"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை.
அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ {, நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் ---------- தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை. " உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. " ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் ப...