகாரன், இவண் வட்டி மூஸா என்று த.மு.மு.க கிளை நிர்வாகிகளை அடையாளம் கண்டு அழுது கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஒத்த கருத்துள்ள மவ்லவிகளை அணுகி உங்களை சந்தித்து முறையிடச் செய்வோம். பி.ஜே. ஒத்து வரவில்லை எனில் எல்லோரும் ஒதுங்குவோம் என்று கூறச் சொல்வோம் என்று கூறினோம்.
அப்பொழுது மவ்லவி நிஜாமுத்தீன் மஹ்ழரி சொன்னார். இன்றைய தவ்ஹீது மவ்லவிகள் குராபி மதரஸாவில் உருவாகி, முத்தவல்லிகளுக்கு கீழ் அடிமையாக இருந்து வந்தவர்கள்தான். அவர்களின் அடிமைத்தனம் அவர்களை விட்டும் இன்னும் போகவில்லை. அதனால்தான் அவர்கள் பி.ஜே. இடம் அடிமையாக கிடக்கின்றனர். இந்த அடிமைகள் போய் பி.ஜே. இடம் எதுவும் பேச மாட்டார்கள் என்று கூறினார். இனி விரிவை அஞ்சி சுருக்கமாக வருறேன். இனிதான் விரிவாக எழுத வேண்டிய மேட்டர் உள்ளது. விரிவாக எழுதியதை காலச்சூழல் அறிந்து கிழித்து விட்டு சுருக்குகிறேன்.
1994 ல் இனி நான் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன், செய்ய வேண்டியது இல்லை. தவ்ஹீது பிரச்சாரத்துக்கு என்று தாஹிகள் உருவாகி விட்டார்கள், என்று நீங்கள் கூறியதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.
1994 ஆகஸ்ட் 28 இஜ்திமா அன்று தென்காசி கடை வீதிகளிலும் லாட்ஜிலும் நடந்த சந்திப்புகள் முதல் வரிசையாக நினைவூட்டிப் பாருங்கள்.
அண்ணாநகர் பள்ளியில் வைத்து எஸ். கே. யை தனியாக அழைத்து நீங்களும் பக்ரியும் பேசியது. இப்படி வரிசையாக மட்டுமல்ல அணு அணுவாக சிந்தியுங்கள்.
குல்லுக்கும் ராயின் ஹதீஸையும் அவ்வப்போது நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
1995 ஆகஸ்ட் 28அன்று சென்னை வீதியில் இறங்கிய தவ்ஹீதுவாதிகள் தவ்ஹீவாதி பி.ஜே. என்ற நம்பிக்கையில்தான், பி.ஜே. என்ற தனி நபரான உங்களை காப்பாற்றத்தான் வீதியில் இறங்கினார்கள். த.மு.மு.க. என்பது சமுதாயத்தின் பாது காவலுக்கு உருவானது அல்ல. கேஸட் ஆதாரம் அது இது என்று பேசவில்லை அல்லாஹ்வுக்காக நினைத்துப் பாருங்கள். த.மு.மு.க. சக்தி வாய்ந்த அமைப்பாக உருவானதற்கு காரணம் தவ்ஹீது வாதிகளின் தியாகம். எனவே நீங்கள் ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதிப்படி அது தவ்ஹீது ஜமாஅத்தின் தலைமைக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். இல்லை எனில் அதைக் கலைக்க வேண்டும்.
வெளி நாட்டு நிறுவனங்களில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்திற்கு, பள்ளிவாசல்களுக்கு, அனாதை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உதவி பெறக்கூடாது என்ற உங்கள் கொள்கையில் உள்ள ஓட்டை உடைசல்களை ஆராய விரும்பவில்லை. அந்த விமர்ச்சனத்திற்கு வரவில்லை. வெளிநாட்டு நிறுவனத்தில் வாங்கக்கூடாது என்பது குர்ஆன் ஹதீஸா? அது இஸ்லாம் கூறும் கட்டளையா தெளிவாக்குங்கள். எல்லோரும் கட்டுப்படுவோம்.நபி(ஸல்) அவர்களிடமே ஸஹாபாக்கள் மார்க்கம் என்றால் கட்டுப்படுகிறோம். தங்கள் தனிக் கருத்து என்றால் எங்கள் ஆலோசனையை கேளுங்கள் என்று கூறி உள்ள சம்பவங்களை எண்ணிப் பாருங்கள்.
