த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்] அவருக்கு வயது 78 ஆகும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.


அக்டோபர் 18 அன்று காலை சென்னை அமைந்தக்கரை பள்ளிவாச­ல் ஜனாசா தொழுகை நடைபெற்று பிறகு அங்குள்ள அடக்கத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறைவன் அன்னாருக்கு மறுமையின் நற்பேறுகளை அளப்பரிய அளவில் வழங்க பிராரத்தனைச் செய்வோமாக.
நன்றி; தமுமுக வலைத்தளம்

இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர் ஆவார். 1977லிருந்து அந்நஜாத் மாத இதழில் பல தொடர் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
நெல்லை சமுதாய நலச் சங்க துணைத் தலைவராக இருந்தபொழுது அரும்பணியாற்றி நெல்லையில் பல வக்பு நிலங்களை மீட்டார்.

ஏகத்துவ பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பும் எதிர்ப்புகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க பொதுவான ஒரு அமைப்பு ஏற்படுத்த 1992ஆண்டு கும்பகோணத்தில் மாநிலம் தழுவிய ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அபுஅப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி, பி.ஜெய்னுல் ஆபிதீன், மைதீன் உலவி, நமது சார்பில் ஆர்.எஸ். முஹம்மது காஜா, சிபகதுல்லாஹ் என பலர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்ட ரீதியான நடவடிக்கைக்கு பெயரளவில் ஒரு அமைப்பு என வைத்து விட்டு ஒரு பிரச்சாரகர் சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்படுவதை அறிந்ததும் ஒதுங்கிக் கொண்டார். த.மு.மு.க. புணர்நிர்மானம் செய்யப்பட்டதும் த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர் ஆனார்.

இன்ஜினியர் அப்துஸ்ஸமது அவர்கள் இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவை தலைவராக இருந்தபொழுது பி.ஜெ, அபு அப்துல்லாஹ், இக்பால் மதனி இடையே ஒற்றுமை ஏற்படுத்த இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவைக்கு எழுதப்பட்ட கடிதம் காண

http://mdfazlulilahi.blogspot.com/1993/08/blog-post.html

http://mdfazlulilahi.blogspot.com/search?updated-min=1993-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=1994-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=7
அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை கொடுப்பானாக

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு