ஸூரத்துந் நாஸ் நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா?
மொழி பெயா்ப்புகள். 1926இல் மொழி பெயா்த்த தாவூத்ஷா முதல் எல்லாருமே நாஸ் என்ற அத்தியாயத்தின் தலைப்புக்கு மனிதர்கள் என்றே மொழி பெயா்த்துள்ளார்கள் . 1984க்குப் பிறகு மொழி பெயா்த்த (P.J. யின் அண்ணன்) P.S. அலாவுதீன் அவா்கள் மக்கள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். மொழி பெயா்ப்புகள் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறையில் இருக்கும் மொழி வழக்கின் அடிப்படையில்தான் இருக்கும். அவற்றை குா்ஆன் மொழி பெயா்ப்புகளிலும் காணுகிறோம். உதாரணத்திற்கு இந்த அந்நாஸ் அத்தியாய மொழி பெயா்ப்புகளில் இடம் பெற்றுள்ள மனிதர்கள், மக்கள், ஜனங்கள் மற்றும் அதிபதி, அரசன், மன்னன் என்ற வார்த்தைகளைக் கூறலாம். இது போன்ற வார்த்தைகளால் பாதகங்கள் இல்லை. எல்லாமே ஒரே பொருளை தரக் கூடியவைகள்தான். இந்த அத்தியாயத்தின் 5ஆவது வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸுதுார் என்ற வார்த்தைக்கு நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில், உள்ளங்களில் என்று 3 வித மொழி பெயா்ப்புகள் உள்ளன. இவை ஒரே பொருளை தரக் கூடியவைகள் அல்ல. எண்ணுவது, ...