SDPI முஸ்லிம் சமுதாய கட்சி அல்ல

2014-05-15 14:12 GMT+04:00 jahangeer hussain <jahangeerh328@gmail.com>:
SDPI சமுதாய கட்சியா? அனைத்து சமுதாய கட்சியா?

இது போன்ற கேள்வியை அவ்வப்போது விவாதமாக்குவதும்,சமுதாய கட்சி என்றால் பொங்கல்,கிருஸ்துமஸ்,தீபாவளி போன்ற பிற மதத்தவரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர் வைப்பது ஏன்?

அனைத்து சமுதாய கட்சி என்றால் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக அங்கம் வகிப்பது சரியா?

என்றெல்லாம் கேள்வி கேட்டு தங்களை மெத்த படித்த மேதாவிகளைப்போல் காண்பிக்க துடிக்கும் சில அறியா சகோதரர்களுக்கு எனது இந்த விளக்கம் தெளிவை கொடுக்கும் என நினைக்கிறேன்.

SDPI என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமான பொதுவான தேசிய அரசியல் கட்சியாகும்.

இந்த கட்சியில் முஸ்லிம்,இந்து,கிருஸ்தவர் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் உறுப்பினர்களாகவும்,பொறுப்பாளர்களாகவும் இருந்து வருவதே அதற்கு சாட்சியாகும்.

அந்தந்த மக்களின் பண்டிகை காலங்களின் போது அவரவர் சார்ந்துள்ள சமூக மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதென்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும்.

இதன் அடிப்படையில் தான் SDPI கட்சியில் இருக்கும் பிற சமுதாய மக்களும் பண்டிகை காலங்களில் வாழ்த்துக்கள் கூறி கொள்கின்றனர்.

அந்த வாழ்த்துக்களை, தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் பேனர்களாகவும் வைத்து வருகின்றனர்.

அப்படியானால் முஸ்லிம் கட்சி என்ற பெயரில் 24 அமைப்புகள் கொண்ட கூட்டமைப்பில் ஏன் இணைந்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் விடை தருகிறேன்.

எந்த சமுதாயம் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆட்படுகிறதோ? அந்த சமுதாய மக்களின் பிரச்சினைக்கு ஆதரவாக களமிறங்கும் ஒரு போராட்ட அரசியல் பேரியக்கமே SDPI ஆகும்.

24 இயக்கங்கள் கொண்ட கூட்டமைப்பு என்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்தெந்த வழியிலெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ? அப்போதெல்லாம் ஒருங்கிணைந்து செயல்படக்கூடியதே.

இந்த 24 முஸ்லிம் கூட்டமைப்பும் சமுதாய பிரச்சினை தவிர்த்து தேர்தல் உள்ளிட்ட பிற விசயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

விஸ்வரூபம் சினிமா,முகம்மது நபியை பற்றிய அமெரிக்கனின் திரைப்படம் உள்ளிட்ட விசயங்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்த இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினை என்று வரும் போது SDPI களத்தில் நிற்கிறது.

கூடங்குளம் அணு உலை என்பது  மீனவ சமுதாயத்தின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் கூடங்குளம் போராட்ட குழுவில் SDPI கட்சியும் ஒரு அங்கமாக இணைந்து போராடுகிறது. 

பரமக்குடி துப்பாக்கி சூடு,தர்மபுரி தீ வைப்பு சம்பவம் உள்ளிட்டவை தலித் சமுதாய மக்களின் பிரச்சினை என்பதால் அவர்களின் போராட்ட குழுவில் SDPI கட்சியும் இணைந்து போராடியது.

மொத்தத்தில் அனைத்து சமுதாயத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்ட பேரியக்கமே SDPI ஆகும்.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்திய தேசம் முழுவதும் பரந்து கிடக்கும் அரசியல் எழுச்சி இயக்கமாகும்.

அஞ்சுவதும்,அடி பணிவதும் படைத்தவனுக்கே என்ற கொள்கை போராளிகள் மட்டுமே சங்கமிக்கும் இயக்கம் என்பதால் பசியிலிருந்தும் விடுதலை,பயத்திலிருந்தும் விடுதலை என்ற கோசத்தை முன்னிறுத்தி போர்க்களம் காணும் கட்சியாகவே தமது பயணத்தை தொடர்கிறது.

என்னருமை மக்களே உங்களையும் அழைக்கிறேன் SDPI கட்சியில் இணையுங்கள்.ஒன்று படுவோம்,உயர்வு பெறுவோம்!

சமுதாய நலன் விரும்பும்
கீழை ஜஹாங்கீர் அரூஸி
 
_._,_.___

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு