Posts

Showing posts from 1988

உருவப்படங்கள்,டி.வி. வீடியோக்கள் பற்றி இஸ்லாம்.

யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும்வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான் (அதாவது வேதனை செய்து கொண்டே இருப்பான்) - நபிமொழி. அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்:-புகாரி, திர்மிதி, நஸயி https://mdfazlulilahi.blogspot.com/1988/09/blog-post.html உருவப்படங்கள் வரையும் வேலையை இனியும் எவரேனும் செய்தால் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை அவர் மறுக்கிறார். - நபிமொழி. அறிவிப்பவர்:- அலி (ரலி) நூல்:-அஹ்மத். 1. உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் இஸ்லாத்தில் தடை உள்ளதால் குழந்தைகளுக்கு உருவ விளையட்டுப் பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது ஹராமா? 2. உருவப்படங்கள் இருக்கும் இடத்தில் மலக்குகள் வர மாட்டார்கள் என்றால் கரன்ஸிகளில் உருவப்படம் உள்ளதே: அதை வைத்துக் கொண்டு தொழலாமா? 3. உருவப்படங்களைக் காட்டும் டி.வி. வீடியோக்களை வீட்டில் வைக்கலாமா? அதில் வரும் காட்சிகளைப் பார்க்கலாமா? 4. சினிமாவை ஹராம் என்று கூற நேரடியான ஹதீஸ் ஆயத்துகள் உண்டா? 5. ஆடியோ, வீடியோக் (சி.டி.கேஸட்) கடை நடத்தலாமா? இவைகளை நடத்த நம் ...

I.A.C.யின் பொருளாளராக பி.ஜெ. இருந்தார்.

Image
வெளிநாட்டு நிறுவனமான துபை I.A.C.யின் கிளை மதுரையை தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. பி.ஜெ. அதில் பொருளாளராக இருந்தார்.
ஆடை அலங்காரம். ஆண்களின் ஆடைகள்,கமீஸ் (சட்டை&ஜூப்பா), ஆடையில் பெருமை,'ஜூப்பா',கைலிகள், வேஷ;டிகள்,ஸிர்வால் (கால்சட்டைகள்),தரித்திரக்கோலம் 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்பது பழமொழி.மனிதனின் அந்தஸ்த்தை ஆடையை வைத்தே உலகம் மதிப்பிடுகிறது. ஒருவனிடம் கல்வியும், செல்வமும் ஏராளமாக இருந்தாலும், அவனது ஆடை தரம் குறைந்ததாக இருந்தால் உலக மக்களால் சாதாரணமாகவே கருதப்படுகிறான். ஆடையைப் பொறுத்து இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதை இந்தக் கட்டுரையில் நாம் காணலாம். இஸ்லாம் ஆடை விஷயத்தில் ஆண்களுக்குச் சில கட்டுப்பாடுகளையும், பெண்களுக்கு வேறு சில கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றது. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. முதலில் ஆண்களுக்கான ஆடையை நாம் பார்ப்போம். ஆண்களின் ஆடைகள். ஆடையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில விதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களின் ஆடைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விரிவாக நாம் முதலில் ஆராய்வோம். அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள். ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்...

ஹதீஸ்களின் பெயரால்.

