மம்தா வீடியோ மாதிரிதான் பீ.ஜே. மீதான குற்றச்சாட்டுக்களுமா? மம்தா வைரல் வீடியோ உண்மையா
புனித குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பு வைத்துக் கொண்டு பரப்பப்பட்ட பொய்கள் ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல? எதிரிகளுக்கு எதிரான செய்தி என்று எண்ணி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்க தயாராகி விட்டீர்களா? மக்கமா நகரில் உள்ள புனித மஸ்ஜிதிதா ன கஃபத்துல்லாஹ் வுக்கு போக விடாமல் தடுத்தவர்களை விடவா மாபாவிகள் உலகில் உள்ளார்கள்? அப்படி தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது கூட , அவர்கள்மீது நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டி விட வேண்டாம் என்கிறான் அல்லாஹ். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக நடந்து உண்மை க்கு சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் , நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால் , நிச்சயமாக அல்லாஹ் நீதி மா ன்களை யே நேசிக்கின்றான். https://mdfazlulilahi.blogspot.com/2019/05/blog-post_30.html எவ்வளவு பெரிய எதிரிகளாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுங்கள் என்பது அல்லாஹ் திரும்பத் திரும்ப திரு குர்ஆனில...