பகைமை பாராட்டி திரிவது முஸ்லிம்களின் பண்பல்ல. சைத்தான்களின் குணம்.
யார் உண்மையை விளங்காமல் அப்பாவித்தனமாக அநியாயத்துக்கு துணை நிற்கிறார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ மன்னிப்பாயாக.
பொய்யர்களையும் பொய் சாட்சி சொன்னவர்களையும் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதியவர்களையும் சுயநலமிக்க அயோக்கியர்களையும் மோசடியாளர்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு இயக்க வெறியில் சார்புத் தன்மையுடன் வேண்டுமென்றே காழப்புணர்சியுடன் அநியாயத்துக்கு துணை நிற்கிறார்களோ அவர்களில் ஒருவரைக் கூட யாஅல்லாஹ் நீ விட்டு வைக்காதே.
யார் தனது சுய நலத்துக்காகவும் வரட்டுக் கவுரவத்திற்காகவும் பிறர் மீது இட்டுக் கட்டி அபாண்டமாக பழி சுமத்தினார்களோ, சமுதாய நிறுவனங்களில் அமைப்புகளில் பிரச்சனைகளையும் பிரிவுகளையும் ஏற்படுத்தினார்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக. இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டு பதில் எழுதுகிறேன்.
Thopputhurai Noordeen முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் சம்பந்தமாக எழுதி இருந்தார். காதர் மைதீன் அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை போடும் காட்சி என்று களவாடிய பத்திரிக்கையில் போட்டோ போட்டு செய்தி வெளியிட்டார்கள். அந்தபோட்டோவைப் பார்த்து எல்லாரும் மதி மயங்கி நின்றார்களே தவிர அதில் மாலை போடுவது காதர் மைதீன் அல்ல என்பதை உணரவில்லை. நான்தான் மாலை போடுவது காதர் மைதீன்அல்ல என்பதை உணர வைத்து மறுப்பு வெளியிட்டேன்.
mohammed ali முஹம்மது அலி அவர்களே நீங்கள் புரியாமல் எழுதி இருந்தால் அல்லாஹ் உங்களை மன்னிப்பான். நீங்கள் முஹம்மது அலிதான் என்று பைசல் வார்த்தையில் எழுத ரொம்ப நேரம் ஆகாது. உங்கள் எழுத்து அப்படித்தான் உள்ளது. உங்கள் கூற்றுகளுக்கு முன்பே பதில் எழுதி விட்டேன். குழும விதி மீறல் என்று அவர்கள் வெளியிடவில்லை. அந்த பதில் உங்களுக்கு வந்திருக்கிறது. கைர் நீங்கள் காழ்ப்புணர்வுடன் எழுதி இருந்தால் மேலே உள்ள துஆ உங்களுக்கும் பொருந்தும்.
நமக்கு எது தவறு என தெரிகிறதோ அதை விமர்சித்து பிரசுரங்கள் வெளியிடத்தான் செய்தோம். அது வீண் குழப்பம் என்றால் இன்று குழுமத்தில் செய்யப்படும் விமர்சனங்களும் உங்கள் கண்ணோட்டப்படி வீண் குழப்பம் என்றே ஆகும்.
அனைத்து கதவுகளையும் தட்டி என்றும் மு.லீக் கூட்டத்தில் முன் வரிசையில் என்றும் எழுதி இருக்கிறீர்கள். முஸ்லிம் லீக்கில் மீண்டும் சேருங்கள் என்று மு.லீக்கில் இருந்த அப்துல்ரவூப், சி.எம்.என். சலீம், வரிசை கனி, குத்புத்தீன் ஐபக் என பலர் வலிய வந்து அழைத்தார்கள்.இப்பொழுது கூட தேர்தலுக்குப் பிறகு தாயகத்திலிருந்து புறப்படு முன் சந்தித்த மு.லீக். நகர செயலாளர் ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர் நீங்கள் மீண்டும் மு.லீக்குக்கு வாருங்கள் என்று வற்புறுத்தி அழைத்தார்.
எந்த இயக்கத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் மாநில தலைமையிலிருந்து சாதாரண உறுப்பினர் வரை யாராக இருந்தாலும் மனசாட்சிப்படி உண்மையை பேச முடியாது. குறிப்பாக தங்கள் இயக்கத்துக்கு எதிரான உண்மைகளை கூறவே முடியாது. தனிப்பட்ட முறையில் உங்களிடம் நியாயம் இருக்கிறது. என்ன செய்வது நான் மாநில பொறுப்பில் இருக்கிறேன். மாவட்ட பொறுப்பில் இருக்கிறேன். நான் உறுப்பினராக இருக்கிறேன் அதனால் எதுவும் பேச முடியவில்லை என்பார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு இயக்கத்துக்கு எதிராக உண்மையை உளரிவிட்டால் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள். உண்மையை உரத்துச் சொன்னால் நீக்கப்பட்டு விடுவார்கள். அதனால்தான் எந்த ஒரு விசயத்திலும் அவரவர் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாகவே இருப்பார்கள். அவரவர்களுக்கு பாதிப்பு என்று வரும்பொழுதுதான் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதத்தை கூறுவார்கள். முந்தைய அநீதங்களையும் பட்டியலிடுவார்கள். இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நடக்கும். அது அதற்கான மகாத்தான கூலியை அவரவர்கள் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்கள்.
இவற்றை தெளிவாக அறிந்துள்ள நான் எந்த அமைப்பிலும் போய் சேர எந்த முயற்சியும் செய்யவில்லை. பலர் வந்து என் கதவைத்தான் தட்டி இருக்கிறார்கள் இதுதான் உண்மை. இதை அறியாமல் நீங்கள் எழுதி இருந்தால் அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக.
'அவருடைய நோட்டீஸை நீங்கள் மலம் துடைக்க பயன்படுத்துங்கள்' என்று ஜவாஹிருல்லாஹ் சொன்னார். என்று எழுதி இருந்தீர்கள். அதனால் நான் அவருக்கு விரோதமாக காழப்புணர்வுடன் செயல்பட வேண்டுமா?
நான் த.மு.மு.க.வில் செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் மு.லீக் தலைவராக இருந்த அ.கா.அ.அப்துஸ்ஸமதுஸாஹிப் அவர்கள் துபை வந்தபொழுதெல்லாம் போய் சந்ததித்திருக்கிறேன். நேரிலேய விமர்சனங்கள் செய்து பேசி இருக்கிறேன். விருந்தளித்திருக்கிறேன் இதை இன்றைய துபை தலைவரும் அறிவார்.
ஒரு முறை தாவூத் பாட்சா உணவகத்தில் மு.லீக் நிகழ்ச்சி முடிந்த பின் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது பற்றி எனக்குத் தெரியாது. அதே தினத்தில் நான் விருந்துக்கு அழைத்திருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் மைதீன் மதனி அவர்களுடன் பைசலுக்கு வந்து நான் அளித்த விருந்தில் கலந்து கொண்டார்கள் அ.கா.அ.அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் .
கடந்து ஆண்டு துபை வந்த மு.லீக். தலைவர் காதர் மைதீன் அவர்களை நேரில் சந்திக்க முடியாத நிலையில் போனில் நலம் விசாரித்து பேசினேன். ஒருவர் நம்மை விமர்சனம் செய்து விட்டார் என்பதால் காலமெல்லாம் பகைமை பாராட்டி திரிவது முஸ்லிம்களின் பண்பல்ல. சைத்தான்களின் குணம்.
ஒரு முஃமின் இன்னொரு முஃமினுடன் 3 நாளுக்கு மேல் பகைத்திருப்பது நபி வழியல்ல. சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தித் திரியும் நாரதர்களின் வழி அது. மற்றவர்களின் விமர்சனங்களுக்கும் பதில் எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்
நன்றி TMB
Comments