காலம் தாழ்ந்தாலும் கடமை தவறாத முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும். அல்குர்ஆன் 7:128. ஆட்சி அதிகாரத்தை வழங்குபவன். அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26 தான் நாடியோருக்கு அல்லாஹ் (ஆட்சி) அதிகாரத்தை வழங்குவான். அல்குர்ஆன் 2:247. ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றாகும். இப்பூமியில் விரும்பிய இடத்தில் வசித்துக் கொள்ளும் வகையில் இவ்வாறே யூசுபுக்கு (ஆட்சி) அதிகாரம் அளித்தோம். நாம் நாடியோருக்கு நமது அருளை வழங்குவோம். நன்மை செய்தோரின் கூலியை வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 12:55. அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கிய...