அண்ணனின் சொத்து மதிப்பு (50௦ லட்சமாக)உயர்ந்து விட்டதா? - அப்துல் முஹைமின்
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
கேள்வி; எனது பூர்வீக வீட்டைத்தவிர என் பெயரிலும், மனைவி மக்கள் பெயரிலும் உள்ள சொத்துக்களை 50௦ லட்சம் தந்துவிட்டு யாரும் வாங்கிக்கொள்ளலாம் என்று
-மன்சூர்அஹ்மது, நீடாமங்களம்.
பதில்; அண்ணனின் சொத்து எவ்வளவு என்பதை பற்றி நாம் எப்போதும் கண்டுகொண்டதில்லை. காரணம் அவரது சொத்து குறித்து அவர் அல்லாஹ்விடம் பதில் சொல்லலப் போகிறார் என்பதுதான். அதே நேரத்தில் அண்ணன் இஸ்மாயில் சலபிக்கு பதிலளிக்கும்போது,
''நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.
எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன். எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள் சிறு வீடு கட்டினேன்.
வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.
மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன். என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார்.இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்...' என்று கூறியிருந்தார்.அதாவது அவரது பூர்வீக வீடும், ஒரு வயலும், மதுரையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத ஒரு இடத்தையும் தவிர வேறு சொத்துக்கள் இருந்தால் இஸ்மாயில் சலபியோ, வேறு யாருமோ இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
அண்ணனின் இந்த வெளிப்படையான டீலிங் நமக்கு ரெம்ப புடிச்சிருந்துச்சு. திடீர்னு ஒரு ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில், ஐம்பது லட்சம் தந்தால் அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்றார். இப்போது என்னன்னா என்னோட பூர்வீக வீட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் ஐம்பது லட்சத்துக்கு தர்றேன் என்கிறார். முதல்ல இலவசமாக எடுத்துக்கிரலாம் என்று நெஞ்சை நிமித்தி சொன்னவர், பின்னாடி விலை வைக்கவேண்டிய அவசியம் என்ன? அண்ணின் பூர்வீக வீட்டைத்தவிர, ஒரு வயலும், மதுரையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத ஒரு இடமும் ஐம்பது லட்சம் மதிப்புள்ளதாகி விட்டதா? அண்ணன் மட்டுமே அறிந்த ரகசியம்.
இப்ப அண்ணின் பினாமி ஓடிவந்து, 'அண்ணன் கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டாருன்னு விமர்சனம் பண்றவங்க வாயடைக்கத்தான், ஐம்பது லட்சம் குடுத்துட்டு எடுத்துக்கோன்னு அண்ணன் ஒரு பேச்சுக்கு சொன்னாரு. அண்ணன்கிட்ட ஐம்பது லட்சரூவா சொத்தெல்லாம் இல்ல'ன்னு சொல்லும்.
நீங்க கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டீங்கலாமே என்று கேள்வி கேட்டால் பொய்யனின் பினாமி சொல்வது சரி. ஆனா உணர்வுல வந்த கேள்வி; டி.என்.டி.ஜே. மூலம்தான் நீங்கள் செல்வ நிலையை அடைந்தீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்களே? இதற்கு பதில் என்ன?என்பதுதான். இதுல கோடி-லட்சம் என்றெல்லாம் இல்லை. பிறகு எதுக்கு அண்ணன் கோடியை மனசுல வச்சுக்கிட்டு பதில் சொல்லணும்? எது எப்பிடியோ இலவசமா எடுத்துக்கோன்னு தைரியமா சொன்ன அண்ணன் இப்ப லகரங்களை விலை பேசுறாரு. எப்படியோ நல்லா இருக்கட்டும்.
http://iyakkangal.blogspot.ae/2011/09/blog-post_9553.html
Comments