இதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

ஐம்பதாயிரம் பேர் கூட அடங்காத தீவுத்திடலில்

15 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தி, மயிரிழையில் கின்னஸ் விருதை தவறவிட்ட அண்ணன் ஜமாஅத், அடுத்த நாள் காட்சியாக பிரதமரையும்-காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்தித்தது. அதையொட்டி அவர்கள் வெளியிட்ட செய்தியில்,
சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.
அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.

மேற்கண்ட செய்தி வெளியிடப்பட்டது 06-07-2010 செய்தி வெளியிட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து விட்டது. ஆனால் 'எத்தனை சதவிகிதம்' என்று சோனியா இன்னும் விவாதித்துக் கொண்டே இருக்கிறார். அண்ணன் விவாதத்தில் ஒரு முடிவே இருக்காதே., அதுபோல சோனியா விவாதமும் நீண்டு கொண்டே செல்கிறது.  சரி., இப்ப இதை சொல்றதுக்கு என்ன காரணம்னா, அண்ணன் ஜமாஅத் மத்திய இடஒதுக்கீடு சம்மந்தமா ஒரு ஜோக்கடித்துள்ளது. அதை பார்ப்பதற்கு முன்னால் அண்ணன் ஜமாஅத் ஜோக்கடிப்பதற்கு அடிப்படை காரணமாக அமைந்த செய்தியை படித்து விடுங்கள்.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"ஆந்திர அரசு பாணியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்காக மாதிரி திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எனது அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு அறிவிக்கை மூலமாக இந்த மாதிரி திட்டம் வெளியிடப்படும். இதுதொடர்பான சட்டத்திலும் தேவையான திருத்தங்களைச் செய்வோம் என்றார். அவர் மேலும் கூறுகையில், எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது என்பதை முடிவு செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பல்வேறு கூறுகள் ஆராயப்பட வேண்டியிருப்பதால், இதற்கான பணிகளை தொடங்க சற்று காலதாமதம் ஆகலாம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேற்கண்ட அமைச்சரின் பேட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்த பணி இனிமேல்தான் தொடங்க உள்ளது என்றும், எத்தனை சதவிகிதம் என்பதை இனிமேல்தான்  புள்ளிவிவரங்கள் மூலம் சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது  என்பதையும் தெளிவாக்குறது. ஆனால் மாநாடு முடிந்தவுடன் அண்ணன் ஜமாஅத் நடத்திய சந்திப்பு நாடகத்தில், இடஒதுக்கீட்டின்  பணிகள் எல்லாம் முடிந்து விட்டது போலவும், பத்து சதவிகிதமா? இருபது சதவிகிதமா? என்றுதான் சோனியா யோசித்து நெற்றியை தேய்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னதும் அண்ணன் ஜமாத்தின் வழக்கமான எக்கச்சக்க 'பிட்டு' என்பது விளங்குகிறதல்லவா?  சரி.,,இது போனா போகுது. ஆனா அமைச்சரின் மேற்கண்ட பேட்டியை வைத்து அண்ணன் ஜமாஅத் அடித்துள்ள ஜோக்கை இப்ப படிங்க.
ததஜ தான் லட்சக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் கோரிக்கை மாநாட்டை சென்னை தீவுத்திடலில் நடத்தியது. அதன் பின்னர் பிரதமரையும்-சோனியாவையும் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தவும் செய்தது. நிச்சயம் இட ஒதுக்கீடு அளிப்போம் என்று பிரதமர் ததஜ நிர்வாகிகளிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்கட்ட நடவடிக்கையாகவே பார்வையாளர்கள் இதைக் கருதுகிறார்கள்.உணர்வு செப்டம்பர் 30அக்டோபர் 6


இதைத்தான் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்களோ?
நன்றிhttp://iyakkangal.blogspot.ae/2011/10/blog-post_3097.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.