கிறிஸ்தவ மிஷன்கள் கல்வி மற்றும் மருத்துவத் துறை மூலம் அவர்கள் மார்க்கத்தை எப்படி வளர்க்கிறார்கள். இன்றைக்கு எத்தனை ஏழை முஸ்லிம் ஊர்களில் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. தன்னிறைவு பெற்ற முஸ்லீம் நாடுகள் ஏழை முஸ்லிம்களுக்கு உதவி செய்கிறார்கள். அதற்கு நீங்கள் ஏன் தடையாக இருக்கிறீர்கள். குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லாத இந்த தடையை எடுங்கள்.
த.மு.முக. எதனால் உருவானது. முஸ்லிம் சமுதாயத்தைக் காக்க தர்காவாதியா, தவ்ஹீதா, முரீது கூட்டமா என்று பிரிவுகள் பாராமல். குடிகாரனா, வட்டிமூசாவா என்று செயல்களை பாரமல் பல கொள்கை உடையவர்களை முஸ்லிம் என்ற முறையில் ஒன்றுபடுத்த என்று கூறினோம். இது அடிப்படையற்ற ஒற்றுமை. இந்த ஒற்றுமை மூலம் நாம் எதிர் பார்த்தது பி.ஜே.யாகிய உங்களின் தற்காப்பு. மக்களிடம் கூறியது சமுதாயத்திற்கு பாதுகாப்பு. அரசிடம் சலுகை (உலக ஆதாயம்) பெறுவது. ஆக த.மு.முக. எதனால் உருவானது என்ற உண்மை ஆராய்ச்சிக்கு போக வேண்டாம்.
தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமை என்றால் அது ஈருலக ஆதாயம் அல்லவா? நமக்குள் கருத்து வேறுபாடுகளே தவிர அடிப்படை குர்ஆன் ஹதீஸ்தான் என்ற கொள்கையில் வேறுபாடு இல்லை. இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தவ்ஹீது எழுச்சியிலும் வளர்ச்சியிலும் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதுபோல் அது பல பிரிவுகளாக ஆகி பலஹீனப்பட்டதிலும் தங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த முறை நான் ஊரால் இருந்தபோது ஊருடன் இருந்தால் இவர்தான் தலைவர் ஆஹா ஓஹோ என்று த.மு.மு.க. அலுவலக மாடியில் வைத்துக் கூறினீர்கள். இப்படித்தான் உங்களிடமிருந்து பிரிந்து சென்ற மன்னிக்கவும். நீங்கள் கழட்டி விட்டு பிரிந்து வந்த ஒவ்வொருவர் பற்றியும் புகழ்ந்துள்ளீர்கள். ஆக கோளாறுகள் வேறு எங்கும் இல்லை உங்களிடம்தான் இருக்கிறது. மனிதர்கள் என்றால் குறைகள் இருக்கும். குறைகளே இல்லாத மனிதன்தான் பொறுப்புக்கு வரணும் என்றால் யாருமே தேறமாட்டார்கள் என்று, 02.04.1994 அன்று திருச்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசினீர்களே அதுதான் தங்களின் உண்மையான நிலை. பிறகு எடுத்த முடிவுகள் சந்தர்ப்ப சூழ்நிலை.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையை மனதில் கொண்டுதான் பெரும்பாலான தவ்ஹீதுவாதிகள் உங்கள் பின்னால் உங்கள் பாதுகாப்புக்காக வந்தார்கள். 