உயிரை பறித்த பள்ளி தாளாளரின் பேராசை.
நெல்லை டவுணை சேர்ந்தவர் சாகுல் அமீது. சிறியதாக நகைக்கடை நடத்தி வந்ததோடு த.மு.மு.க-வின் நெல்லை நகர பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அன்பான மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் பேரிடியாக, ஒருநாள் மதிய வேளையில் இவருடைய மூத்த மகன் முகம்மது ஆசிக் (8) 3-ம் வகுப்பு படித்து கொண்;டிருந்த லிட்டில் பிளவர் பள்ளியிலிருந்து ஒரு தொலைபேசி வந்தது. 'உங்கள் மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்' என கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குமுறும் நெஞ்சத்தை கட்டுப்படுத்தியபடி பள்ளிக்கு விரைந்த சாகுல் தம்பதியினர், பின்பு பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு காண கிடைத்தது அந்;த பாலகனின் உடல் மட்டுமே.
செய்தி கேள்விபட்டு அங்கு குழுமிய த.மு.மு.க-வினருக்கு கிடைத்த செய்தி, பள்ளியின் சார்பாக நீச்சல் பயிற்சி என அனைத்து மாணவர்களும் கட்டாயபடுத்தப்பட்டு ரூ.300 பெற்று கொண்டு, சுமார் 35 மாணவர்கள் ஒரு வேனில் பத்து தினங்கள் முன்பே பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஒரு ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன். அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள அரசு நீச்சல் பயிற்சி கூடத்தில் பயிற்சிக்கென சேர்க்கப்படுகின்றனர்.
மாணவர்கள் அனைவரும் மார்பளவு தண்ணீரில் இறக்கி விட்டுவிட்டு, பயிற்சியாளர்கள் புகைபிடிக்கவும், அலைபேசியில் பேசவும் என அவ்விடத்தை விட்டு அகன்று விட்டனர். மாணவன் ஆசிக் அந்த குளத்தில் வழுக்கி விழ, மாணவர்களின் கூக்குரலை கேட்டு பயிற்சியாளர்கள் வந்து பார்த்த போது ஆசிக்கின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது.
அன்றைய தினம் சனிக்கிழமை மாலை நேரம் ஆகிவிட்டதால் போஸ்ட்மார்டம் மறுநாளே செய்யப்படும் என்று கூற, த.மு.மு.க மாவட்ட நிர்வாகிகள் உயர் அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி உடனடியாக பிண பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே ஏராளமான த.மு.மு.க தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அன்று இரவு கூடிய அப்பகுதி கான்மியான் ஐமாத் இப்பிரச்சனையில் த.மு.மு.க எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.
மரணச் செய்தி பத்திரிக்கைகள் மற்றும் த.மு.மு.க-வின் கண்டன சுவரொட்டிகள் வாயிலாக தெரிந்து கொண்ட மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் சாரை சாரையாக ஐனாஸாவை பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் பள்ளியின் தாளாளர் பற்றிய ஏராளமான புகார்களை கூறி இதை உங்களை தவிர யாரும் தட்டி கேட்க இயலாது என்றும் த.மு.மு.க நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். ஆனால் காவல்துறை எங்கிருந்தோ வந்த நிர்பந்தத்தால் பள்ளி நிர்வாகத்தை வழக்கில் சேர்க்காமல் நீச்சல்குள பயிற்சியாளர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக திருப்தி அடைந்தனர்.
ஐனாஸா அடக்கம் முடிந்ததும், ஐமாத்தார்கள் அனைவரும் த.மு.மு.க-வினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் பொதுமக்கள் அதிகமாக பங்கு கொண்டதை அறிந்த மாவட்ட ஆட்சி தலைவர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் எதை பற்றியும் கவலைபடாத பள்ளி தாளாளர் தன்னுடைய பணபலத்தால், உள்ளுர் ஊடகங்கள சிலவற்றை மவுனமாக்கியதை போல், இவ்வழக்கையும் நீர்த்து போக செய்திட முனைந்துள்ளார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தி;த்து ஆறுதல் கூறிய த.மு.மு.க தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா மற்றும் துணை பொதுசெயலாளர் J.S.ரிபாயி ஆகியோர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளியின் தாளாளர் மரிய சூசையின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை த.மு.மு.க ஒயாது.
Comments