Posts

Showing posts from May, 2009

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம். இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து. நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம். யார் அல்லாஹ...

இறுதி வெற்றி யாருக்கு?

நம்பிக்கை உடையவர்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் ;  சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்!  ( எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள்.  அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள் மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள்   ( ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் ; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் ; ( இம்மையிலும் , மறுமையிலும்)   நீங்களே வெற்றியடைவீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2009/05/blog-post_16.html   ------------------------------------------------------------------------- . நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்  உங்களை விடுத்து (உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர)  மற்றவர்களை உற்ற நண்பர்களாக, (உங்கள் அந்தரங்க நண்பர்களாக) ஆக்கிக்  கொள்ளாதீர்கள்.   ஏனெனில் (பிறர்) உங்களுக...

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி யார் முன் மாதிரி.

யாருக்கு யார் முன் மாதிரி. இவர்கள் யாரை முன் மாதிரி என்கிறார்கள். அல்லாஹ்வின் சட்டங்களையே அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஆயத்துக்கள் அனைத்தும் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்த பின் செயல்படுத்துவதற்கே சான்றாக உள்ளன. அவற்றையும் அடுத்தடுத்து பார்ப்போம் என்று முந்தைய வெளியீட்டை முடித்து இருந்தோம். அதன் தொடருக்கு முன்னதாக இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறி;ந்தவன் பேணிக் காப்பவன் என்று( 12:55) கூறிய யூசுப் (அலை) அவர்களிடம் உள்ள அரசியல் முன் மாதிரிகளை நினைவு கூறுவது இன்றைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. தேர்தல் நேரமாக - சாதனை பிரச்சார நேரமாக இருப்பதால் மிக பொருத்தமானது. எனவே அதனை முதலில் பார்ப்போம். ரேஷன் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன் மாதிரி அரசியல்வாதி. ரேஷன் முறையை கொண்டு வந்தது காங்ரஸ் ஆட்சிதான். இல்லை திமு.க. ஆட்சிதான். இல்லை இல்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் ரேஷன் முறையை கொண்டு வந்தார்கள். இப்படி வயதுக்கு தக்கவாறு வாதிடக் கூடியவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு தேவைப்படும் பொருள்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டால் பஞ்சம், தட்டுப்பாடு வரும...

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ்

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும். இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள். இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது என்பதை முந்தைய வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தோம். இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்ற வார்த்தை இதே அத்தியாயத்தில் 67ஆவது வசனத்திலும் சூரத்துல் அஃராப் 57ஆவது வசனத்திலும் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்துடையவர்கள் அனைவருமே 12:40தையே ஆதாரமாக கூறுவார்கள். அதில்தான் அவர்களுடைய ஆய்வும் கருத்தும் தவறானது என்பதற்குரிய ஆதாரமும் உள்ளது. குர்ஆனில் ஒரு சில வசனங்களை அந்த ஒரு வசனத்தின் மூலமே முழுமையாக விளங்கலாம். ஒரு சில வசனங்களில் அந்த ஒரு வசனத்தின் ஒரு சிறு பகுதி பகுதியிலேயே முழுமையான விளக்கம் கிடைத்து விடும். பல வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே இருக்கும். குர்ஆனுக்கு விளக்கம் கு...

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவிடுபொடியாகிவிடும்.

சொத்தை வாதங்கள் மெத்தை போட்டு நடு வீட்டில் படுத்துக் கொள்ளும். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்று 1995ஆம் ஆண்டு எழுதிய அருட்செல்வன் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது தேர்தலில் போட்டியிடுவதால் அவர் இப்பொழுது அந்தக் கருத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டது. அருட்செல்வன் எழுதுவதற்கு முன்பே இந்த வாதம் வைக்கக் கூடியவர்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு என்ற வாதத்தை நிலை நாட்ட நீண்ட நெடுந் தொடர்களையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது வாதத்தின் மூலம் ஜனநாயகம் என்றாலே ஷpர்க். ஜனநாயகம் என்ற வார்த்தையே ஷpர்க். ஜனநாயகம் என்றாலே ஹராம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு முதல் காரணம் ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பது தெரியாததுதான். ஜனநாயகம் என்பதை ஒரு மந்திரச் சொல்லாகவே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஜனநாயகம் என்ற வட மொழி சொல்லுக்கு நமது தாய்மொழியான தமிழில் என்ன அர்த்தம் என்பதை தெரிய வைத்து விட்டால் அந்த மாயை தமிழ் ம...