1.ஸஹாபாக்களின் சிறப்புக்கள் இன்று தமிழகத்தில் ஹதீஸ் என்ற பெயரில் நபி(ஸல்)அவர்கள் சொல்லாத பல ஹதீஸ்களை அவர்கள் சொன்னதாக மவ்லவிகளில் பலர் ஜூம்ஆ மேடைகளிலும்,பொதுக்கூட்டங்களிலும் சொல்லி இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்படுத்தி வருவதைக் காண்கிறோம். இவ்வாறு தவறாக பரப்பப்பட்டுவரும் ஹதீஸ்களை(?) தக்க சான்றுகளோடு இத்தொடரில் சமுதாய மக்களுக்கு தெளிவுபடுத்துவோம், இன்ஷhஅல்லாஹ். நாங்கள் சொல்வது சரியில்லை எனக்காண்கின்ற ஆலிம்கள் தங்கள் வாதத்தைத் தெளிவான ஆதாரங்களோடு எழுதுவார்களானால் அதை எங்கள் பத்திரிக்கையில் வெளியிடுவோம். (ஆ-ர்) நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)அவர்களின் உம்மத்துகளில், ஸஹாபாக்களின் தனிச்சிறப்பை எவருமே மறக்க முடியாது. நபி(ஸல்)அவர்களோடு வாழ்ந்து அவர்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் மதிப்பை இந்த உம்மத்தில் உந்ந இமாம்களும், அவ்லியாக்களும் அடைய முடியாது. காலமெல்லாம் இறை வழிபாட்டில் செலவு செய்தாலும் ஒரு ஸஹாபியின் அந்தஸ்த்தை எவருமே பெற முடியாது. இது ஷpயாக்களைத் தவிர இந்த உம்மத்துகள் அனைவரும் ஏகோபித்து ஒப்புக்கொண்ட பேருண்மையாகும். நபி(ஸல்)அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இந்த உண்மை...

குறுக்கு விசாரணை

தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் ஒரு விசித்திரமான நிலை நீண்ட காலமாக நிலை பெற்றுள்ளது. அந்த நிலை மாறி விடுமானால் இந்த சமுதாயத்தில் ஊடுருவிவிட்ட ஏராளமான தீமைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும். மாக்கம் என்ற பெயரால் யாராவது ஏதாவது கூறிவிட்டால், அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்ற அலட்சிய மனப்பான்மையையே நாம் குறிப்பிடுகிறோம். 'கால் கிலோ கத்தரிக்காய்' வாங்குவதற்காக எடுத்துக் கொள்ளும் அக்கரைக்கூட மார்க்க விஷயங்களில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். நாலணாவுக்கு நல்லெண்ணெய் வாங்குவதற்குக்கூட எவ்வளவு பரிசீலனை! எத்தனைக் கேள்விகள்! தில் பத்தில் ஒரு பங்கை மார்க்க விஷயத்தில் பயன்படுத்தியிருந்தால் கூட பல நூறு தீமைகள் ஒழிந்திருக்குமே! 'என்னிடமே கேள்வி கேட்கிறாயா? என்னையே விமர்சனம் செய்கிறாயா? நான் சொல்வதற்கு உனக்கு ஆதாரம் வேறு சொல்ல வேண்டுமா?' என்ற ஆணவப்போக்குடன் பெரும்பாலான முல்லாக்கள் நடந்து கொண்டதோடு மக்களையும் அப்படியே நம்பவைத்துமிட்டார்கள். போலி முல்லாக்கள் தங்கள் சுயலாபம் கருதி இதைச் செய்கிறார்கள் என்றால், மக்களாவது தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர வேண்டாமா? ஏனோ அவர்களில் பலர் உணர்ந்தத...

சத்திய முழக்கம் (மூன்றாம் பகுதி)

குமரி மாவட்டம் கோட்டாரில் 18-7-86, 19-7-86 ஆகிய இரு தினங்கள் 'முனாழரா' என்னும் விவாத அரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்ததை தமிழ் கூறும் முஸ்லிம்களில் அநேகர் அறிவர். தவ்ஹீத் அணிக்கும், பரேலவி அணிக்கும் இடையே இந்த விவாதம் நடந்தது. தவ்ஹீத் அணியின் சார்பில் (1) கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, (2) மவ்லவி. அப்துல் ஹமீது ஆமீர் (3) மவ்லவி. எஸ்.கமாலுத்தீன் மதனீ (4) மவ்லவி. எம்.அப்துல் ஜலீல் மதனீ (5) மவ்லவி.பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் பங்கேற்றனர். பரேலவி அணியின் சார்பில் 1)எ.எல்.எம்.பத்ருத்தீன் ஆலிம் 2)சாஹிப்தம்பி ஆலிம், 3)எ.பி.அபூபக்கர் முஸ்லியார் 4)முஹ்யித்தீன் குட்டி முஸ்லியார், 5)பக்ருத்தீன் முஸ்லியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொது மக்களும் விவாதத்தைக் கேட்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விவாதத்துக்கு மூன்று தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 1)வஸீலா, 2)தொழுகைக்குப்பின் துஆக்கள், 3)ஈஸால் ஸவாப் இம்மூன்று தலைப்புகளில் விவாதம் நடந்தேறியது. ஒவ்வொரு அணியிணருக்கும் முதலில் அரை மணி நேரம், அடுத்து அரை மணி நேரம், இறுதியாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு அணியினரும் இரண்டு மண...

தொழுகையின் வழிகாட்டி

ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின், அவன் செய்ய வேண்டிய கடமைகளில் தொழுகை முதலிடம் பெறுகின்றது. அல்லாஹ், தன் திருமறையில் மிக அதிகமான இடங்களில் தொழுகை பற்றியே வலியுறுத்துகிறான். தொழுகையை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் தொழுகையை விடுவதால் ஏற்படும் அவலங்களையும் நபி(ஸல்) அவர்கள் மிக அதிக அளவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'வேண்டுமென்றே தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான்' (அஹ்மது, திர்மிதி) என்ற அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் கடும் எச்சரிக்கை செய்துள்ளனர். அல்லாஹ்வின் கிருபையால், தொழுகையை அடியோடு புறக்கணித்தவர்கள், இன்று தொழுகையை கடைபிடிக்கக்கூடிய நல்ல நிலை தோன்றி இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். தொழுகையை சிரத்தையுடன் நிறைவேற்றி வரும் நல்லவர்கள் தொழுகின்ற சரியான முறையை அறிந்தவர்களாக இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தொழுகையை நிறைவேற்றுவதைய நாம் காண முடிகின்றது. அல்லாஹ்வுக்காக-அவனது திருப்தியை பெறுவதற்காகத்தான் நாம் தொழுகிறோம், நமது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்தத் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி அமைய வேண்டும். நாமாக, நமது இஷ்டத்திற்கு விதம்வித...
மாற்றாரின் பார்வையில் இஸ்லாம். இன்றைய உலகில் 'மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்' என்று பறைசாற்றக்கூடிய பல்வேறு மதங்கள், இயக்கங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் 'தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துகொள்கின்றனர். தங்கள் மதத்தை பிரச்சாரமும் செய்கின்றனர். எனினும் சிந்தனையாளர்கள், மற்ற மதங்களை விட இஸ்லாம் சிறந்து விளங்குவதை ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர். 'இஸ்லாம்' வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித்தரும் மதமாக இல்லாமல், மனித வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் கவனிக்கிறது! அதில் தலையிடுகிறது! தக்க தீர்வையும் சொல்கிறது. அன்றிலிருந்து இன்று வரை மனிதக்கரங்களால் மாசுப்படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது என்றெல்லாம், இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள், இஸ்லாத்தில் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள். அதன் காரணமாக இஸ்லாத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இஸ்லாத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், 'குர்ஆன் கூ...

'அல்ஜன்னத்' உங்களைத் தேடி வந்துவிட்டது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் எனக்கூறி (அதன் மீதே) உறுதியாக நிலைத்து நிற்கிறார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து, 'நீங்கள் பயப்படாதீர்கள், கவலை கொள்ளாதீர் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள், நாங்கள் உலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாய் இருந்தோம், மறுமையிலும் ஜன்னத்தில் உங்கள் உள்ளம் விரும்புவதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக (ஜன்னத்தில்) தங்குங்கள்!' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30-32) 'அல்லாஹ்தான் எங்கள் இறைவன்! அவனுக்கே அஞ்சுவோம். நபி(ஸல்) அவர்கள் படைப்பினங்களில் மிகச்சிறந்தவர்களாக எங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியாக திகழுகிறார்கள்' என்ற உறுதியை உள்ளத்தில் ஏந்தி, அதிலேயே ஊன்றி நின்று எவரெல்லாம் செயல்பட்டார்களோ அவர்கள் அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட ஜன்னத்தைக் கண்டு களிப்பேரு வகை கொள்வார்கள். மறை கூறும் இந்த மறுமையின் ஜன்னத்துக்கு நம்மையெல்லாம் வாரிசுகளாக வார்த்தெடுப்பதற்கெனவே இங்கு 'அல் ஜன்னத்...