1992 டிசம்பர் 6 அன்று. இன்று உங்களின் பிழைப்பாக ஆகிவிட்ட பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது. அதை ஒட்டிய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், காயம் அடைந்த வர்கள், பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு என நிதி திரட்டினோம். அதை உங்களைக் கொண்டு கொடுக்க முடிவு செய்தோம். இதன் மூலம் நமது தவ்ஹீது ஜமாஅத்தும் நாம் கூறும் குர்ஆன் ஹதீஸ் கொள்கையும் மக்களிடம் நன்மதிப்பை பெறும். இந்த எண்ணத்தில் உங்களை அணுகினோம். அப்போது வர மறுத்த நீங்கள். தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பத்திரிக்கையில் பேட்டி கொடுக்க மறுத்த நீங்கள், ரேடியோ, டி.வி.ல் பேச கூறினால் எடிட் செய்வான், குறுகிய நேரம் தருவான் அதற்குள் என்னக் கருத்து கூற முடியும். என பேச மறுத்த நீங்கள். மேடைக்காக மக்களை ஈர்க்க சற்று வித்தியாசமான ஆடையுடன் வாருங்கள் என்றால் வர மறுத்த நீங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையை- நிர்ப்பந்த நிலையை மனதில் கொண்டுதான் கறுப்பு டவல் போட்டீர்கள். பத்தரிக்கைப் பேட்டி, டி.வி. உரை, கறுப்பு மேலாடை என்று மாறினீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பணிகளிளும் அதைக் கொண்டு போய் வழங்கும் பணிகளிளும் ஈடுபட்டீர்கள்.
இது பற்றியெல்லாம் சற்று நியாய உணர்வுடன் சிந்தித்தால். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அருளியது போல் நம் இதயத்திடம் கேட்டால். தவ்ஹீது வளர்ச்சிப் பணிக்காக எல்லோரும் சேர்ந்து துவங்கிய அமைப்ப பற்றி ஊழல் மோசடி என்ற பேச்சே வராது. பழனிபாபா கொல்லப் பட்டவுடன். முதன் முதலாக த.மு.மு.க சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் வசூலிக்கப்பட்டது அந்த பணத்திலிருந்து ரூ 2 இலட்சத்திற்கு மேல் உங்கள் நண்பரான ஜின்னாஹ் என்ற ஒரு தொழில் அதிபருக்கு உதவியாக வழங்கப்பட்டது உட்பட பல ஊழல்களை உங்கள் பாணியில் சொல்வதென்றால் பல கூட்டு மோசடிகள் பற்றிய விபரங்கள். வண்டி வண்டியாக எங்க ஊரில் இறக்குமதியாக உள்ளது (இதை லுஹா மூலம் அறிந்தோம்)
உங்கள் விருப்பப்படி பாக்கர் த.மு.மு.க.வில் செய்துள்ள பண மோசடிகள் பற்றி நாம் எழுதியதைவிட கூடுதலாக உங்களுக்குத் தெரியும். நாம் எந்த பி.ஜே.யுடைய பாதுகாப்புக்காக த.மு.மு.க.வை துவங்கினோமோ? அதற்கு பங்கம் வந்து விடக்கூடாது என்று தான் அப்பொழுது மவுனியாக இருந்தோம். துவங்கிய நோக்கப்படி அந்த நேரத்தில் இருந்த கண்டங்களை கடந்து பாதுகாக்கப்பட்டு விட்டீர்கள். எந்த தவ்ஹீது வாதிகளால் பாதுகாப்பு கிடைத்ததோ அவர்களுக்கு எதிராக நீங்கள் செல்வதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இது உங்கள் மீது கடமை.
சமுதாய முன்னேற்றம் என்று போட்ட கோஷத்தில் த.மு.மு.க. மூலம் முன்னேற்றம் அடைந்தவர்கள் 2 பேர்தான் தங்கக் கடையை இழந்ததாக மேடை தோறும் கூறிவருபவரும் நீங்களும்தான். காபி ரைட் பிரைச்சனை வந்ததும் நான் இனி எங்கும் பேச மாட்டேன். ராஜ் டி.வி. ஜெயா டி.வி. நிகழ்ச்சிகள் உட்பட எதிலும் பேச மாட்டேன் என்றீர்களாம் அன்வர்பாய் கூறினார். அது மாதிரி இந்தக் கடிதம் கண்டபின் ஒதுங்கிகிறேன் அப்படி இப்படி என்று பேசாமல் அல்லாஹ்வுக்காக தவ்ஹீது ஜமாஅத்தின் பலத்தை வலுப்படுத்த வாருங்கள்.
1995லிருந்து த.மு.மு.க.வளர்ச்சிக்கு எப்படி பம்பரமாக சுழன்றீர்கள். இந்த உலக நிர்ப்பந்த பணிக்கு எல்லோரையும் அணுசரித்து எல்லாவற்றையும் அணுசரித்து சுழன்றீர்கள். அது மாதிரி தவ்ஹீதுப் பணிக்கு தவ்ஹீது வாதிகளை அணுசரித்து சுழன்று இருக்கிறீர்களா?.
1995லிருந்து ஒவ்வொரு டிசம்பர் 6 க்கும் 1999ஜூலை த.மு.மு.க. மாநாட்டுக்கும் எவ்வளவு கஸ்டப்பட்டு பாடுபட்டுள்ளீர்கள். அதுமாதிரி தவ்ஹீது மாநாட்டுக்கு பாடுபட்டு இருக்கிறீர்களா?
தங்களது புதிய பாலிஸிப்படி இஜ்திமா என்று போடும் நிகழ்ச்சிகளில் தான் பெரும்பாலும் கலந்து கொள்கிறீர்கள். இஜ்திமா நடத்தும் ஊர்கள் வசூலிக்கும் பணத்தில் அல்லது மிச்சமாகும் பணத்தில் 25 சதவீதம் கூட்டமைப்புக்கு என்று கேட்கிறீர்களாம். கூட்டமைப்புககு ஏன் கொடுக்கணும், என்ன செய்தது என்ன செய்யப் போகிறது கேட்கிறார்கள்.
டி.வி.யில் வேறு தோன்றி கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் தவ்ஹீது பிரச்சாரப் பணிக்கு என்று கூறி உதவி கேட்கிறீர்கள். இவ்வளவு கால சர்வீஸில் எந்த கிராமத்தில் தலைமை சார்பில் செலவு செய்து நிகழ்சிகள் நடத்தப்பட்டது?
கல்விச் சங்கம், அது விலை கொடுத்து வாங்கிய தஃவா பணி, அது சேர்த்த சேர்த் திட்டம், தஃவா என்ற இரு பொருள் வார்த்தையை பயன்படுத்தி தாஇகள் என்ற போர்வையில் ஆதரவு மவுலவிகளுக்குச் சம்பளம் கொடுக்க ஏற்படுத்திய சதி திட்டம். இப்படி எல்லாவற்றிற்க்கும் யார் பின்னணி யாருடைய யோசனை என்று கல்விச் சங்க முன்னாள் பொறுப்பாளர்கள் கூறினார்கள். என்பன போன்ற பிரச்சனைகளை எல்லாம் விரிவாக எழுதிட விரும்பவில்லை.
வ்ஹீதின் பெயரால் போதும் பிரிவுகள். இத்தகுல்லாஹ். அனைத்தையும் ஓரணியில் திரட்டுங்கள் அதற்காக புது அமைப்பு தேவையில்லை. ஆரம்ப காலத்தில் உருவாக்கினோமே அதுதான் தக்குவா உடையது. அந்த பெயரில் ஒன்றினைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நாங்களெல்லாம் சீரோக்கள். நீங்கள்தான் ஹீரோ. 1 முதல் 9 வரையிலான ஏதாவது ஒரு எண்ணின் பின்னால் சென்றால்தான் சீரோக்களுக்கு மதிப்பு. 1முதல் 9வரையிலான எண் மாதிரி நீங்கள். அரசியல் வாதி புகழ்ச்சி மாதி இருக்கே என்று எண்ணாதீர்கள். அவர்கள் சுய நலனுக்காக புகழ மட்டுமே செய்வார்கள். நான் விமர்சித்துக் கொண்டுதான் உண்மை நிலையை உங்களுக்கு எத்தி வைக்கிறேன்.
சினிமா கவர்ச்சி எனும் ஈர்ப்பு சக்தி எம்.ஜி.ஆர் இடம் இருந்தது. அதன் மூலம் மக்களை ஈர்க்க முடிந்தது. கருணாநிதி இடம் இது மாதிரி ஈர்ப்பு சக்தி இருக்கவில்லை. அதனால் மக்கள் கூட்டம் இருக்கவில்லை. எம்.ஜி.ஆர்.க்கு எதிரான மக்களைத்தான் கருணாநிதியால் ஈர்க்க முடிந்தது. மக்களை ஈர்த்தல் என்பது எல்லோராலும் முடியாது. ஒரு சிலருக்குத்தான் அல்லாஹ் இந்த தகுதியைக் கொடுக்கிறான்.
குர்ஆன் ஹதீஸ் உடையவர்களை ஈர்க்கும் ஆற்றலை அல்லாஹ் உங்களுக்கு வழங்கி உள்ளான். குர்ஆன் ஹதீஸுடையவர்கள் உங்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டார்கள். உங்கள் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பில் நீங்கள் உள்ளீர்கள்.
உங்களைப் பற்றி ஒரு மவுலவி கூறினார். பி.ஜே. ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை ஒரு விலை என்பார் பி.ஜே.க்குரிய விலையை பாக்கர் கொடுத்து விட்டார். அதனால்தான் பாக்கரின் இயக்கத்தில் பி.ஜே. இருப்பதுபோல் பி.ஜே. பேசி முடித்த பின் இயக்கம் பாக்கர் என ஒவ்வொரு கேஸட்களிலும் போட்டு விடுவதை ஜீரணித்துக் கொண்டிருக்கிறார் என்று.
யாரைத்தான் விமர்சித்து எழுதவில்லை என்ற தங்களின் கேள்விக்கு இன்னொரு பதில் விளக்கத்தையும் அறியத் தருகிறேன். தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரப் பணியில் ஈடுப்பட்டுள்ள தாஇகளைப் பற்றியும் உங்களைப் பற்றியும் விமர்சனம் என்பது தவ்ஹீது வட்டத்தில் 1987ல் இருந்தே இருந்து வருகிறது. விமர்சிப்பவர்களின் தலைவராக அன்றும் ஒரு மவுலவிதான் இருந்தார் என்பதும், அன்றிலிருந்தே பதில் கூறி வருபவன் நான்தான் என்பதும், அதே நேரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதி கேட்பவனும் நான்தான் என்பதும் உங்களுக்கு தெரியும்.
மனிதன் என்றால் குறை இருக்கத்தான் செய்யும் பிரச்சாரகர்களும் மனிதர்கள்தான். பிரச்சாராகர்களின் குறை பொதுமக்களுக்கு தெரிந்தால் அவர்களின் பிரச்சாரம் எடுபடாது. எனவே பொது மக்களிடம் குறைகள் செல்லாமல் இருக்க தடுப்பாக இருந்து. ஏதாவது விமர்சனம் வந்தால் அது மாதிரியெல்லாம் இல்லை என்று மறுத்து வந்திருக்கிறேன். அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கோ, சம்பந்தப்பட்டவர்களின் நிர்வாகத் தலைமைக்கோ வந்துள்ள விமர்சனத்தை எழுதி இருக்கிறேன். அதே மாதிரிதான் கூட்டமைக்கும் எழுதினேன்.
எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையில் ஜாக்குக்கு நான் எழுதிய விமர்சனங்களுக்கெல்லாம் எஸ்.கே. பதில் விளக்கம் தந்து இருக்கிறார். கூட்டமைப்பில் மேல்மட்ட குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பாளருக்கு எழுதிய விமர்சன கடிதத்திற்கு பதில் இல்லை. பதில் போடக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்ப்டுள்ளது.
எங்கே பரஸ்பரம், எங்கே நான் என்ற அனாநிய்யத்து, எங்கே ஜனநாயகம், எங்கே அடிமைத்தனம். விரிவாகவும் விளக்கமாகவும் சான்றுகளுடனும் எழுத முடியும். எதையும் எழுதாதீர்கள் என்று சொன்னார்கள். ஏற்கனவே தவ்ஹீது ஜமாஅத் பலபிரிவுகளை கண்டு பலஹீனப்பட்டு விட்டது. எனவே இனி ஒரு பிரிவு வரவேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
நாம் இனி ஒரு பிரிவு காண எழுதவில்லை பிரிந்து கிடப்பதை ஒன்று சேர்க்கவே எழுதி உள்ளோம். உமர் அவர்களின் தவறை ஒரு பெண் சுட்டிக் காட்டிய போது நான் அமீர் என்று உமர் கூறவில்லை... என்று பிறருக்கு எடுத்துக் கூறிய தாங்கள் உமர்(ரலி) அவர்களைப் போல் நடந்து கொள்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
இனி பொதுக்கூட்டங்களிலோ மாநாடுகளிளோ கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்தீர்கள். பிறகு மாநாடுகளில் கலந்து கொள்வேன் என்று மறு அறிவிப்பு செய்தீர்கள். பிறகு பொதுக்கூட்டங்களுக்கு ஒப்புக் கொண்ட நீங்கள் மாநாடு - இஜ்திமா என்று போட்டுக் கொள்ளக் கூறினீர்கள்.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு சனிக்கிழமை நல்ல நாள் இல்லை என்று நம்பினால். அவர்கள் மட்டும் அந்த தினத்தை வெள்ளிக்கிழமை என்றோ ஞாயிற்றுக்கிழமை என்றோ கூறிக் கொள்வார்களாம். அதுபோல் இருந்தாலும் ஏன் செய்கிறார்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கி உள்ள ஆற்றலை பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கம்தான்.
இதே நோக்கத்தில்தான் 1994க்கு பிறகு தங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை அணுசரித்தோம். இன்று நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி தவ்ஹீத் ஜமாத்திற்கு வலிமை சேர்ப்பது அதற்குத் தேவை தவ்ஹீத் ஜமாத்களின் ஒற்றுமை. ஒற்மைக்காக இறங்கி வந்த பலர் உங்களை சந்திக்க முடியாமல் திரும்பிவிட்டனர். நம்மில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி குராபிகளிடம் பேசுவதைவிட, தவ்ஹீது வட்டத்தை ஒரு தலைமைக்கு கொண்டு வருவதில் உள்ள ஈருலக நன்மைகளைப் பற்றி சொல்லத் தேவை இல்லை.
எஸ்.கே. தலைவராக இருக்கக்கூடாது என்ற விதாண்டாவாதத்தை விட்டு விடுங்கள். நீங்கள்தான் பொறுப்பு ஏற்க மாட்டீர்கள் ஏற்றிப்பவரை ஏன் நீக்க வேண்டும். நீங்கள் எஸ்.கேன் தலைமையை எதிர்த்து ஜாக்கிலிருந்து வெளிவரவில்லை என்பதை இங்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.வஸ்ஸலாம்.
அன்புடன் கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி
நீங்கள் வேதத்தையும் ஓதிக்கொண்டே (மற்ற) மனிதர்களை நன்னை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன்.2:44
Comments