இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.
இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து. நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம். யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்க...