காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்ற இந்த ஆயத்து.

நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு.

இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.

இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) என்பதை ஆதாரமாகக் காட்டி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் இன்று அந்த கருத்தில் இல்லை. இருந்தாலும் இன்றும் சிலர் அந்த கருத்தில் இருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடியவர்களிடமிருந்து இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. இதை நாம் நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த ஒரு வசனமே போதுமான ஆதாரம்தான்.

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இது நமது முந்தைய வெளியீடு. அந்த வெளியீட்டில் நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அல் குர்ஆன் 5:42ஆவது வசனத்தை ஆதாரமாகக் காட்டி இருந்தோம். இது போதுமான ஆதாரமாக இல்லை என்று சிலர் கருத்து கூறி உள்ளனர். இது அவர்களுடைய கருத்து. அந்த ஒரு வசனமே போதுமான ஆதாரம்தான். இருந்தாலும் இன்னும் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள வசனங்களை இந்த வெளியீட்டில் காண்போம் இன்ஷhஅல்லாஹ்.

இதே அத்தியாயத்தில் மூன்று இடத்தில் வருகிறது.

இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன? இஸ்லாமிய ஆட்சி என்பது எப்படி இருக்க வேண்டும். ஒரு இஸ்லாமியன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது உட்பட அனைத்துக்கும் முன் மாதிரி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான். அந்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவை ஆட்சி செய்தபொழுது எந்த மாதிரி சட்டங்களை அமுல்படுத்தினார்கள். இஸ்லாமிய சட்டங்களை திணித்தார்களா? விரும்பி வந்தவர்களுக்கு எந்த முறையில் தீர்ப்பளித்தார்கள் என்பதில் ஒரு பகுதியைப் முன்பு பார்த்தோம். அதன் தொடரை இப்பொழுது பார்ப்போம். வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் (யார்) என்பது பற்றிய வசனம் இதே அத்தியாயத்தில் மூன்று இடத்தில் வருகிறது.

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். அல் குர்ஆன் 5:44

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் ழாளிமூன் எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! அல் குர்ஆன் 5:45

வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் பாஸிகூன். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். அல் குர்ஆன் 5:47


காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள் என மூன்று விதமாக குறிப்பிட்டுள்ளான்.

யூதர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.

தவ்ராத் வேதத்தின் சில பகுதிகளை உமர்(ரலி) அவர்கள் படித்துக் காட்டியபோது, ரஸுல்(ஸல்) அவர்கள் கோபமடைந்து, 'மூஸா(அலை) அவர்கள் உயிருடன் தற்போது தோன்றினால் (அவர்கள் கூட) என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்:-அஹ்மது, பைஹகீ, தாரிமீ. இந்த ஹதீஸை அனைவரும் அறிவோம். இப்படிச் சொன்ன இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் யூதர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான் என்பதைப் பாருங்கள்.

நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி அருளினோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டதாலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். (அல்குர்ஆன் 5:44.)

அவர்களுக்கு நாம் அதில், (தவ்ராத்தில்)''உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்குச் சமமான காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதியாக்கினோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! அல் குர்ஆன் 5:45

சட்ட சலுகை எதுவும் இல்லை என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களுக்கு தவ்ராத்திலிருந்து தீர்ப்பு அளிப்பதை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். அவர்களிடம் இஸ்லாமிய சட்டத்தை திணிக்கக் கூறவில்லை. ''உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் என்பது இஸ்லாமிய சட்டமும் கூட. அதனால்தான் அந்த சட்டம் இடம் பெற்றிருந்த தவ்ராத்தின்படி யூதர்களுக்கு தீர்ப்பு வழங்க கூறி உள்ளான். இதில் தனியார் (சிவில்) சட்ட சலுகை எதுவும் இல்லை என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு.

இதற்கும் பதில் அளிக்கும் விதமாக அடுத்தடுத்த வசனங்கள் உள்ளன. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களது அதாவது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும்படி அல்லாஹ் கூறுகிறான் என்பதைப் பாருங்கள். தெளிவான விளக்கம் கிடைக்கும்.

இன்ஜீலுக்குரியவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். அல் குர்ஆன் 5:47

எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்கள் மதப்படி நடந்து கொள்ள எந்த தடையும் போடவில்லை.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த கிறிஸ்தர்களுக்கு இன்ஜீலிpலிருந்து தீர்ப்பு அளிப்பதையும் அல்லாஹ் அங்கீகரித்துள்ளான். அவர்களிடமும் இஸ்லாமிய சட்டத்தை திணிக்கக் கூறவில்லை. முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் எந்த மதத்தவராக இருந்தாலும்; அவர்கள் மதப்படி நடந்து கொள்ள எந்த தடையும் போடவில்லை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்கள் மதப்படிதான் வாழ்ந்தார்கள். அவர்கள் மதப்படிதான் வணக்க வழிபாடுகள் செய்தார்கள்.

இவையெல்லாம் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள ஆதாரங்களாகும்.

மதீனா ஹரம் எல்கையாக அறிவிக்கப்படும் முன் வந்த நஜ்ரான் நாட்டு கிறிஸ்தவ பாதிரிகள் மஸ்ஜிதுன்நபவியில்தான் தங்க இருந்தார்கள். மஸ்ஜிதுன்நபவியிலேயேதான் அவர்களது வணக்க வழிபாடுகளை செய்தார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம். அல்லாஹ்வால் அங்கீகரிக்கபட்ட மார்க்கம் இஸ்லாம்தான். அந்த சாந்தி மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பது கிடையாது. இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டங்கள் என்பதற்கு இவையெல்லாம் தெளிவாகவும் வலுவாகவும் உள்ள ஆதாரங்களாகும்.
அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்.

அல்குர்ஆன் 5:44 வசனத்தில் யூதர்களைப் பற்றி சொல்லி வந்த அல்லாஹ் முஸ்லிம்களை நோக்கி சொல்கிறான்.

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்.(அல்குர்ஆன் 5:44.)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநியாயக்காரர்கள் என்று யூதர்கள் விஷயத்திலும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் பாவிகள் என்று கிறிஸ்தவர்கள் விஷயத்திலும், அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் காபிர்கள் என்று முஸ்லிம்கள் விஷயத்திலும் கூறி உள்ளான்.

இந்திய தாகூத்திய சட்டங்கள் இதற்கு தடையாக இருக்கவில்லை.

முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் தீர்ப்பு வழங்க வேண்டும். மறுத்தால் காபிர்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்களிடமோ, ஊர் ஜமாஅத்களிடமோ அல்லது இன்றுள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்புகளிடமோ தலாக், மறுமணம், முதல் மனைவி இருக்க இரண்டாவது மூன்றாவது அல்லது நான்காவது திருமணம், பாகப்பிரிவினை, இப்படி ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த அடிப்படையில் தீர்ப்பு சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறார்கள். இந்திய தாகூத்திய சட்டங்கள் இதற்கு தடையாக இருக்கவில்லை.

இந்திய சோசலிஸப்படி தீர்ப்பு வேண்டும் என்று ஒரு முஸ்லிம் கேட்டால்.

இதே பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவிலுள்ள எந்த கோர்ட்டுக்கு போனாலும் இஸ்லாமிய அடிப்படையில்தான் தீர்ப்பு கிடைக்கும். அதற்கு முஹம்மடன் லா என்று எழுதி வைத்திருக்கிறார்கள். முஹம்மடன் லா படி அதாவது இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்பு வேண்டாம். இந்திய சோசலிஸப்படி தீர்ப்பு வேண்டும் என்று ஒரு முஸ்லிம் கேட்டால் அவன் காபிர். முஸ்லிமாக இருக்கக் கூடியவர்கள் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு